புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

புத்தம் புதிய சியாஸ் கார்களில் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சரி செய்து தருவதற்காக, அவற்றை திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

புதிய மாருதி சுஸுகி சியாஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களின் ஸ்பீடோமீட்டர்களில் (Speedometer) குறைபாடு இருப்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது கண்டறிந்துள்ளது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் செப்டம்பர் மாதம் 21 ஆகிய தேதிகளுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களில்தான் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 880 கார்களில் குறைபாடு உள்ளது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

எனவே அந்த 880 கார்களையும் திரும்ப பெற உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் ஸ்பீடோமீட்டர்களை மாற்றி தருவதற்கான சிறப்பு சர்வீஸ் முகாம்களை மாருதி சுஸுகி நிறுவன டீலர்கள் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதியே தொடங்கி விட்டனர்.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கென சிறப்பு இணைய தள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சியாஸ் டீசல் கார்களின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட் உரிமையாளர்கள், தங்களது கார்களில் குறைபாடு உள்ளதா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள இணைய தள பக்கத்தில் காரின் சேஸிஸ் நம்பரை என்டர் செய்வதன் மூலமாக இதற்கு விடை கிடைக்கும். அந்த இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டுமானால் இங்கே கிளிக் செய்யுங்கள்.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

இதில், குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டால், உடனடியான மாருதி சுஸுகி நிறுவன டீலர்களை அணுகி ஸ்பீடோமீட்டர்களை மாற்றி கொள்ளலாம். இதற்கான செலவு அனைத்தும் இலவசம்தான் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

ஸ்பீடோமீட்டர்களின் குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்னையும் வராது என்றும், இது சிறிய அளவிலான பிரச்னைதான் என்றும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும் அவற்றை உடனடியாக மாற்றி தந்துவிட மாருதி சுஸுகி நிறுவனம் முன்வந்துள்ளது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

புதிய 2018 மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிப்ட் கார், ரூ.8.19 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

புதிய மாருதி சுஸுகி சியாஸ் காரானது சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என 4 வேரியண்ட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

இதன் பெட்ரோல் வேரியண்ட்களில் ஆல் நியூ 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புத்தம் புதிய சியாஸ் கார்களை திடீரென திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி... காரணம் என்ன தெரியுமா?

அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களில் 1.3 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 88 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

புதிய மாருதி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
880 New Maruti Suzuki Ciaz Sedan Cars Recalled To Replace Speedometer. Read in Tamil
Story first published: Monday, November 12, 2018, 19:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X