கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

ADAS என்று சுருக்கி அழைக்கப்படும் ADVANCED DRIVER ASSISTANCE SYSTEM எனப்படும் தொழில்நுட்பம் வெகு விரைவில் இந்திய கார்களில் கட்டாயமாக்க படுகிறது.

ADAS என்று சுருக்கி அழைக்கப்படும் ADVANCED DRIVER ASSISTANCE SYSTEM எனப்படும் தொழில்நுட்பம் வெகு விரைவில் இந்திய கார்களில் கட்டாயமாக்க படுகிறது. இதனை நிதின் கட்கரி (இந்திய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ) உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

வருகின்ற 2022 முதல் வெளிவரும் கார்கள் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படும் என்றும், இதற்கு கனரக வாகனங்களும் விதிவிலக்கல்ல என்றது. ADAS என்பது பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஒருசேர்ந்த தொகுப்பாக குறிப்பிடப்படுகிறது.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

இதில், ELECTRONIC STABILITY CONTROL, TRACTION CONTROL, LANE ASSIST, ABS, ADAPTIVE CRUISE CONTROL உள்ளடங்கும். இத்துணை தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட வாகனம் முற்றிலும் விபத்துக்களை மற்ற கார்களை போல் அல்லாமல் தவிர்க்கும் என்பது அவர்களின் நோக்கம்.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

ADAS தொழில்நுட்பம் என்பது வாகனத்தின் பிரேக்குகளுடன் இணைந்துள்ளமையால் இது கண்டிப்பாக விபத்துகளை தவிர்க்கும். ஏனெனில் அதிகபட்சமாக வாகனம் விபத்துக்குள்ளாகும் காரணம் யாதெனில் அதிவேகத்தில் சீரற்ற பிரேக்குகள் தாம் என்கிறது ஆய்வு.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

என்னதான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டாலும் வாகனத்தின் பிரேக் திறன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது மறுக்கப்படமுடியாத உண்மை. ADAS பல மேம்பாடுகளை கொண்டுள்ளதால் கண்டிப்பாக விபத்துக்களை குறைக்கும்.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகள் இந்த தொழில்நுட்பத்தின் இன்றியமையாத பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளில் 2021 வர இருப்பதால், நம் அதற்கு ஈடு கொடுத்து விரைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டும்.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

தற்பொழுது பல தனியார் நிறுவனங்கள் தங்கள் கார்களில் டிரைவர் அஸ்ஸிடன்ஸ் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் வோல்வோ கார்கள் இதில் முக்கிய பங்கு வகித்து பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இந்த வாகனங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் இதே தொழில்நுட்பத்தை அனைத்து கார்களிலும் உட்புகுத்துவது விலையேற்றத்தை உருவாக்கும். ஆகவே சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

கண்ணை மறைக்கும் சாலையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் ஓட்டுனரின் மனப்பான்மைகள் போன்றவை சரிவர கவனித்து வருகிறது இந்த ADAS தொழில்நுட்பம். தானியங்கி பிரேக்குகள்(AUTOMATIC EMERGENCY BRAKING) தற்பொழுது அனைத்து கார்களிலும் உள்ளதால் இந்த தொழில்நுட்பங்கள் கட்டாயமில்லை என்பது குறிப்பிடப்படவேண்டியது.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

ABS என்பது வாகனம் நிற்கவும் வேகத்தை குறைக்கவும் வல்லது என்றால் பிரேக் அஸ்சிஸ்ட் ஓட்டுனரின் கால் அழுத்தத்தை கணக்கில் கொண்டு நொடிப்பொழுதில் தன்னால் இயன்ற முழு செயல் திறனையும் அளித்து உதவுகிறது.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

சரி பதற்றமான சூழ்நிலையில் ஓட்டுனரின் கால் அழுத்தத்தை கணித்தே இது இயங்குகிறது எனில் அவர் சரிவர அழுத்தம் தரவில்லை என்றால் எங்கள் கதை என்ன என்ற கேள்விக்கு விடையாக பிரேக் அஸ்சிஸ்ட் எப்போதும் தன்னுடைய முழுத்திறனையே அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

அதாவது டிரைவர் அதீத வேகத்தில் சென்று கொண்டு இருக்கையில் பிரேக் பெடல் சரிவர எழுதப்படவில்லை என்றாலும் பிரேக் அஸ்சிஸ்ட் தன் பொறுப்பில் இருந்து ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வீல்களை லாக் செய்யும் வரை விடாது தனது செயல் திறனை கொடுத்து நிறுத்தும் என்பதே.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

மொத்தத்தில் கண்டிப்பாக இந்த ADAS தொழில்நுட்பம் கார்களின் விபத்துகளை குறைக்கும் என்பது உறுதி. வருடத்திற்கு ஒன்றரை லட்சம் விபத்துகளை சந்தித்து வருகிறது இந்தியா. இது உலகபட்டியலில் முதலிடம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த ADAS தொழில்நுட்ப தலையீட்டிற்கு பின் கண்டிப்பாக விபத்து புள்ளிகள் முறையே குறைந்து வரும் என்பது நம்பிக்கை.

கார் முதல் டிரக் வரை.... வெளிநாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்!!

இந்த தொழில்நுட்பத்தை கார்களில் பொருத்துவது அதன் உற்பத்தி செலவு, வாகன விலை போன்றவற்றை கண்டிப்பாக உயர்த்தும். விலையை குறைக்க தற்பொழுது வரும் கார்களில் ABS மற்றும் ஏர் பேக்குகள் கூட தவிர்க்கப்படுகின்றன. ஆகவே நாம் விலையை விடுத்து பாதுகாப்பை கருத்தில் கொள்வோம்.

Most Read Articles
English summary
ADAS To Become Standard In Indian Cars: Minister of Road Transport and Highways of India, Nitin Gadkari, shared that the government is planning to make ADAS (Advanced Driver Assistance System) as a mandatory feature in upcoming cars. The ministry aims to implement the plan on all new vehicles (heavy-duty included) by early-2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X