மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

2013ம் ஆண்டு தயாரிக்கபப்டட மஹிந்திரா எஸ்யூவி500 டபிள்யூ8 காரில் விபத்தின் போது ஏர் பேக் வெளிவராததால் காரை ஓட்டியவில் அதிக காயங்களுடன் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் காரில் 6 ஏர் பேக்குகள் இர

By Balasubramanian

2013ம் ஆண்டு தயாரிக்கபப்டட மஹிந்திரா எஸ்யூவி500 டபிள்யூ8 காரில் விபத்தின் போது ஏர் பேக் வெளிவராததால் காரை ஓட்டியவில் அதிக காயங்களுடன் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் காரில் 6 ஏர் பேக்குகள் இருந்தும் அது விபத்தின் போது வெளியாததால் நடந்த விபரீதத்தை பற்றி கீழே உள்ள செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

2013ம் ஆண்டு மாடல் மஹிந்திரா எஸ்யூவி 500 டபிள்யூ8 கார் கடந்த மே மாதம் குர்கான் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. முகப்பு பகுதியில் பெரும்பகுதி பாதிப்பிற்குள்ளாகியது. ஆனால் இந்த விபத்தில் காரில் இருந்த ஏர் பேக் வெளியாகவில்லை.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

ஏர் பேக் வெளியாக தடையாக உள்ள சீட் கவர், பம்பர் கூட காரில் பொருத்தப்படவில்லை, அதே நேரத்தில்காரில் பயணம் செய்த எல்லோரும் சீட் பெல்டை போட்டிருந்தார்கள். இந்த விபத்தில் காரை ஓட்டியவருக்கு தலையில் பெரும் காயம் ஏற்பட்டது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

இந்த விபத்தின் படத்தை பார்த்த பலருக்கு இந்த காரில் உள்ள ஏர் பேக் ஏன் வேலைசெய்யவில்லை என் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்களில் ஏர் பேக் நிச்சயம் வெளியாகியிருக்க வேண்டும். ஏர்பேக் வெளியாகாதது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

இந்த விபத்து குறித்து எக்ஸ்யூவி 500 காரின் ஓனர் தற்போது ஏர் பேக் ஏன் வெளியாகவில்லை என்ற மூன்றாம் நபர் விசாரணை நடத்தி வருகிறார். அதில் வரும் முடிவுக்கு ஏற்ப அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

இது குறிந்து மஹிந்திரா நிறுவனம் சார்பில் தற்போது விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது,. அதில் கூறப்பட்டுள்ளதாவது : "எக்ஸ்யூவி 500 கார் கடந்த மே மாதம் குர்கானில் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து நாங்களும் கேள்விபட்டோம்.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

இதில் ஒருவர் பலத்த காயமடைந்தது குறித்து கவலைகொள்கிறோம். அவர் விரைவில் குணமடைந்து வர பிராத்தனை மேற்கொள்கிறோம். அவரின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் எவ்வாறான கடினமான சூழலில் இருப்பார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

பலர் சமூகவலைதளங்களில் இந்த விபத்தில் ஏன் ஏர் பேக் வெளியாகவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இந்த கார் பாதுகாப்பு இல்லாதது எனவும் விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தவுள்ளோம் இதற்காக விபத்தில் சிக்கிய காரை அவர்களிடம் கேட்டுள்ளோம். கார் வந்ததும் அதற்கான காரணம் கண்டறியப்படும். ஏதேனும் பிரச்னை இருந்தால் மற்ற கார்கள் ரீகால் செய்ப்பட்டு இலவசமாக சர்வீஸ் செய்யப்படும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை பொருத்தவரை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்கள் தான் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் உடன் இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட முதல் காராகும். இந்த கார் பல நேரங்களில் விபத்தில் சிக்கும் போது ஏர் பேக் வெளியாகி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளதாக வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்திற்கே தெரிவித்தாக கூறப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவி500 கார் விபத்தில் சிக்கிய போது ஏர்பேக் வெளியாகாததால் நடந்த சோகம்

மஹிந்திரா இந்த சம்பவத்தின் உள்ள பாதிப்பை பெரிதாக எடுத்துக்கொண்டு மஹிந்திரா நிறுவனம் மற்ற கார்களிலும் அந்த குறை இருந்தால் அதை உடனடியாக சீர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறு ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். என்பேத பெரும்பாலானோரின் கருத்து.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Image Courtesy: TeamBHP

Most Read Articles
English summary
XUV500 airbags do not open in crash; Mahindra responds. Read in Tamil
Story first published: Saturday, August 4, 2018, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X