புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் லீ மான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தய நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் லீ மான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தய நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக காணலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக உயரிய வகை கூபே கார் மாடலாக இது நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அதாவது, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காருக்கு மேலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 840 டீ எக்ஸ்-ட்ரைவ் என்ற டீசல் மாடலிலும், எம்850ஐ எக்ஸ்-ட்ரைவ் என்ற பெட்ரோல் மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

டீசல் மாடலில் இரட்டை டர்போசார்ஜர்கள் மற்றும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 320 எச்பி பவரையும், 680 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

பெட்ரோல் மாடலில் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் செயல்படும் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 530 எச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் துவக்க நிலையில், அதீத செயல்திறனை வெளிப்படுத்தும்போது கார் நிலைகுலைவதை தவிர்க்கும் விதத்தில், லான்ச் கன்ட்ரோல் வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்-ட்ரைவ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் தனித்துவமான ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களுக்கு தேவைப்படும் எஞ்சின் சக்தியை மிக சரியான விகிதத்தில் இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் செலுத்தும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தேவைப்படாத நிலையில், பின்சக்கரத்திற்கு டார்க் திறன் செலுத்தப்படும்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் 4,843மிமீ நீளமும், 1,902 மிமீ அகலமும், 1,341 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,822 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. எனவே, மிக தாராள இடவசதியை அளிக்கும் சொகுசு கார் மாடலாக இருக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் லேசர் ஹெட்லைட்டுகளும் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பிஎம்டபிள்யூ வழங்க இருக்கிறது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட புதிய சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, பெரிய ஏர் இன்டேக்குள் முகப்பை ஆக்கிரமித்துள்ளன. மிகச் சிறந்த ஏரோடைனமிக் தத்துவத்தை பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

உட்புறத்தில் மெரினோ லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், மெமரி வசதியுடன் இருக்கைகள், குறுகிய இடத்தில் எளிதாக திருப்பும் வசதியை அளிக்கும் ஆக்டிவ் ஸ்டீரயரிங் சிஸ்டம், பல்வேறு வசதிகளை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

இந்த காரில் 12.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. தவிர, 10.25 அங்குல திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு திரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடாப்டிவ் நேவிகேஷன் சிஸ்டம், 20 ஜிபி மெமரியுடன் கூடிய மல்டிமீடியா சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. அவசர காலத்திற்கான தானியங்கி பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஓட்டுனருக்கு காட்டும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வசதி, பார்க்கிங் சென்சார்கள், கார் கவிழ்வதை தவிர்க்கும் வசதி, ஏர்பேக்குகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உற்பத்தி செய்யப்படும் ஜெர்மனியின் டிங்கோல்ஃபிங் என்ற இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையில்தான் இந்த காரும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வரும் நவம்பர் மாதம் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
German luxury car manufacturer, BMW has unveiled the much-awaited 8 Series Coupe.
Story first published: Monday, June 18, 2018, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X