புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

மாருதி டிசையருக்கு மிக சவாலான விலையில் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

By Saravana Rajan

மாருதி டிசையருக்கு மிக சவாலான விலையில் புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். E,S,V மற்றும் VX என்ற வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் நிரந்தர அம்சமாக இருக்கின்றது. சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது S மற்றும் V ஆகிய நடுத்தர விலை வேரியண்ட்டுகளில் மட்டுமே ஆப்ஷனலாக கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் கார் நீளத்தில் 5 மிமீ வரையிலும், அகலத்தில் 15 மிமீ வரையிலும் கூடி இருக்கிறது. வீல் பேஸ் 65 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், பின் இருக்கை பயணிகள் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் உட்புற இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் சிறப்பான இடவசதியை அளிக்கும் மாடலாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் 87 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 98.6 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

முதல்முறையாக டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஹோண்டா கார் நிறுவனம் அமேஸ் காரில் அறிமுகப்படுத்துகிறது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் 80 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் V வேரியண்ட்டில் மட்டுமே பேடில் ஷிஃப்ட் வசதி இடம்பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் தரும். டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 27.4 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 23.8 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

உட்புறமும் முற்றிலும் புதிதாக மாறி இருக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

இந்த காரின் விலை உயர்ந்த மாடலில் ஹெட்லைட்டில் எல்இடி பொசிஷன் விளக்குகள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் உள்ளன. தானியங்கி முறையில் கேபினில் குளிர்ச்சியை தக்க வைக்கும் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் கார் செல்வதற்கான க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, எஞ்சினை எளிதாக ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 14 அங்குல சக்கரங்களுக்கு பதிலாக 15 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் தோற்றம் மிடுக்காவும், கம்பீரமாகவும் காட்டுவதற்கு வலு சேர்க்கும் விஷயம்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

உடைமைகளை வைப்பதற்கான பூட் ரூம் கொள்திறன் 20 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 420 லிட்டர் கொள்திறன் பூட் ரூம் இடவசதியுடன் வந்துள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் விலை குறைவான E வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பான விஷயம். விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் பிரேக் அசிஸ்ட், பார்க்கிங் கேமரா கொடுக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

இந்த கார் ரேடியண்ட் ரெட், ஆர்சிட் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல், கோல்டன் மெட்டாலிக் பிரவுன் மற்றும் லூனார் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். பெட்ரோல் சிவிடி மாடல் ரூ.7.39 லட்சத்திலும், டீசல் சிவிடி மாடல் ரூ.8.39 லட்சத்திலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!
Variant Petrol Diesel
E MT ₹5,59,900 ₹6,69,900
S MT ₹6,49,900 ₹7,59,900
V MT ₹7,09,900 ₹8,19,900
VX MT ₹7,57,900 ₹8,67,900
S CVT ₹7,39,900 ₹8,39,900
V CVT ₹7,99,900 ₹8,99,900
புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

ஹோண்டா அமேஸ் காருக்கு 3 ஆண்டுகள் வரை வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கு வழங்கப்படுவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

புதிய ஹோண்டா அமேஸ் காருக்கு நாடு முழுவதும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிலும் ஏற்கனவே முன்பதிவு துவங்கி விட்டது. முதலில் முன்பதிவு செய்யும் 20,000 வாடிக்கையாளர்கள் மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக விலையில் இந்த காரை வாங்க முடியும். அதன்பிறகு இந்த காரின் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

ஹோண்டா அமேஸ் கார் 2013ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே, மாருதி டிசையருக்கு அடுத்து சிறந்த தேர்வாக மாறியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் சமீபத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
English summary
All New Honda Amaze Launched In India: complete details
Story first published: Wednesday, May 16, 2018, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X