புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய மாருதி எர்டிகா கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சாதாரண அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் VXi AT மற்றும் ZXi ATஆகிய 2 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் LDi, VDi, ZDi, ZDi+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

பிளாட்ஃபார்ம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக உறுதியும், இலகு எடை கொண்ட உலோக கட்டுமானத்தின் மூலமாக, பழைய மாடலைவிட 10 முதல் 20 கிலோ வரை வேரியண்ட்டை பொறுத்து எடை குறைந்துள்ளது. ஆனால், பரிமாணத்தில் அதிகரித்துள்ளது. இந்த கார் 4,395 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

வீல் பேஸ்

ஆனால், வீல் பேஸ் பழைய மாடலைப் போலவே 2,740 மிமீ ஆகவே உள்ளது. புதிய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மிமீ குறைக்கப்பட்டு 180 மிமீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த 7 சீட்டர் காரின் இடவசதி மேம்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 209 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

டிசைன் அம்சங்கள்

வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய முக க்ரில் அமைப்பு, வலிமையான பாடி லைன்கள், 16 அங்குல அலாய் வீல்கள், பின்புறத்தில் புதிய எல்இடி விளக்குகளுடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய டிசைன் அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இன்டீரியர்

புதிய மாருதி எர்டிகா காரின் உட்புறம் இரட்டை வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் க்ரோம் மற்றும் மர தகடுகளுடன் அலங்கார வேலைபபாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

முக்கிய வசதிகள்

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, பின்புற விண்ட்ஷீல்டுக்கான வாஷர் மற்றும் வைப்பர் வசதிகள் உள்ளன. முன் வரிசையில் இரண்டு மொபைல்சார்ஜர்களும், இரண்டாவது மற்றும் வரிசை இருக்கைகளுக்கு தலா ஒரு 12V மொபைல் சார்ஜரும் உள்ளன.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இதர வசதிகள்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரூஃப் ரியர் ஏசி வென்ட்டுகள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, இரவு நேரத்தில் கண் கூச்சத்தை தராத உட்புற ரியர் வியூ மிரர், தானியங்கி முறையில் மடக்கிக் கொள்ளும் சைடு மிரர்கள், அதிவேகம் குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளிலும் சாய்மான வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

பாதுகாப்பு வதிகள்

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளது. ஆட்டோமேட்டிக் மாடலில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு ஃபங்ஷன் ஆகிய கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

டீசல் எஞ்சின்

டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும். டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் இல்லை.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

மைலேஜ்

பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 18.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 25.47 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. நடைமுறையிலும் இந்த கார் சிறப்பான மைலேஜை வழங்கும் என நம்பலாம்.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

வண்ணத் தேர்வுகள்

மெட்டாலிக் மேக்மா க்ரே, பியர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் சில்க்கி சில்வர் மற்றும் பியர்ல் மெட்டாலிக் ஆபர் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

விலை விபரம்

புதிய மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.7.44 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரையிலான விலையிலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகள் ரூ.9.18 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். டீசல் மாடல் ரூ.8.84 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். புதிய மாருதி எர்டிகா காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

போட்டியாளர்கள்

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுடன் போட்டி போடும். ஆரம்ப விலையை வைத்து பார்க்கும்போது மிக சவாலான விலையில் வந்துள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் மாடலுடன் ஒப்பிடும்போது பேஸ் வேரியண்ட் ரூ.1.10 லட்சம் வரையிலும், டாப் டீசல் வேரியண்ட் ரூ.3 லட்சம் வரையிலும் குறைவு. எனவே, வழக்கம்போல் மாருதி எர்டிகா கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
All New Maruti Ertiga MPV Car Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X