2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

2023ம் ஆண்டு ஆப்பிள் கார் விற்பனைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டெஸ்லா விற்கு போட்டியாக இந்த கார் மார்கெட்டில் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள வசதிகள்

By Balasubramanian

2023ம் ஆண்டு ஆப்பிள் கார் விற்பனைக்கு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டெஸ்லா விற்கு போட்டியாக இந்த கார் மார்கெட்டில் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள வசதிகள் அம்சங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

செல்போன் உலகில் பெரும் சரித்திரத்தையே படைத்து வரும் ஆப்பிள் நிறுவனம் குறித்து நாம் எல்லோரும் அறிந்ததே இந்த நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தை உயர் தரத்தில் தருவதில் பெயர்பெற்ற நிறுவனம். பலர் அந்நிறுவன தயாரிப்புகளை வைத்திருப்பதையே பெரும் கவுரவமாக பார்க்கிறார்கள்.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

இது ஒருபுறம் இருக்க ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை செய்துவரும் நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனம் தயாரித்த தானியங்கி கார் மற்ற ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களை கொலை நடுங்க வைத்துள்ளது.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

முதலில் இந்த கார் தயாரிக்கும் போது இது மார்கெட்டில் தோற்று போகும் என்று நினைத்தவர்கள் மூஞ்சியில் கரியை பூசியது டெஸ்லா.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

டெஸ்லா கார் மார்கெட்டில் பயங்கர ஹிட் மக்கள் போட்டி போட்டு கொண்டு கார்களை வாங்கி வருகின்றனர். இந்த கார்களின் தரம் செயல்பாடு, டிசைன் என எல்லாம் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

இந்நிலையில் டெஸ்லாவிற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த கார் எந்த மாதிரியாக இருக்கும்? என்னென்ன வசதிகள் இருக்கும் என எல்லாமும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

இது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. டெஸ்லா போல இதுவும் ஒரு தானியங்கி காராக இருக்கும் என்பது எல்லோருடைய எண்ணம். இது மட்டும் இல்லாமல் வேறு என்னென்ன வசதிகள் இருக்கிறது. பேட்டரியில் இயங்குகிறதா அல்லது வேறு ஏதேனும் எரிபொருளில் இயங்கிறதா என பலரும் கேள்விகளுடனே உள்ளனர்.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

ஆப்பிள் நிறுவனம் இந்த கார் குறித்த எந்த தகவலும் வெளியில் கசிந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் காரின் தயாரிப்பிற்காக 20 டிரில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

இது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தினர் கூறும் போது, ஆப்பிள் கார் வரும் 2023-2025 ம் ஆண்டிற்குள் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என கூறினர்.

2023ல் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் கார்; டெஸ்லாவிற்கு கடும் நெருக்கடி

தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தானியங்கி கார்கள் இயங்க அனுமதி உள்ளது. வரும் காலத்தில் மற்ற நாடுகளிலும் இதற்கான அனுமதி வந்தால் அந்நாட்டிற்கும் ஆப்பிள்ள கார்கள் விற்கப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Apple car may become reality in 2023. Read in Tamil
Story first published: Thursday, August 16, 2018, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X