இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. ரகசியமாக சோதனை செய்த படங்கள் முதல் முறையாக கசிந்தன

'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' காரின் வெள்ளை நிற வேரியண்ட் சோதனை செய்து பார்க்கப்பட்டபோது, முதல் முறையாக கேமரா கண்களில் தட்டுப்பட்டுள்ளது.

By Arun

'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' காரின் வெள்ளை நிற வேரியண்ட் சோதனை செய்து பார்க்கப்பட்டபோது, முதல் முறையாக கேமரா கண்களில் தட்டுப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

மிகவும் சவால் நிறைந்த நில பரப்புகளில் பணியாற்றி வரும் இந்திய ராணுவம், கடந்த 1991ம் ஆண்டு முதல் மாருதி ஜிப்ஸி கார்களை பயன்படுத்தி வருகிறது. எனினும் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, மாருதி ஜிப்ஸி கார்களுக்கு இந்திய ராணுவம் விடை கொடுக்க தொடங்கியுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

இந்திய ராணுவத்திற்கு புதிய கார்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம், டாடா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய ராணுவத்திற்கு என பிரத்யேகமான 'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' கார்களை டாடா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

டாடா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3,192 'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' கார்களை, இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்யவுள்ளது. நிஸ்ஸான், மஹிந்திரா நிறுவனங்களுடன் போட்டியிட்டு, இந்த ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' கார்களை, இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்யும் பணிகளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பே டாடா நிறுவனம் தொடங்கி விட்டது. தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள், இந்திய ராணுவத்திடம் வழங்கப்பட்டு விட்டன.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும், ராணுவத்திற்கே உரித்தான ஆர்மி க்ரீன் கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்திற்கு என டாடா நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ள சபாரி ஸ்டிரோம் கார்கள் அனைத்தையும் இன்று வரை பச்சை நிறத்தில் மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

இந்த சூழலில், 'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' கார்களின் வெள்ளை நிற வேரியண்ட் சோதனை செய்து பார்க்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் சோதனை செய்யும்போது, இந்த கார்கள் கேமரா கண்களில் சிக்கியுள்ளன.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

இந்திய ராணுவத்திற்கு என டாடா நிறுவனம் தயாரித்துள்ள சபாரி ஸ்டிரோம் வெள்ளை நிற கார்கள், கண்களில் தட்டுப்படுவது இதுவே முதல் முறை. ராணுவத்திற்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ள பச்சை நிற கார்களில் உள்ள அனைத்து ஆக்ஸஸரிஸ்கள், இந்த வெள்ளை நிற காரிலும் இருந்தன.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

வெள்ளை நிற கார்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எதற்காக வெள்ளை நிறம் பெயிண்ட் செய்யப்பட வேண்டும்? ஒரு வேளை நகர பகுதிகளில் ராணுவ உயரதிகாரிகள் பயன்பாட்டிற்காக இந்த கார்கள் வழங்கப்பட உள்ளதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

'இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி' காரில், 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 154 பிஎச்பி பவர் மற்றும் 1,700-2,700 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார், 4×4 டிரைவ் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது. 200 எம்எம் என்ற சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை, இந்திய ராணுவத்திற்கு ஏற்ற வகையில், இந்த காரை மாற்றுகின்றன. இதன்மூலம் எத்தகைய நிலப்பரப்பிலும் பயணிக்க முடியும்.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டு கொண்டதன் பேரில், டாடா சபாரி ஸ்டிரோம் ஆர்மி வெர்ஷன் காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்திய ராணுவத்திடம் மொத்தம் 30,000 மாருதி ஜிப்ஸி கார்கள் உள்ளன.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

இந்த சூழலில் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள டாடா சபாரி ஸ்டிரோம் ஆர்மி வெர்ஷன் கார்களை இந்திய ராணுவம் தற்போதுதான் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த கார் ராணுவத்திற்கு மிகவும் உகந்த வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. சோதனை செய்தபோது முதல் முறையாக கண்களில் தட்டுப்பட்டது

அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானால், அடுத்த சில ஆண்டுகளில், ஒட்டுமொத்த மாருதி ஜிப்ஸி கார்களுக்கு பதிலாக, டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்கள் ராணுவத்திற்கு வாங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

Image Courtesy: Shifting Gears

English summary
Army Version Tata Safari Storme White Colour Variant Spotted for the First Time. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X