லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ஆப்ட்ரா பிஎல்சி வென்றுள்ளது.

By Arun

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ஆப்ட்ரா பிஎல்சி வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் அசோக் லேலண்ட் லிமிடெட் (ALL). இதன் தலைமையகம், ஆசிய கண்டத்தின் டெட்ராய்டு என வர்ணிக்கப்படும் தமிழக தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தை, ஹிந்துஜா குரூப் நிர்வகித்து வருகிறது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

வணிக வாகன (commercial vehicle) உற்பத்தியில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய நிறுவனம் அசோக் லேலண்ட். உலக அளவில் அதிக அளவிலான பஸ்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் 4வது இடம் பிடித்துள்ளது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இதுதவிர டிரக்குகளையும் (trucks) அசோக் லேலண்ட் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான டிரக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் தற்போது 12வது இடத்தில் உள்ளது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின், துணை நிறுவனங்களுள் ஒன்று ஆப்ட்ரா பிஎல்சி. இது இங்கிலாந்து நாட்டின் பிரபலமான பஸ் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை அசோக் லேலண்ட் தன் கைவசம் வைத்துள்ளது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக, 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை வினியோகம் செய்வதற்கான புதிய ஆர்டரை, அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனமான ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனம் வென்றுள்ளது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் ( Transport for London-TfL) எனும் அரசு நிறுவனம்தான் இந்த ஆர்டரை ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. TfL என்பது ஓர் அரசு அமைப்பாகும். கிரேட்டர் லண்டனின் போக்குவரத்திற்கு, TfL நிறுவனமே முழு பொறுப்பு.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

டபுள் டக்கர் பஸ்கள் என்பது லண்டன் மாநகரின் அடையாளங்களில் ஒன்று. அவை அங்கு மதிப்புமிகுந்த ஒரு விஷயமாக கருதப்படுகின்றன. இந்த சூழலில்தான், இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனம், எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ''இது நாங்கள் மட்டும் பெருமை அடைந்து கொள்ள கூடிய விஷயம் அல்ல. நமது நாட்டிற்கே பெருமையான ஒரு தருணம் இது'' என்றார். எலக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்துள்ளது என்றே சொல்லலாம். இது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு நீண்ட கால அடிப்படையில் பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

இதனிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.

லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..

எனவே உலகின் பல்வேறு நாடுகளும் வெகு வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. பல்வேறு நாடுகளின் அரசுகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Ashok Leyland Subsidiary Optare PLC Received New Order from London. Read in Tamil
Story first published: Saturday, August 11, 2018, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X