நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க.. இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் செய்யலாமா? அல்லது லோக்கல் மெக்கானிக்கிடம் விடலாமா? என்பதில் கார் உரிமையாளர்களுக்கு குழப்பம் இருக்கும்.

By Arun

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் செய்யலாமா? அல்லது லோக்கல் மெக்கானிக்கிடம் விடலாமா? என்பதில் கார் உரிமையாளர்களுக்கு குழப்பம் இருக்கும். இருவரில் யார் பெஸ்ட்? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

பல லட்சம் செலவழித்து வாங்கப்பட்ட காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். ஆனால் காரை சர்வீஸ் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை தேர்ந்து எடுப்பதா? அல்லது லோக்கல் மெக்கானிக்கை தேர்வு செய்வதா? என்பதில் அனைத்து கார் உரிமையாளர்களுக்கும் குழப்பம் வரும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்பாக, தரம், செலவு, ஸ்பேர் பார்ட்ஸின் உண்மை தன்மை, தனிப்பட்ட முறையில் மெக்கானிக்களுடன் உள்ள உறவு முறை என பல விஷயங்களை அலசி ஆராய வேண்டியுள்ளது.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் ஆகட்டும் அல்லது லோக்கல் ஒர்க் ஷாப் ஆகட்டும். இரண்டிலுமே நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. காரை எங்கு சர்வீஸ் செய்வது? என்ற விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்பாக ஒரு சில விஷயங்களை யோசித்து செயலாற்றுவது நல்லது.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஏன் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை தேர்வு செய்ய வேண்டும்?

வாரண்டி: உங்கள் கார் வாரண்டிக்கு கீழாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குதான் செல்ல வேண்டும். இதில், குழப்பமே வேண்டாம். ஏனெனில் லோக்கல் மெக்கானிக்கிடம் காரை சர்வீசுக்கு விட்டால், எதிர்காலத்தில் வாரண்டி க்ளைம் செய்வதில் பிரச்னை வரும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

லேட்டஸ்ட் டெக்னாலஜியின் சவால்கள்

புதிய தலைமுறை கார்கள் அனைத்தும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் தயாரிக்கப்படுகின்றன. ECU, ப்யூயல் சிஸ்டம்ஸ், இக்னீஷன், என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்ஸ் என நவீன எலக்ட்ரானிக் சிஸ்டங்களுடன் அவை வருகின்றன.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

எனவே நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு சென்றால், தரமான சர்வீஸ் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஏனெனில் லோக்கல் மெக்கானிக்களுக்கு இந்த அட்வான்ஸ்டு சிஸ்டம் தொடர்பான புரிதல் போதிய அளவிற்கு இருக்காது.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ரீ சேல் அட்வான்டேஜ்

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு சென்றால், வெளிப்படையான சர்வீஸ் ஹிஸ்டரியை உருவாக்கி பராமரிக்க முடியும். காரை ரீ சேல் செய்யும்போது இது உதவும். குறிப்பாக பிரீமியம் கார்கள் என்றால், அவற்றை விற்பனை செய்யும்போது, பராமரிப்புக்கு ஏற்ற வகையில் நல்ல விலை கிடைக்கும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஆனால் 80,000 கிலோ மீட்டருக்கு, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்து விட்டு, அதன்பின் லோக்கல் ஒர்க் ஷாப்பில் விட்டால், எதிர்காலத்தில் காரை வாங்குபவரால், முழுமையான சர்வீஸ் ரெக்கார்டுகளை அறிந்து கொள்ள முடியாது.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

எனவே பிரீமியம் கார்களை கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும் என கார் உற்பத்தியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ரீ பெயிண்ட் மேட்ச் ஆகாது

டென்டிங், பெயிண்டிங் உள்ளிட்ட வேலைகளுக்காக லோக்கல் மெக்கானிக்கிடம் சென்றால், தரத்தில் சமரசம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. உதாரணத்திற்கு, உங்கள் கார் மெட்டாலிக் பெயிண்ட் என வைத்து கொள்வோம்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஒரு சில பகுதிகளுக்கு ரீ பெயிண்ட் செய்ய விரும்பி, லோக்கல் மெக்கானிக்கிடம் நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் அப்படி பெயிண்ட் செய்யப்படும் பகுதியின் கலர், காரின் எஞ்சிய பகுதி கலருடன் கண்டிப்பாக மேட்ச் ஆகாது. வித்தியாசம் தெரியும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஆனால் உங்கள் பகுதியில் ரீ பெயிண்ட் செய்வதில் புகழ் பெற்ற ஒர்க் ஷாப் இருக்கும்பட்சத்தில் அவர்களை தாராளமாக அணுகலாம். அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில், ரீ பெயிண்ட் பணிகளை மட்டும் அங்கு செய்து கொள்ளலாம்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

பர்ஸை பதம் பார்த்து விடுவார்களா?

அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள், பர்ஸை பதம் பார்த்து விடும் என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. மேஜராக ஏதேனும் பிரச்னை வராத வரை, வருடத்திற்கு ஒரு முறைதான் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு செல்ல வேண்டியிருக்கும். அங்கு சற்று செலவு அதிகம் என்றாலும், வேலை தரமாக இருக்கும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஏன் லோக்கல் மெக்கானிக்கை தேர்வு செய்ய வேண்டும்?

லேபர் சார்ஜ் குறைவு: பெரிய அளவில் பிரச்னை இல்லை. சின்ன பிரச்னைதான் என்றால், தயங்காமல் லோக்கல் மெக்கானிக்கிடம் செல்லலாம். இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தி கொள்ள முடியும். ஆனால் ஸ்பேர் பார்ட்ஸ், ஆயில் மற்றும் பில்டர்கள் ஒரிஜினல்தானா? என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

லேபர் சார்ஜ் குறைவு என்பதுதான் லோக்கல் மெக்கானிக்குகளிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ். ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ், ஆயில் பயன்படுத்தப்பட்டால், அதன் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் லேபர் சார்ஜ் என்பது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை விட குறைவாகதான் இருக்கும்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

பேஸிக் சர்வீஸ்களை செய்யலாம்

உங்கள் கார் வாரண்டிக்கு கீழ் இருந்தாலும் கூட, பேஸிக் சர்வீஸ்களை லோக்கல் மெக்கானிக்குகளிடம் தயங்காமல் செய்து கொள்ளலாம். அதாவது ஆயில் மாற்றுவது, பில்டர் மாற்றம் செய்வது போன்றவைதான் பேஸிக் சர்வீஸ் எனப்படுகின்றன. வாஸிங், பாலிஸிங் போன்றவற்றையும் அங்கேயே செய்யலாம்.

நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க... இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!

ஆனால் பெரிய அளவிலான பிரச்னை என்றால், நிச்சயமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குதான் செல்ல வேண்டும். எனவே காரை எங்கு சர்வீஸ் செய்வது? என முடிவு எடுக்கும் முன்பாக, மேற்கண்ட விஷயங்களை எல்லாம் நன்கு மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Authorised service centre or the local mechanic? Know what is better for your car. Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X