காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

டில்லியில் 1000 எலெக்ட்ரிக் பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லியில் நிலவும் அதிக காற்று மாசுவை கட்டுக்குள் கொண்டு வர அரசு இந்த முயற்சியை எடுத

By Balasubramanian

டில்லியில் 1000 எலெக்ட்ரிக் பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லியில் நிலவும் அதிக காற்று மாசுவை கட்டுக்குள் கொண்டு வர அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக ரூ2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

இந்தியாவிலேயே அதிக காற்று மாசு உள்ள நகரம் என்றால் கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் அது நமது தலைநகர் டில்லிதான் என்று ஆண்டுதோறும் டில்லியில் உள்ள காற்று மாசு குறித்து செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

இந்த மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. பெரும்பாலான மாசு வாகன போக்குவரத்தால் தான் ஏற்படுகிறது என்பதை அறிந்த அரசு ஒன்றைப்படை, இரட்டை படை எண்கள் என வாகனங்களை பிரித்து குறிப்பிட்ட நாளுக்கு ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்களும், குறிப்பிட்ட நாளுக்கு இரட்டைபடை எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே இயங்க அனுமதி அளிப்பட்டு சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

ஆனால் அதற்கும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டமும் கைவிடப்படுகிறது. ஆண்டுதோறும் அவ்வப்போது முக்கியமாக பணிகாலங்களில் கடுமையாக காற்று மாசு காரணமாக டில்லி மக்கள் கடும் அவதிக்குள்ளவாது வாடிக்கையாகி வருகிறது.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

தற்போது அரசு வாகனத்தை மாசு இல்லாத வாகனமாக மாற்ற அரசு முடிவு செய்து வருகிறது. டில்லியில் காற்றை மாசு படுத்தாத 1000 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2018-19 பட்ஜெட்டின் போதே அறிவிக்கப்படும்.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

இந்த அறிவிப்பை அம்மாநில முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

முன்னதாக இந்த பஸ்சை நடைமுறைபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் இந்த பஸ்சின் விலை ரூ 2.5 கோடி வரை செலவு ஆவதால் அது குறித்து அரசு பரீசிலித்து வருவதாக பதில் அளித்திருந்தது.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

இந்நிலையில் கடந்த 2018-19 பட்ஜெட் தாக்கலின் போது பசுமை என்ற பெயரில் 1000 எலெக்ரிக் பஸ்களை வாங்கவும், மாசு ஏற்படுத்தாத எரிபொருளுக்கு மாறுபவர்களுக்கான மானியம் ஆகியவற்றிற்காக மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

இதற்கிடையில் கடந்த 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றம் டில்லயில் சுமார் 10,000 பஸ்களாவது பொது பயன்பாட்டிற்காக இயக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. ஆனால் தற்போது 5,815 பஸ்கள் மட்டுமே தறபோது இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு

டில்லியில் மாசுவை கட்டுப்படுத்த இது சிறந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்ற காற்றிற்கு மாசுபடும் எரிபொருளை விட்டு விட்டு காற்றிற்கு மிகமிக குறைந்த அளவு மாசுவை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய வாகனங்களை பயன்பாட்டிற்கு அரசே கொண்டு வருவது பாராட்டிற்குரிய முயற்சி தான். அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை.
  2. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!
  3. சன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா?; கேரளாவில் நடக்குது புது கூத்து
  4. டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!
  5. பெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..
Most Read Articles
English summary
Fighting air pollution: Delhi to get 1,000 electric buses.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X