இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

செயிக்- ஜெனரல் மோட்டார்ஸ்- வூலிங் கூட்டணியில் இருக்கும் பவ்ஜன் நிறுவனத்தின் இ-100 என்ற மிகச் சிறிய வகை மின்சார கார் மாடலை எம்ஜி மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது.

By Saravana Rajan

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக்- ஜெனரல் மோட்டார்ஸ்- வூலிங் கூட்டணி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கால் பதிப்பதற்கான பணிகளில் எம்ஜி மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

மேலும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சில கார் மாடல்களை இறக்குமதி செய்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. செடான் கார், எஸ்யூவி ரக கார் மற்றும் மின்சார கார்களை அந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்தநிலையில், செயிக்- ஜெனரல் மோட்டார்ஸ்- வூலிங் கூட்டணியில் இருக்கும் பவ்ஜன் நிறுவனத்தின் இ-100 என்ற மிகச் சிறிய வகை மின்சார கார் மாடலையும் எம்ஜி மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் பவ்ஜன் இ-100 மின்சார குவாட்ரிசைக்கிள் வாகனம் டெல்லி- ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குர்கானில் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவ்ஜன் இ-100 மின்சார குவாட்ரிசைக்கிள் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனம் 2,488 மிமீ மட்டுமே நீளம் கொண்டது. டாடா நானோ காரைவிட 676 மிமீ குறைவான நீளம் கொண்ட இந்த மிகச் சிறிய வகை கார், 1,506மிமீ அகலமும், 1,617மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. 800 கிலோ எடை கொண்டது.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த மின்சார காரில் இருக்கும் மின் மோட்டார் 39 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பேட்டரியை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 100 கிமீ வேகம் வரை தொடும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7.5 மணிநேரம் பிடிக்கும்.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

சீனாவில் விற்பனையாகும் பவ்ஜன் இ-100 மின்சார வாகனத்தில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வைஃ-பை இன்டர்நெட் வசதி, டச்பேடு கன்ட்ரோலர், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், கீ லெஸ் என்ட்ரில உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் சென்சார்கள், பாதசாரிகள் சாலையை கடப்பது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் உள்ளிட்ட எக்கச்சக்க பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இந்தியாவில் பவ்ஜன் மின்சார குவாட்ரிசைக்கிள் சோதனை - ஸ்பை படங்கள்!

இது முழுக்க முழுக்க நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும். பஜாஜ் குவாட்ரிசைக்கிள் வாகனத்துக்கு போட்டியாக இருக்கும். இருந்தாலும், இது மின்சார வாகனமாக இருப்பதால், அதிக கவனத்தை பெற்றிருக்கிறது..

Source: Team bhp

Most Read Articles
English summary
Baojun E100 electric car spotted In India.
Story first published: Friday, July 6, 2018, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X