ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

ஆட்டோமொபைல் விற்பனையில் மிகப்பெரிய சந்தை இந்தியா தான். இந்தியாவில் வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும்பாலான இந்தியர்கள் இரு சக்கர வாகனங்களையே அதிகமாக வாங்குகின்றனர். உலகிலேயே இருசக்

By Balasubramanian

ஆட்டோமொபைல் விற்பனையில் மிகப்பெரிய சந்தை இந்தியா தான். இந்தியாவில் வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும்பாலான இந்தியர்கள் இரு சக்கர வாகனங்களையே அதிகமாக வாங்குகின்றனர். உலகிலேயே இருசக்கர வாகன சந்தையில் இந்தியா தான் மிகப்பெரியது.

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

பலர் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். பலருக்கு காருக்கான தேவை இருந்தாலும், பலர் பைக்கையே வாங்குகின்றனர். அவர்களுக்காவே நீங்கள் பைக் வாங்கும் விலையிலேயே செகண்ட் ஹேண்டில் சிறந்த கார்களை வாங்கலாம். அப்படிபட்ட கார்களின் பட்டியலை கீழ கொடுத்துள்ளோம்.

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மாருதி 800

பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து நீங்காத கார். இந்த கார் தயாரிக்கும் போதே இந்தியர்களுக்கு என்று சொல்லி தயாரித்திருப்பார்கள் போல இந்தியர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த கார் இது. இந்த காரின் எளிமையான வடிவமைப்பு இந்த காருக்கான பராமரிப்பு செலவை குறைக்கிறது.

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

அது தான் இந்த காரின் நீண்ட கால வாழ்விற்கு ரகசியம் போல. பல குடும்பங்களுக்கு இந்த மாருதி 800 கார் தான் முதல் காராக இருந்திருக்கும். இந்தியர்களுக்கு இந்த கார் மீது இருக்கும் தீவிரமான சென்டிமெண்ட் காரமாக இந்த காரி ரீசேல் வேல்யூ இன்றும் சிறப்பாகவே இருக்கிறது.

இதன் விலை : ரூ 25,000 முதல் ரூ 1.2 லட்சம் வரை

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

டாடா இண்டிகா

இந்தியாவில் இந்தியர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்ட கார் இது. இந்த கார் இந்திய மக்கள் பிரைவேட் காராக பயன்படுத்தியதை விட கேப்ஸ் பயன்பாட்டிற்காக இந்த காரை அதிகம் பயன்படுத்தினர். இந்த காரில் அதிக இட வசதி இருப்பதால் குடும்பத்துடன் இந்த காரில் செல்ல மக்கள் விரும்பினர். இன்டிகா கார் டீசல் ஆப்ஷனுடனும் விற்பனையானது.

இந்த காரின் விலை : ரூ 40 ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மாருதி எஸ்டீம்

இந்தியாவிற்கு வந்த முதல் செடன் கார் இந்த மாருதி எஸ்டீம் தான். இந்த கார் வந்தவுடன் இது மக்கள் மத்தியில் பெரும் ஸ்டேட்டஸாக பார்க்கப்பட்டது. எஸ்டீம் காரில் நல்ல இட வசதி, சொகுசு, குறைந்த பாராமரிப்பு என மக்கள் விரும்பும் பல அம்சங்கள் உள்ளன. இன்றும் ரோட்டில் அதிகமான எஸ்டீம் கார்களை பார்க்க முடிகிறது. இதற்கு முக்கியமான காரணம் இதன் இன்ஜின் தான். சிறந்த இன்ஜினை கொண்ட கார் இது.

இதன் விலை : ரூ 45,000 இருந்து துவங்குகிறது.

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மிட்சுபிஸி லேன்சர்

மார்கெட்டில் நல்ல பாப்புலராக இருந்த கார். இந்த காரை நாம் முறையாக பராமரித்தால் பல ஆண்டுகள் இந்த கார் செயல்பாட்டில் இருக்கும். இந்த நிறுவன காரில் குறைந்த விலையில் கிடைப்பது இந்த கார் தான். பெரும்பாலும் பெரிய பிரச்னைகள் எதுவும் இந்த காரில் ஏற்படுவதில்லை.

இந்த காரின் விலை : ரூ 45 ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மாருதி ஆம்னி

கார்களிலேயே வித்தியாசமான லுக்கில் வெளியான கார் இந்த கார் ஆம்னி, நீண்ட நாட்கள் இந்த கார் விற்பனையில் இருந்தது. பெரிய குடும்பம் வைத்திருந்தவர்கள், சிறுவணிகர்களும், வியாபாரங்களுக்காக இந்த காரை பயன்படுத்த துவங்கினர். இந்த காரின் நீண்ட நாள் உழைப்பு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இதன் விலை : ரூ 50 ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மாருதி சென்

மாருதி நிறுவனத்தின் அடுத்த லெஜண்ட் கார் இந்த மாருதி சென் கார். 50 பிஎச்பி பவர் கொண்ட இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டிராப்பிக் ரோடுகளுக்கு ஏற்ற சிறந்த கார் இது தான் லட்சகணக்கான மாருதிசென் கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனைக்கு உள்ளது. இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் இன்றும் எளிதாக மார்கெட்டில் உள்ளது. இந்த காரை முறையா பராமரித்தால் மிக நீண்ட காலத்திற்கு உழைக்கும்

இதன் விலை: ரூ 30,000 முதல் ரூ 1.2 லட்சம் வரை

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

டாடா நேனோ

இந்தியாவின் குறைந்த விலை கார் இந்த டாடா நேனோ கார் தான். இந்த காரில் பல சிறப்பான அம்சங்கள் இருந்திருந்தாலும், இந்தியாவின் குறைந்த விலை கார் என அந்நிறுவனம் விளம்பரபடுத்தியதே கார் விற்பனைக்கு பாதிப்பாகிவிட்டது. மக்கள் மனதில் இந்த காரை வைத்திருப்பவர்கள் சமூகத்தில் குறைந்த அந்தஸ்த்தில் இருப்பவராக பார்க்கப்பட்டது. இதனால் இந்த காரின் விற்பனை பெரியதாக போகவில்லை என்றாலும், மற்ற காரையும் அதன் விலையையும் ஒப்பிடும் போது இதுமிக சிறந்த காராக இருக்கிறது.

இதன் விலை : ரூ 45, ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

மாருதி வேகன் ஆர்

இன்றும் நல்ல விற்பனையில் இருக்ககூடிய கார் தான் இந்த வேகன் ஆர். விரைவில் இந்த காரின் டால் பாய் வெர்ஷன் வரவிருக்கிறது. இது குடும்பமாக பயணம் செய்ய சிறந்த காராக இருக்கும். இந்த காரில் பெட்ரோல் இன்ஜின், பொருத்தப்பட்டுள்ளுது. சி.என்.ஜி. மற்றும் எல்பிஜியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த காரின் விலை : ரூ 40 ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

ஹூண்டாய் சான்ட்ரோ

சான்ரோ இந்த பெயரே ஒரு மந்திர சொல் தான். ஒரு காலத்தில் இந்த கார்கள் அதிகமாக விற்பனையானது. தற்போது செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் மட்டும் இந்த கார் கிடைக்கும் என்றாலும் இந்த காரின் பெயரை கொண்டு புதிய மாடல் காரை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை: ரூ 50 ஆயிரம் முதல்

ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....

ஹோண்டா சிட்டி

கடந்த 20 ஆண்டுகளாக இந்த செக்மெண்ட் கார்களில் நல்ல விற்பனையில் இருந்து வருகிறது. இந்த காரின் டிசைன் தான் இந்த கார் பிரபலமானதிற்கு மிக முக்கிய காரணம். மேலும் இந்த காரை வாங்குவதை சமூக அந்தஸ்தாக பார்க்கப்பபட்டது. செடன் ரக கார்களின் எந்த பிரச்னையும் இல்லாத டிசைன் உள்ள காராக இந்த கார் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை : ரூ 40 ஆயிரம் முதல்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  2. ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்
  3. இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்
  4. ரேஞ்ச் இல்லையாம்.. டாடா, மஹிந்திரா கார்களை பயன்படுத்த மறுத்து அரசு அதிகாரிகள் போர்க்கொடி..
  5. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!
Most Read Articles
English summary
10 reliable, USED cars at the price of an Activa: Honda City to Mitsubishi Lancer. Read in Tamil
Story first published: Wednesday, June 27, 2018, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X