எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயாரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை பி.எம்.டபிள்யூ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

By Balasubramanian

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை பி.எம்.டபிள்யூ நிறுவனம் வடிவமைத்துள்ளது. எந்த வித கனெக்ஷனும் இல்லாமல் காரை அந்நிறுவனம் தயாரித்துள்ள வயர் லெஸ் பேட்டிற்கு மேல் சரியாக பார்க் செய்தாலே தானாக சார்ஜ் ஏறிவிடும்.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

காலம் நவீனமைடந்து வரும் நிலையில் வாழ்க்கை மிகவும் சுலபமாகி வருகிறது. இந்த வகையில் ஸ்மார் போன்களுக்கு வயர் லெஸ் சார்ஜர்கள் வந்து விட்டன. அவை சமீபமாக தயாரிக்கப்படும் புதிய போன்களில் பொருத்தப்பட்டு வருகிறது.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

அதே போல் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கும் வயர்லெஸ் சார்ஜரை வடிவமைத்துள்ளது பி.எம்.டபிள்யூ நிறுவனம். இதன் மூலம் இந்த காரில் எந்த வித வயரையும் கனெக்ட் செய்யாமல் சார்ஜ் ஏற்றிவிடலாம். மேலும் சார்ஜ் ஏறும் தகவலை நமது ஸ்மார்ட் போனிலேயே பெறும் வசதியும் உள்ளது.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ள இந்த வயர்லெஸ் சார்ஜிங் பேட் அந்நிறுவனம் தயாரித்துள்ள 5 சீரீஸ் ஹெபிரிட் பிளக் இன் கார்களை சார்ஜ் ஏற்ற உதவும். இந்த தகவலை கார் குறித்த செய்திகளை வெளியிடும் ஒரு வார இதழ் வெளியிட்டிருந்தது.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த சார்ஜிங் சிஸ்டம் இன்னும் சில மாதங்களில் ஐரோப்ப வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும். மேலும் அமெரிக்காவில் இதை சோதனை முயற்சியாக 530 இ ரக கார்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கும் விற்பனைக்கு வரும் என்றே பேசப்படுகிறது.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த வயர்லெஸ் சார்ஜ் பேட் நமது கராஜில் மட்டும் இல்லாமல் மற்ற இடங்களிலும் இன்ஸ்டால் செய்ய முடியும். இது வாகனத்திற்கு அடியில் இருக்கும் காயில் மூலம் வாகனத்துடன் கனெக்ட் ஆகி காருக்கு தேவையான சார்ஜை ஏற்றும்.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் விளக்கி கூறுகையில்: "இந்த வயர்லெஸ் பேடில் உள்ள காயிலும், காரின் அடிப்பகுதியில் உள்ள காயிலும் முதலில் கனெக்ட் ஆகும் பின் அப்பகுதியில் இந்த இரண்டு காயிலுக்கும் இடையே எலெக்டரோ மெக்னடிக் இணைப்பு உருவாகும். இதன் மூலம் 3.2கிலோ வாட் மின் பரிமாற்றம் செய்யப்படும்.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த வயர்லெஸ் சார்ஜர் மூலம் சுமார் 3.5 மணி நேரத்தில் ஒரு காருக்கு தேவையான முழு பேட்டரியையும் சார்ஜ் செய்து விடும். இதற்கு டிரைவர் செய்ய வேண்டியது. வயர்லெஸ் பேட்டிற்கு சரியாக மேல் பகுதியில் காரை பார்க் செய்ய வேண்டியது மட்டுமே.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

கார் சரியாக வயர்லெஸ் பேட்டிற்கு மேற்பகுதியில் நிறுத்த டிஜிட்டல் கன்ஷோலில் வழிகாட்டும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக கனெக்ட் ஆக வில்லை என்றால் நீல நிறுத்திலும், கனெக்ட் ஆகி சார்ஜ் ஏற துவங்கியவுடன் பச்சை நிறுத்திலும் இது சிக்கல் காட்டும் இதை வைத்து நாம் காரை சுலபமாக இதில் கனெக்ட் செய்து விடலாம்.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

நீங்கள் சரியாக கனெக்ட் செய்தவுடன் இக்னிஷியனை ஆப் செய்துவிட்டால் சார்ஜ் ஏற துவங்கிவிடும். மீண்டும் இக்னிஷியனை ஆன் செய்யும் வரை அல்லது பேட்டரி புல் ஆகும் வரை செய்யப்பட்டு கொண்டே இருக்கும். வயர்லெஸ் சார்ஜர் குறித்து விளக்க வீடியோவை நீங்கள் கீழேகாணலாம்.

கார் சார்ஜ் ஆகும் தகவல்கள் அனைத்தும் உங்களது ஸ்மார்ட் போனில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல சார்ஜ் ஏறும் போது ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும் உடனடியாக ஸ்மார்ட் போனில் அலாட் செய்யப்படும். அதாவது கார் பார்க் செய்துள்ள போது பூனை நாய்கள் ஏதோவது காருக்கு அடியில் சென்று வயர்லெஸ் பேடு மீது படுத்து கொண்டால் இந்த மாதிரியான எச்சரிக்கைகள் வரும். " என தெரிவித்தார்.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த தொழிற்நுட்பத்தை பி.எம்.டபிள்யூ நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக வடிவமைத்து வந்துள்ளது. தற்போது தான் அது சாத்தியமாகியுள்ளுது. கடந்த 2014ம் ஆண்டே இந்த திட்டம் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது. அதன் பின் இந்த தொழிற்நுட்பத்தை பொருளாக மாற்ற 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை தயரித்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த தொழிற்நுட்பம் வெற்றியடைந்தால் மற்ற கார் நிறுவனங்களும் இதே போன்ற ஒரு பொருளை தயாரிக்க முன் வரும். பெரும்பாலும் ஒரே சார்ஜர் மூலம் எல்லா எலெக்ட்ரிக் கார்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற வகையில் அது உருவாக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு பொருளின் சேவையை தான் மக்களும் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
BMW to bring smartphone-like wireless charging to cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X