பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்...! விலை ரூ 56.9 லட்சம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 காரின் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் ரூ 56.9 லட்சமாகும். பழைய காரில் உள்ள மிக சில மாற்றங்களுடன் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்ட

By Balasubramanian

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 காரின் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் ரூ 56.9 லட்சமாகும். பழைய காரில் உள்ள மிக சில மாற்றங்களுடன் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் எக்ஸ்3 காரை டீசல் வேரியன்டில் மட்டும் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த காருக்கான பெட்ரோல் வேரியன்டும் அறிமுகமாகியுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ் டிரைவ் 30 ஐ பெட்ரோல் இன்ஜின் கார் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனையாகி வருகிறது இதே இன்ஜின் தான் பிஎம்டபிள்யூ 3 மற்றும் 5 சீரிஸ் மாடல்களில் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

இந்த இன்ஜின் 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ கார் 6.3 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை பிக்கப் செய்யும் திறன் கொண்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்3 கார் பழைய டீசல் வேரியன்டை விட 55 கிலோ குறைவாக உள்ளது. இதன் டிசைனை பொருத்தவரை அதே பழைய எக்ஸ்3யில் உள்ள அதே டிசைன்கள் தான் செய்யப்பட்டுள்ளன. புதிய எக்ஸ்3யில் வீல் பேஸ் மட்டும் சற்று அதிகமாக உள்ளது. இதனால் காருக்குள் இட வசதி இன்னும் சற்று அதிகமாக உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை 5 சீரிஸ் காரின் தொழிற்நுட்பத்தை இந்த டீசல் வேரியன்ட் பெற்றுள்ளது. இதன் படி எக்ஸ்3 காரில் உள்ள அம்சங்களான டச் மற்றும் கெஸ்டர் கன்ட்ரோல்டு ஐ டிரைவ், , 10.25 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்,

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் புதிய எக்ஸ் 3 காரில் ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, மற்றும் 40: 20 : 40 என பிரிக்கப்பட்ட சீட்கள் உள்ளிட்ட பல வசதிகள் இந்த காரில் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

இந்த கார் முழுமையாக மிக உயர் ரக சொகுசு காரில் உள்ள எல்லா வசதிகளையும் தனக்கும் சுறுக்கில் முழுமையான காராக இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் உள்ள எல்லா பிஎம்டபிள்யூ டீலர்களிடமும் ஆர்டர் செய்யலாம். இந்த கார் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 56.9 லட்சம்

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 பெட்ரோல் வேரியன்ட் கார் அறிமுகம்

இந்த கார் மெர்ஸிடியஸ் பென்ஸ், ஜிஎல்சி300 மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எச்எஸ்இ ரக கார்களுக்கு நேரடிய போட்டியாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
2018 BMW X3 Petrol Variant Launched In India — Priced At Rs 56.90 Lakh.Read in Tamil
Story first published: Tuesday, June 12, 2018, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X