13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

ஜெனிவாவில் நடந்து வரும் மோட்டார் வாகன கண்காட்சியில் கடந்த செவ்வாய் அன்று அறிமுகமானது புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் ஹைப்பர் கார். இது 2.5 நொடிகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லகூடியது.

By Balasubramanian

ஜெனிவாவில் நடந்து வரும் மோட்டார் வாகன கண்காட்சியில் கடந்த செவ்வாய் அன்று அறிமுகமானது புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் ஹைப்பர் கார்.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

புதிய சிரோன் ஸ்போர்ட்டை பொறுத்தவரை பழைய சிரோனில் உள்ள அதே பவர் மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது. எனினும் இதில் சிறந்த டயனமிக் டிரைவிங்கிற்காக சிறந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் சிரோனை விட புதிய சிரோன் ஸ்போர்ட் கவனத்தை ஈர்க்கிறது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

இது குறித்து புகாட்டி நிறுவன தலைவர் ஸ்டீபன் விங்கில்மென் கூறுகையில் : "சிரோன் ஸ்போர்ட் கார் வேகமாகவும், சுறுசுறுப்புடனும் இயங்கும் திறன் கொண்டது. குறிப்பாக குறுகலான வளைவுகளில் காரை திருப்பும்போது காரின் சிறந்த கையாளும் திறனை டிரைவர்கள் உணருவர். அது அவர்களுக்கு சிறந்த டயனமிக் டிரைவிங் அனுபவத்தை தரும்." என கூறினார்.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

இந்த காரில் குறைந்த எடையுள்ள வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஸ்டெப்ளைசர், முகப்பு கண்ணாடி வைப்பர், இண்டர்கூலர் கவர் ஆகிய பகுதிகளில் கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் எடை பழைய சிரோன் காரின் எடையை விட 18 கிலோ எடை குறைவாக உள்ளது. புதிய சிரோன் ஸ்போர்ட்டில் 10 சதவீதம் சஸ்பென்சனின் உறுதி தன்மையும் அதிகரித்துள்ளது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டியரிங், மற்றும் செயல்திறன் காரணமாக காரை திருப்புவது இலகுவாகி இருக்கிறது. மேலும் பழைய சிரோன் கார்களை விட புதிய சிரோன் ஸ்போர்ட் இத்தாலி ரேஸ் டிராக்கில் ஒரு லேப்பிற்கு 5 நொடி வேகமாக பயணிக்கிறது என வி.டபிள்யூ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

புதிய புகாட்டி சிரோன் 2.5 நொடிகளில் 100 கி.மீ வேகத்தையும் 13.6 நொடிகளில் 300 கி.மீ வேகத்தையும் பிக்கப் செய்கிறது. அந்த காரின் அதிகபட்ச வேகத்தை இதுவரை கணக்கிடவில்லை எனினும் இதுவரை 420 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. புகாட்டி நிறுவனம் இந்த கார் 480 கி.மீ வேகம் வரை செல்லும் என எதிர்பார்க்கிறது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

இதன் இன்ஜினை பொறுத்தவரை 8.0 லிட்டர் குவாடு டர்போ டபிள்யூ16 ரக இன்ஜினில் இயங்குகிறது. அதின் அதிகபட்ச வேகத்தில் 1,500 குதிரை சக்தி, டார்க் திறனை வெளிபடுத்தும். இது 10 நிமிடத்தில் 100 லிட்டர் பெட்ரோலை காலியாக்கும் திறன் கொண்டது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

புதிய சிரோன் ஸ்போட் காரின் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூ 21.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெனிவா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்ட சிவப்பு மற்றும் கருப்பு நிற காரின் விலை இந்திய மதிப்பில் ரூ 23.9 கோடி என குறிப்பிட்டிருந்தது. பழைய சிரோன் கார் விலை இ்நதிய மதிப்பில் ரூ 19.5 கோடியில் விற்பனையாகி வருகிறது. ஜெனிவா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்ட வாகனங்களில் இது தான் வலையுயர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 நொடியில் 300 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக புதிய புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் அறிமுகம்

புகாட்டி நிறுவனம் தற்போது 500 புதிய சிரோன் கார்களை மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதில் ஏற்கனவே 300 கார்கள் விற்பனையாகிவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti just revealed a $3.3 million Chiron - and it's the ultimate hypercar. Read in Tamil
Story first published: Friday, March 23, 2018, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X