பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

By Arun

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் புதிய கார்களின் விற்பனை வளர்ச்சி கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

ரஷ்ய நாட்டில், புதிய கார் விற்பனை வளர்ச்சி கடந்த மே மாதம் 18 சதவீதமாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், ரஷ்யாவில் புதிய கார் விற்பனை வளர்ச்சி, கடந்த ஜூன் மாதம் 10.8 சதவீதமாக திடீரென சரிவை சந்தித்துள்ளது.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

அசோசியேஷன் ஆப் ஐரோப்பியன் பிஸ்னஸ் (AEB) அமைப்பு, இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. புதிய கார் விற்பனை வளர்ச்சி ரஷ்யாவில் திடீரென சரிவை சந்திக்க, பிபா கால்பந்து உலக கோப்பைதான் காரணம் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிபா கால்பந்து உலக கோப்பை தொடர், ரஷ்யாவில் கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கியது. தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி என ரஷ்யாவின் முக்கியமான 11 நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

32 அணிகள் கலந்து கொண்டுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சிகரமான தோல்விகள் அரங்கேறி வருகின்றன.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றுடன் நடையை கட்டியது. கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட லயோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, கிறிஸ்டியானா ரொனால்டோவின் போர்ச்சுக்கல் ஆகிய வலிமையான அணிகளும் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறி விட்டன.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

ஜாம்பவான்கள் அடங்கிய அர்ஜென்டினாவும், போர்ச்சுக்கல்லும் நாக் அவுட் சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) தோல்வியடைந்து, ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியேறின. ஆனால் மறுபக்கம் கத்துக்குட்டி என வர்ணிக்கப்பட்ட ரஷ்யா அசத்தி வருகிறது.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

2010ம் ஆண்டு பிபா உலக கோப்பை தொடரின் சாம்பியனான ஸ்பெயின் அணியை, நாக் அவுட் சுற்றின் பெனால்டி ஷுட் அவுட்டில், 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி, கம்பீரமாக கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது தொடரை நடத்தும் ரஷ்யா.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

வரும் 7ம் தேதி சோச்சி நகரில் நடைபெறும் கால் இறுதி போட்டியில், குரோஷியா அணியை ரஷ்யா எதிர்கொள்கிறது. ரஷ்யா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். ரஷ்ய நாளிதழ்களின் தலைப்பு செய்தி கூட அதுதான்.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

ரசிகர்கள் உள்பட கார் வாங்க கூடிய அனைவரின் கவனமும் பிபா கால்பந்து உலக கோப்பையின் பக்கம் திரும்பி விட்டதால்தான், ரஷ்யாவில் புதிய கார் விற்பனை வளர்ச்சி திடீரென சரிவை சந்தித்திருப்பதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

ரஷ்யாவில் கடந்த ஜூன் மாதம் 1,56,351 புதிய கார்கள் மற்றும் லைட் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதே கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1,41,090 புதிய கார்கள் மற்றும் லைட் கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

இந்த வகையில் பார்த்தால் 11 சதவீத வளர்ச்சி கிடைத்திருக்கிறதுதான். ஆனால் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், புதிய கார்களின் விற்பனை வளர்ச்சி சுமார் 8 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்து விட்டது. இதற்கு பிபா கால்பந்து உலக கோப்பையே காரணம்.

பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் விரைவாக முடிய கார் நிறுவனங்கள் பிரார்த்தனை செய்ய காரணம் இதுதான்...

எனினும் 2018ம் ஆண்டின் முதல் பாதியில், ரஷ்ய கார் மார்கெட் வெற்றிகரமாகவே இயங்கியுள்ளது. அத்துடன் பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் ஜுலை 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே வரும் மாதங்களில் புதிய கார் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car sales growth slows in russia because of fifa football world cup. Read in tamil
Story first published: Thursday, July 5, 2018, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X