பாகிஸ்தான், சீனா எல்லைகளில் தீவிரவாதிகளை மிரட்டும் இந்திய ராணுவ கார்களின் ரகசியங்கள்..

இந்திய ராணுவ வீரர்களும், இதர பாரா மிலிட்டரி படைகளும் பயன்படுத்தும் கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடிமக்களையும், எல்லைகளையும் காக்க, ராணுவ வீரர்கள் ஆற்றும் பணி அளப்பரியது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து நமது நாட்டை பாதுகாக்க, இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுகின்றனர் ராணுவ வீரர்கள். அப்படிப்பட்ட இந்திய ராணுவமும், இதர பாரா மிலிட்டரி படைகளும் பயன்படுத்தும் கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

டாடா சஃபாரி ஸ்டிரோம்

ராணுவத்திற்கே உரித்தான பச்சை நிறத்தில், கம்பீரமாக காட்சியளிக்கும் டாடா சஃபாரி ஸ்டிரோம் கார்களை, இந்திய ராணுவம் சமீப காலமாக பயன்படுத்தி வருகிறது. டாடா சஃபாரி ஸ்டிரோம், மிகவும் பிரபலமான எஸ்யூவி வகை கார்களில் ஒன்று.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

எனினும் ராணுவத்திற்கு என பிரத்யேகமாக, 'சஃபாரி ஸ்டிரோம் ஆர்மி எடிசன்' என்ற பெயரில், இந்த கார்களை உருவாக்கியுள்ளது டாடா நிறுவனம். இதில், ஸ்பாட் லைட் (spotlight), பானெட் ஆன்டனா (bonnet antenna) ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

அத்துடன் பின்பகுதியில் பின்டில் ஹூக் (pintle hook) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 154 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

டொயோட்டா பார்ச்சூனர் 4X4

டொயோட்டா பார்ச்சூனர் கார் உருவத்தில் பெரியது. பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கும். அதே நேரத்தில் அதிவேகத்தில் சீறிப்பாயவும் செய்யும். இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்த காரில் எளிதாக எடுத்து செல்ல முடியும். இதில், ரேடியோ கம்யூனிகேஷன் வசதியும் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

டொயோட்டா பார்ச்சூனர் கார், ரோந்து பணிகளுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரோந்து பணி மேற்கொள்ள உள்ளவர்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர அதிகாரிகள் டொயோட்டா பார்ச்சூனர் காரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2,755 சிசி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 174.5 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

டாடா சுமோ 4X4

இந்திய ராணுவம் பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான கார் டாடா சுமோ (4X4). தனிப்பட்ட போக்குவரத்திற்காக டாடா சுமோ கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில், 6-7 பேர் தாரளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

இந்த காரில், 3.0 லிட்டர் சிஆர்4 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 3,000 ஆர்பிஎம்மில் 83.1 எச்பி பவர் மற்றும் 1,600-2,000 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யவல்லது. இந்த கார் நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் உகந்தது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

மஹிந்திரா ஸ்கார்பியோ 4X4

மஹிந்திரா ஸ்கார்பியோ 4X4 காரை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை (Indo-Tibetan Border Police-ITBP) பயன்படுத்தி வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2179 சிசி எம்ஹவாக் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 120 பிஎச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (Anti-lock braking system), EBD உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர கார் திருடுபோகாமல் தடுப்பதற்கான அலாரம் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

மாருதி சுஸூகி ஜிப்ஸி

கடினமான நிலப்பரப்புகளில் பணியாற்றும் இந்திய ராணுவம், மாருதி சுஸூகி ஜிப்ஸி காரை பயன்படுத்தி வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 80 பிஎச்பி பவர் மற்றும் 4,500 ஆர்பிஎம்மில் 103 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை காக்கும் இந்திய ராணுவம் பயன்படுத்தும் கார்களின் ரகசியங்கள்..

மாருதி சுஸூகி ஜிப்ஸி கார்கள், கடந்த 1985ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்களை 1991ம் ஆண்டில் இருந்து, இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. எனினும் தற்போது ஜிப்ஸிக்கு பதிலாக, டாடா சஃபாரி ஸ்டிரோம் கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

Source: Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Cars Used By Indian Army. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X