மோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிறப்பித்துள்ள ஒரு புதிய உத்தரவின் காரணமாக காலியாகப்போவது யார்? என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிறப்பித்துள்ள ஒரு புதிய உத்தரவின் காரணமாக காலியாகப்போவது யார்? என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவீர்கள்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை இந்திய மண்ணில் உற்பத்தி செய்ய வேண்டும், அந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசு அமல்படுத்தியது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்க வேண்டும், இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகளவில் பெருக வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடிதான், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தீவிரமும் காட்ட தொடங்கினார்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

ஆனால் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தீவிரம் காட்டும் நரேந்திர மோடியே, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பயன்படுத்த தொடங்கியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பலத்த சர்ச்சையில் சிக்கி கொண்டார் என்பதை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த வரை, மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரைதான் மோடி பயன்படுத்தி வந்தார். இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

எனினும் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760 எல்ஐ செக்யூரிட்டி எடிசன் என்ற காரை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ காராக உபயோகிக்க தொடங்கினார். இந்த கார் ஜெர்மன் நாட்டு தயாரிப்பு. அதனால்தான் பலத்த சர்ச்சை எழுந்தது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

ஆனால் பாதுகாப்பு என்ற விஷயத்தை முன் வைத்த பிறகே இந்த சர்ச்சை ஓய்ந்தது. இந்த காரில் ஏராளமான அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டின் பிரதமருக்கு இத்தகைய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய கார் அவசியமானதும் கூட.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

என்றாலும் பிரதமருக்காக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த காரை பிரத்யேகமாக தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட காருக்கு பிரதமர் நரேந்திர மோடி மாறினார்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

வெளிநாட்டு கார் விஷயத்தால் இப்படி சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது, தற்போது அரசு துறைகளின் வாகன கொள்முதல் தொடர்பாக, புதிய விதி ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

மத்திய, மாநில அரசுகளினுடைய பல்வேறு துறைகளின் பயன்பாட்டிற்காக, இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. போலீஸ், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அந்த வாகனங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

ஆனால் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களும் கூட, அரசு துறைகள் நடத்தும் டெண்டர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. அதனை கட்டுப்படுத்தும் விதமாகதான் தற்போது புதிய விதி அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

பொது பயன்பாட்டிற்காக வாகனங்களை கொள்முதல் செய்ய நடத்தப்படும் டெண்டர்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கே (India-made) இனி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

இந்த அதிரடியான புதிய விதியை, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம்தான் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியான ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை வரிசையாக எடுத்து வருகிறது. பொது பயன்பாட்டிற்கான வாகன கொள்முதலில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கே இனி முன்னுரிமை என்ற புதிய விதியும் அதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாக, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனிமேல் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு, பொது கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படாது.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

இந்த புதிய விதி குறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு துறைகளால் நடத்தப்படும் டெண்டர்களில், 65 சதவீதம் என்கிற அளவிற்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கே இனி முன்னுரிமை வழங்கப்படும்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரி பாகங்கள் குறைந்தபட்சம் 65 சதவீதம் என்ற அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். டெண்டர் நடைபெறும் சமயங்களில், இதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்கும் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

இந்த புதிய விதி தற்போது அமலுக்கு வந்து விட்டது. என்றாலும் 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, இந்த புதிய விதி குறித்து மீண்டும் பரிசீலனை நடத்த உள்ளோம். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 65 சதவீதம் என்கிற குறைந்தபட்ச அளவை இன்னும் உயர்த்துவது குறித்து அப்போது பரிசீலிக்கப்படும்'' என்றார்.

ஜெர்மன் காரை பயன்படுத்தும் மோடியின் இந்த திடீர் உத்தரவால் வெளிநாட்டு வாகன நிறுவனங்கள் கலக்கம்...

மத்திய அரசின் இந்த உத்தரவால், இந்தியாவை சேர்ந்த உள்ளூர் வாகன நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த புதிய விதியானது, வெளிநாட்டு வாகன நிறுவனங்களுக்கு நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
Central Government Mandates Preference To Made In India Vehicles In Public Procurement. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X