ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்பு மிகவும் விலை உயர்ந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வாங்கவுள்ளார். அந்த காரின் விலை உங்களுக்கு தலை சுற்றலை ஏற்படுத்தி விடும்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜீத் என நீண்டு வந்த போட்டி சிம்பு-தனுஷ் என்றாகி பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் இந்த போட்டியில் சிம்புவை பின்னுக்கு தள்ளி தனுஷ் பல படிகள் முன்னேறி சென்று விட்டார்.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

நடிப்பு, நடனம், இசை, இயக்கம் என அனைத்து துறைகளிலும் திறமை வாய்ந்த நபர்கள் மிக அரிதாகதான் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார்கள். அப்படி அரிதாக கிடைத்த நபர்களில் ஒருவர்தான் சிம்பு. ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

சிம்புவின் மார்க்கெட் சமீப காலமாக 'டல்' அடித்து வந்தது. ஆனால் சிம்புவின் தனிப்பட்ட குணங்களும் இதற்கு ஓர் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருகிறார், இயக்குனரின் பணிகளில் தலையிடுகிறார் என சிம்பு மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இந்த சூழலில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' படம் சிம்புவின் கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதில், சிம்புவின் கேரக்டர் மற்றும் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

எனவே தற்போது சிம்பு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான்' வருவேன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இந்த சூழலில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் ஒன்றை சிம்பு புக் செய்திருந்தார். எனவே இதற்கான டெமோ காரை ஐதராபாத்தில் நேற்று முன் தினம் (நவம்பர் 13ம் தேதி) ஓட்டி பார்த்துள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை சிம்பு இன்னும் ஓரிரு நாட்களில் டெலிவரி எடுத்து விடுவார் என கூறப்படுகிறது. அவர் டெலிவரி எடுத்து விட்டால், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வாங்கிய சென்னையின் முதல் நபர் என்ற பெருமையை பெறுவார்.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

அத்துடன் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வைத்திருக்கும் சென்னையின் ஒரே நபர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லீயிடம் இருந்து வெளிவரும் ஓர் லக்ஸரி கார்தான் கான்டினென்டல் ஜிடி.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

மிகவும் பழமைவாய்ந்த பென்ட்லீ நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டு முதல் கான்டினென்டல் ஜிடி கார்களை விற்பனை செய்து வருகிறது. முதல் தலைமுறை கான்டினென்டல் ஜிடி கார்கள் கடந்த 2003 முதல் 2011ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்து வந்தன.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இதன்பின் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இரண்டாம் தலைமுறை கான்டினென்டல் ஜிடி கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த காரில், 5998 சிசி, ட்வின் டர்போசார்ஜ்டு டபிள்யூ12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இந்த இன்ஜின் 6,100 ஆர்பிஎம்மில் 567 பிஎச்பி பவரையும், 1,700 ஆர்பிஎம்மில் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. இதில், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 318 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இவ்வளவு சிறப்பான செயல்திறன் வாய்ந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் ஒரு லிட்டருக்கு 10.1 கிலோ மீட்டர் மைலேஜ் (பெட்ரோல்) வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 3.58 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

இன்னும் ஒரு சில நாட்கள்தான். அதன்பின் சிங்கார சென்னையின் வீதிகளில், மிகவும் விலை உயர்ந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரில், சிம்பு வலம் வருவதை நாம் பார்க்க முடியும். சிம்புவின் தீவிர ரசிகர்கள் இதனை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார்? அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...

அதே சமயம் சிம்புவுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னிடம் 5,000 ரூபாய் கூட பணம் இல்லை என அன்பானவன் அசராதவன் அடங்காதன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம், சிம்பு கூறியதாக வெளியான தகவல்கள்தான் இதற்கு காரணம். எனவே ஒரு சில ரசிகர்கள் சிம்புவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் விற்பனைக்கு அறிமுகமான ஜாவா மோட்டார்சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Chennai's First Bentley Continental GT Car Goes To Simbu. Read in Tamil
Story first published: Thursday, November 15, 2018, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X