புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் முறையே ரூ.3.29 லட்சம் மற்றும் ரூ.3.83 லட்சம் ஆகிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. புதிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அங்குல டைமண்ட் கட்

பண்டிகை காலத்தையொட்டி, பல புதிய கார் மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டி வருகின்றன. அந்த வகையில், புதிய மாற்றங்களுடன் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும், கோ ப்ளஸ் 7 சீட்டர் எம்பிவி ரக காரும் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில், செங்குத்தான அமைப்பில் எல்இடி விளக்குகள் கொண்ட பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய பம்பர் அமைப்புடன் முகப்பு பொலிவு கூட்டப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பில் சிறிய மாற்றம் கண்டுள்ளது. முந்தைய மாடலைவிட இப்போது இரு கார்களின் முகப்பும் அதிக வசீகரமாக மாறி இருக்கிறது.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரு கார்களிலும் புதிய 14 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது காரின் கவர்ச்சியை அதிகரிக்கிறது. பின்புற பம்பரின் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டு பொலிவு கூட்டப்பட்டு இருக்கிறது.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் முக்கிய அம்சமாக 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் இந்த மாடலின் முக்கிய அம்சங்கள்.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டூயல் ஏர்பேக்குகள் ரியர் விண்டோ வைப்பர் போன்ற வசதிகளும் உள்ளன.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிநாடுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த கார்கள் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் நிச்சயம் இந்த கார்களின் விற்பனைக்கு வலு சேர்க்கும் வாய்ப்புள்ளதால், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு புதிய கார்களிலுமே ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன் பிரவுன் என்ற இரண்டு புதிய வண்ணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வண்ணங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று கருதலாம்.

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் கோ கார் ரூ.3.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் கார் ரூ.3.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் கார் வாங்க விரும்புவோரின் தேர்வு பட்டியலில் இந்த கார்களும் இடம்பெறும் என்று கருதலாம்.

Most Read Articles

மேலும்... #டட்சன்
English summary
Datsun GO and GO Plus Facelift Models launched in India.
Story first published: Wednesday, October 10, 2018, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X