சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணி நிறுவனத்தின் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்

By Saravana Rajan

டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்களையும், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

டட்சன் கோ க்ராஸ் கான்செப்ட் அடிப்படையிலான இந்த புதிய எஸ்யூவி சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் துவங்கி இருக்கின்றன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மூலமாக இந்த புதிய எஸ்யூவி குறித்து சில விபரங்களை நாம் உணர முடிகிறது.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

ஸ்பை படங்களின் மூலமாக இந்த எஸ்யூவியின் கேபின் சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம். இந்த எஸ்யூவியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் பிரம்மாண்ட ஏர் டேம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பக்கவாட்டு வடிவமைப்பும், பின்புறத்தில் டெயில் லைட் அமைப்பும் ஒன்றுபோல்தான் தெரிகிறது. பெரிய அளவிலான பம்பர் அமைப்பு இந்த எஸ்யூவிக்கு வலு சேர்க்கும். புதிய அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணி நிறுவனத்தின் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது. எனவே, போட்டியாளர்களைவிட விலை குறைவான மாடலாக வரும்.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த புதிய எஸ்யூவி டட்சன் பிராண்டுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் மிகச் சிறப்பான தயாரிப்பாக இதனை வழங்கும் முடிவில் இருக்கிறது டட்சன்.

சென்னை அருகே டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

டட்சன் கோ க்ராஸ் எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்குள்ளான பட்ஜெட்டில் இந்த எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டட்சன் திட்டமிட்டுள்ளது. அதிக இடவசதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

Source: MotorBeam

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
The Datsun Go Cross SUV made its debut in Indonesia towards the end of last year. Recently, the car was snapped by MotorBeam while it was being tested on the roads of Chennai. This indicates that the company is going to launch the SUV in the country soon.
Story first published: Monday, July 30, 2018, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X