பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ள பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ள பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசலுக்கு என மாதந்தோறும் தனியாக பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய கடினமான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதுதவிர பெட்ரோல், டீசலை இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வராததும், அதன் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

ஏனெனில் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படாததால், மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பெட்ரோல், டீசல் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அதிகப்படியான வரி விதிப்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

எனவேதான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு இன்னும் செவிமடுக்கவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதில் மாநில அரசுகளின் வாட் வரியானது, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஒரே விலையில் விற்பனையாவது இல்லை.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இந்த சூழலில் நாட்டின் தலைநகர் டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநில அரசுகள், சமீபத்தில் வாட் வரியை ஓரளவுக்கு குறைத்தன. இதனால் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

அதாவது டெல்லியுடன் ஒப்பிடுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2.59 ரூபாயும், ஹரியானா மாநிலத்தின் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.95 ரூபாயும் குறைந்தது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

அதே நேரத்தில் டெல்லியுடன் ஒப்பிடுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 2.02 ரூபாயும், ஹரியானா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 1.72 ரூபாயும் குறைந்தது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

தற்போது உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில், டெல்லியை காட்டிலும் குறைவான விலையில், பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இவ்விரு மாநிலங்களும் டெல்லிக்கு மிக அருகே உள்ளன.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

எனவே டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டிகள் பலர், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநில எல்லைகளுக்குள் இருக்கும் பங்க்குகளுக்கு சென்று பெட்ரோல், டீசல் நிரப்பி வருகின்றனர். இதனால் டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

அதாவது உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநில அரசுகள் வாட் வரியை குறைத்த பின்பு டெல்லியில் உள்ள பங்க்குகளில், பெட்ரோல் விற்பனை 20 சதவீதமும், டீசல் விற்பனை 30 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இந்த விலை வித்தியாசம் இன்னும் தொடருமேயானால், பெட்ரோல், டீசல் விற்பனை இன்னும் கடுமையாக குறையும் என டெல்லியை சேர்ந்த பங்க் உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். எனவே டெல்லி மாநில அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதன்மூலமாக டெல்லியிலும் பெட்ரோல், டீசல் விலை குறையும். எனவே வாகன ஓட்டிகள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் மீண்டும் டெல்லியில் உள்ள பங்க்குகளிலேயே பெட்ரோல், டீசல் நிரப்ப தொடங்குவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதுதவிர பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை டெல்லி மாநில அரசு குறைக்காததால், டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது என்பதும் பங்க் உரிமையாளர்களின் வாதம்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''தற்போது யூரோ VI கிரேடு (Euro VI Grade) பெட்ரோல் மற்றும் டீசல் டெல்லியில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த எரிபொருள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

ஆனால் டெல்லி மாநில அரசு வாட் வரியை குறைக்காததால், டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. எனவே அருகே உள்ள மாநிலங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், யூரோ VI-ஐ காட்டிலும் குறைவான தரநிலை கொண்ட யூரோ IV கிரேடு பெட்ரோல், டீசலை நிரப்புகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

யூரோ VI கிரேடு பெட்ரோல், டீசலில் சல்பேட்டின் அளவு 10 பார்ட்ஸ் பெர் மில்லியன்தான் (Parts Per Million-PPM) இருக்கும். ஆனால் யூரோ IV கிரேடு பெட்ரோல், டீசலில் சல்பேட்டின் அளவு 50 பார்ட்ஸ் பெர் மில்லியனாக இருக்கும்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

அதாவது யூரோ VI கிரேடு பெட்ரோல், டீசலை காட்டிலும், யூரோ IV கிரேடு பெட்ரோல், டீசலில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்களின் உமிழ்வு 80 சதவீதம் அதிகமாக இருக்கும்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

ஆனால் டெல்லியில் விலை அதிகமாக இருப்பதால், அருகில் உள்ள உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சென்று யூரோ IV கிரேடு பெட்ரோல், டீசலைதான் வாகன ஓட்டிகள் நிரப்புகின்றனர். இதனால் டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசும் ஓர் காரணம்'' என்றார்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

இதுபோன்ற காரணங்களால்தான் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் டெல்லியை ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, வாட் வரியை குறைக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்

எனவே டெல்லி பெட்ரோல் டீலர்ஸ் அசோசியேஷன் (Delhi Petrol Dealers Association-DPDA) வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 22ம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 5 மணி வரை டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருக்கும்.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Delhi Petrol Pump Owners Announce Strike Against Government's Refusal To Reduce VAT. Read in Tamil
Story first published: Thursday, October 18, 2018, 12:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X