மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

பிரதமர் மோடி கடந்த 2 வாரங்களுக்க முன்பு டில்லியில் இருந்து பல்வேறு பகுதிகளை இணைக்கும் படியான ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரஸ் ஹைவே வை திறந்து வைத்தார். இந்தியாவின் மிக முக்கியமானதாகவும், அதிக தொழிற்நுட

By Balasubramanian

சமீபத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஈஸ்டர்ன் பெரிபெரல் ஹைவேயில் பல உயர் ரக வசதிகள் நம்மை வியக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. இந்த ஹைவேயில் உள்ள டாப் -5 அம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

பிரதமர் மோடி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டில்லியில் இருந்து பல்வேறு பகுதிகளை இணைக்கும் படியான ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரஸ் ஹைவே வை திறந்து வைத்தார். இது மீரட் வழியாக டில்லிக்கு வரும் டிராப்பிக்கை குறைக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ஹைவே ஆகும்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

இந்தியாவின் மிக முக்கியமானதாகவும், அதிக தொழிற்நுட்ப வசதியுடனும் , பசுமையின் அடிப்படையிலும் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இந்த ஹைவேயில் உள்ள பல வசதிகள் குறித்து பலர் அறிந்திருந்தாலும் இதில் உள்ள சில வசதிகள் குறைந்து பலருக்கு தெரிவதில்லை. அந்த வசதிகளை பற்றி கீழே பார்க்கலாம்.

14 வழிச்சாலை

இந்த ஈஸ்டர்ன் பெரிபெரல் ஹைவே என்பது இந்தியாவின் முதல் 14 வழிச்சாலை. அதாவது ஒவ்வொருபுறமும் தலா 7 லேன்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 14 லேனில் நடுவில் உள்ள 6 லேன்கள் எக்ஸ்பிரஸ் ஹைவேவிற்காகவும், 4 லேன்கள் ஹைவேக்களாகவும், மற்ற 4 லேன்கள் லோக்கல் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைவேயில் 27.4 கி.மீ. தூரம் 14 லேன் கொண்ட எக்ஸ்பிரஸ் ஹைவேவாகவே பயன்படுத்தப்படுகிறது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

ஒரு பகுதி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இந்த ஈஸ்டன் பெரிபெரல் ஹைவே கட்டுமான பணிகள் முழுவதுமாக இன்னும் முடியவில்லை. டில்லியில் இருந்து 135 கி.மீ., தொலைவிலான பகுதி மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் 2019ம் ஆண்டு மே மாதம் தான் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பெரிபெரல் ஹைவே முழுமையாக அடுத்த ஆண்டு தான் பயன்பாட்டிற்கு வரும்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

பயண நேர மிச்சம்

இந்த ஹைவே செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் சுமார் 8.7 கி.மீ தூரத்திற்கு நீண்ட டிராபிக் இருக்கும். இது டில்லியில் இருந்து வெளியே செல்லும் பகுதியாக இருப்பதால் டில்லியில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களும், லோக்கல் டிராபிக் வாகனங்களும் ஒன்றாக இணைந்து செல்வதால் வெறும் 8.7 கி.மீ. கடக்க 45 நிமிடங்கள் தேவைப்பட்டது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

தற்போது இந்த ஹைவே பயன்பாட்டிற்கு வந்த பின்பு 8.7 கி.மீ. தூரத்ததை சரியாக மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் பயணித்து 8 நிமிடங்களில் கடந்து விடலாம். அதாவது 45 நிமிடம் வரை ஆன பயண நேரம் தற்போது பல மடங்கு குறைக்கப்பட்டு 8 நிமிடமாக உள்ளது. இதனால் டில்லி போன்ற மெட்ரோ நகரில் ஏற்படும் டிராப்பிக்கின் அளவு கனிசமான அளவில் குறைந்துள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

தானியங்கி அபராத வசதி

இந்த ஹைவே முழுவதும் உயர் ரக தொழிற்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைவேவை 24*7 ரேடார் பொருத்திய கேமரா கண்காணித்து கொண்டே இருக்கும். அதில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் பயணித்தால் அந்த வாகனத்தை நம்பர் பிளேட் தெரியும் படி புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் போலீஸிற்கு அனுப்பி விடும்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

அதை கொண்டு போலீசார் அந்த வாகன உரிமையாளருக்கு அபாராதம் விதித்து விடுவார். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அனுமதிக்கபட்ட வேகத்திற்குள்ளாக தான் செல்லுவார்கள். ஒருவர் அந்த வேகத்தை மீறினால் கூட அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் சரி அவர்களுக்கு அபாராதம் விதிக்கப்படும். இதனால் விபத்துக்கள் பெரும் அளவில் தவிர்க்கப்படும்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

இது மட்டுமில்லாமல் இந்த ஹைவே முழவதும் ஹைவே டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மற்றும் வீடியோ இன்சிடன்ட் டிடெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைவேயில் ஏதேனும் பகுதியில் டிராபிக் ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளை அலார்ட் செய்யும் இதன் மூலம் அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த பிரச்னையை சரி செய்ய முடியும்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

சுற்றுலா மேம்பாடு

இந்த ஹைவே பகுதியில் செல்லும் மக்கள் மத்தியில் இந்தியாவின் சுற்றுலா தளங்கள் குறித்து தெரியவைக்க இந்தியாவின் பாரம்பரியங்களாக உள்ள சில இடங்களை பல்வேறு வகையில் மக்களுக்கு தெரியும் வண்ணம் விடிவமைக்கப்பட்டுள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

இதில் அசோக சிங்கம், அசோக சக்கரம், கோனார்க் கோவில், ஜாலியன்வாலாபாத் படுகொலை சம்பவம், குதுப்மினார், சார்மினார், லால் குயிலா, கிரிட்டி ஸ்தம்ப், இந்தியா கேட், மும்பை கேட்வே ஆப் இந்தியா, ஹாவா மஹால், குஜராத் கலை வடிவங்கள் என பலவற்றை குறிப்பிடும் வண்ணம் படங்கள் மற்றும் சில கட்டுமானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை இது பெருவாரியாக கவரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Eastern Peripheral Expressway: 5 things you do not know. Read in Tamil
Story first published: Monday, June 11, 2018, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X