கனரக வாகன துறையின் 'ரியல்' ஹீரோக்களை அடையாளப்படுத்த ஐஷர் நிறுவனத்தின் புதிய முயற்சி!!

By Balasubramanian

ஐஷர் நிறுவனம், நயி சமே; நயி சோச் ( புதிய நேரத்தில்; புதிய சிந்தனை) என்ற தலைப்பில் இந்திய டிரக் துறையின் வளர்ச்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வித்திட்டவர்களை அடையாளப்படுத்தும் விதத்தில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இஷர் நயி சோச்

இந்திய கமர்ஷியல் வாகன சந்தையில் மிகவும் பரீட்சயமான நிறுவனம் ஐஷர். இந்தியாவில் டிரக் பயன்பாட்டின் வளர்ச்சியை இந்த அளவிற்கு கொண்டு வந்த ஒவ்வொருவரையும் பாராட்டும் வகையில் இந்த முயற்சியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இஷர் நயி சோச்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்டவர்களுடன் மிக நெருக்கமான உணர்வு பிணைப்பை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இதில் வர்த்தக வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, இத்துறையில் தொடர்புடைய எவரும் பங்கேற்கலாம்.

இந்த முயற்சிக்கு இடையில் ஐஷர் நிறுவனம் புதிய ஐஷர் புரோ சீரீஸ் என்ற ஹெவி டியூட்டி டிரக்குகளை களம் இறக்குகிறது. இந்த ரக வாகனம் புதிய டிசைன் மொழி, சிறந்த கேபின் வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த ப்ரோ சீரீஸ் வாகனங்கள் சிறந்த பெர்பாமென்ஸ், அதிக லோடு இழுக்கும் திறன், சிறந்த திருப்பும் திறன், அதிக மைலேஜ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. ஐஷர் நிறுவன வாகனங்களின் தனிச்சிறப்பான குறைந்த பராமரிப்பு, நீடித்த உழைப்பு இந்த வாகனத்திலும் இருக்கிறது.

இஷர் நயி சோச்

நயி சமே நயி சோச் விளக்கம்

இதில் கமர்ஷியல் வாகனங்கள் வைத்து வர்த்தகம் செய்யும் ஆப்ரேட்டர்கள், கமர்ஷியல் வாகன டிரைவர்கள், மெக்கானிக் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த மற்றவர்களை முன்னேற்றும் வகையிலான அல்லது மற்றவர்களால் முன்னேறிய வகையிலான சம்பவத்தை ஒரு கதையாக கோர்த்து இங்கே அனுப்புங்கள். முக்கியமாக கதையில் கீழ் உள்ள பெயர், மற்றும் மொபைல் எண்ணை குறிப்பிட மறக்காதீர்கள்.

இஷர் நயி சோச்

இது குறித்து விஇ கமர்ஷியல் வாகன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் அகர்வால் கூறுகையில் : "ஐஷர் நிறுவனம் எப்பொழுதுமே கமர்ஷியல் வாகன துறையில் புதிய யோசனைகள், முயற்சிகள், கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும். இதன் மூலம் தான். 12 டயர் கொண்ட முழுவதும் பில்ட் செய்யப்பட்ட டிரக், பஸ் சேப்டி கோட் ஆகியவற்றை ஐஷர் ப்ரோ சீரீஸில் கொண்டு வந்துள்ளோம்.

எங்கள் நயி சமே நயி சோச் திட்டம் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பை உருவாக்கவும், ஐஷர் என்ற பிராண்டை மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்லவும் உதவும் என நம்புகிறோம். இதை பயன்படுத்தி நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறோம்.

இதில் எங்கள் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல டிரக் வர்த்தகத்தில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம்." என கூறினார்.

நயி சமே நயி சோச்சில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்

Most Read Articles
Tamil
மேலும்... #ஐஷர் #eicher
English summary
Eicher Nayi Soch — Share Your Life-Changing Story With Eicher. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X