மோடிபோட்ட திட்டம் எல்லாம் வீண்..! ஆய்வு முடிவால் வந்தது புதிய சிக்கல்

உலக வெப்பமயமாதலுக்கு ஒரு காலத்தில் மிக முக்கியமான காரணமாக இருந்தது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த அப்பொழுது பெரிய அளவில் சட்டங்கள் எதுவு

உலக வெப்பமயமாதலுக்கு ஒரு காலத்தில் மிக முக்கியமான காரணமாக இருந்தது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த அப்பொழுது பெரிய அளவில் சட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் அதிக அளவில் மாசுக்கள் வெளியாகி வந்தன.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இதனால் காற்று மாசு பெரும் அளவில் அதிகரித்தது. கார்களில் இருந்து உமிழப்படும் புகையில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக இருந்ததால் இந்த பிரச்னை பெரும் அளவிற்கு நிலவியது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இதை விஞ்ஞானிகள் கண்டறிந்ததும் இதற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் முன் வந்தன. இதையடுத்து வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அளவிட்டு ஒரு வாகனம் இவ்வளவு அளவு கொண்ட புகையைதான் வெளியிட வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

அந்த அளவிற்கு ஏற்ப இன்ஜினின் செயல்பாடு மற்றும் எரிபொருட்களின் தரம் என எல்லாம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் எமிஷன் கண்ட்ரோல் எனப்படும் விதிகள் மூலம் இது கண்காணிக்கப்படுகிறது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இந்தியாவில் தற்போது பிஎஸ் 4 என்ற விதி அமலில் உள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஏப். மாதம் முதல் பிஎஸ் 6 என்ற விதி அமலுக்கு வருகிறது. இந்தியாவில் மாசு அதிகமாக இருப்பதாலும், விரைவாக மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் அரசு பிஎஸ் 5ஐ விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6ஐ அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இந்நிலையில் ஜீரோ எமிஷன் என்ற பெயரில் தற்போது உலகில் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகிறது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மிக அதிகமாக மாறிவிடும் என சில ஆய்வின் முடிவுகள் சொல்கிறது.

எங்களது டெலிகிராம் சேனலில் உங்களை இணைத்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்..!

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

அந்த ஆய்வின் படி 2021ம் ஆண்டில் உலகில் சுமார் 1 கோடி கார்கள் 60 கிலோவாட் பேட்டரி பவர் கொண்ட எலெக்ட்ரிக் கார்களாக இயங்கும். இந்த பேட்டரிகள் எல்லாம் பெரும்பாலும் சீனா, தாய்லாந்து, ஜெர்மனி மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும்.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் ரோட்டில் செல்லும் போது மாசு ஏற்படுத்தாத கார்களாக இருக்கும். ஆனால் அந்த கார்களுக்கான பேட்டரி தயாரிப்பின்போது கன்வென்ஷனல் கார் தன் வாழ்நாளில் எவ்வளவு மாசுவை ஏற்படுத்துமோ அதை விட அதிக மாசுவை இந்த பேட்டரிகள் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

ஒரு எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரியை தயாரிக்க 500 கிராம் அளவிலான மாசு வெளியாகிறது. இது கிட்டத்தட்ட கன்வென்ஷனல் கார் வெளியிடும் மாசுவை காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும்.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இதுவரை எந்த நாடுகளும் இந்த பேட்டரி தயாரிப்பில் எந்த வித மாசு கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவிற்கு பயன்படுத்தும் சீனா, பிரான்ஸ் மற்றும் லண்டனிலும் இதற்கான நடைமுறைகள் இல்லை.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

ஆனால் பேட்டரிகளை எங்கு தயாரிக்கிறோம், எப்படி தயாரிக்கிறோம், பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மின்சாரத்தை எங்கிருந்து பெறுகிறோம் என்பதை பொறுத்து இந்த மாசுவை கட்டுப்படுத்தலாம்.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

தற்போது ஒரு கார் வாங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளில் சரியான பராமரிப்புடன் சுமார் 50 ஆயிரம் கி.மீ ஓடியுள்ளது என கணக்கிட்டு கொள்வோம். அந்த கார் ஏற்படுத்திய மாசுவை விட எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் பேட்டரியை தயாரிக்கும் போது வெளியாகும் மாசு அதிக அளவில் இருக்கும்.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இது மட்டும் அல்லாது அந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மின்சாரத்தை தயார் செய்யும் போது வெளியாகும் மாசுவையும் நாம் கணக்கிட வேண்டும். நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சார தொழிற்நுட்பத்தில் அதிக மாசு ஏற்படும். நிலக்கரியை விட குறைவான மாசுவை அணுமின் நிலையங்கள் வெளியிடுகின்றன.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

காற்றாலை மற்றும் நீர் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மூலம் ஏற்படும் மாசுகள் மேலும் குறைவு. இதனால் எந்த வகை மின்சாரத்தை இந்த காருக்கு பயன்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியமானது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

நிலக்கரி மூலம் மின்சாரத்தை அதிக அளவிற்கு தயாரிக்கும் நாடுகள் டீசல் காரை விட்டு விட்டு எலெக்ட்ரிக் காருக்கு மாறுவதில் எந்த வித பலனும் இருக்காது என்று ஆய்வு முடிவு சொல்கிறது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இது எல்லாம் 60 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியின் அளவை கணக்கிட்டதுதான். பிஎம்டபிள்யூ ஐ3 காரில் 42 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரியும், விரைவில் அறிமுகமாகவுள்ள மெர்ஸிடிஸ் இக்யூசி க்ராஸ் ஓவர் காரில் 80 கிலோ வாட்ஸ் பேட்டரியும், ஆடி இ ட்ரோன் காரில் 95 கிலோ வாட்ஸ் பேட்டரியும் பொருத்தப்படுகிறது. அது தற்போது வெளியாகியுள்ள கணக்கைவிட அதிக அளவிற்கு மாசுவை ஏற்படுத்தும்.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இந்தியாவில் நிலக்கரி மூலம் தயாராகும் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இதை கணக்கிட்டால் இந்தியாவிற்கும் எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றது இல்லைதான். இருந்தாலும் இந்தியாவில் காற்றாலை மற்றும் நீர் மேலாண்மையில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளும் அதிகமாக உள்ளது.

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

இந்த பகுதியில் மின்சார கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது நிச்சயம் நல்ல பலன்களை பெற்று தரும். ஒட்டு மொத்த நாட்டிற்கும் எலெக்ட்ரிக் கார் என்பது தேவையில்லாதது என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஆட்டோமொபைல் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்”

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் சற்றே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

Most Read Articles
English summary
Electric cars polluting more than conventional cars new research report. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X