எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மாருதி சுஸூகி நிறுவனம் எர்டிகா என்ற எம்பிவி காரை இன்று அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி காராகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற இந்த கார் தற்போது

மாருதி சுஸூகி நிறுவனம் எர்டிகா என்ற எம்பிவி காரை இன்று அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி காராகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற இந்த கார் தற்போது மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இந்த மூன்று கார்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதால் புதிதாக எம்பிவி கார் வாங்க நினைப்பவர்கள் இதில் எந்த காரை வாங்க வேண்டும், எந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கிறது, அவர்களது தேவைக்கு எந்த கார் பொருத்தமாக இருக்கும் என குழம்பி வருகின்றனர். அவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் இந்த கார்களில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வித்தியாசங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

வெளிப்புறம்

புதிய மாருதி எர்டிகா கார் பழைய மாடல் எர்டிகா காரை விட அதிக நீளம் மற்றும் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் மூன்றாம வரிசை மற்றும் பூட் ஸ்பேஸ் அதிகமாகியுள்ளது. மேலும் புதிதாக மாற்றப்பட்ட ஹெட்லைட், க்ரோம் கிரில், பெரிய L வடிவ டெயில் லைட், கவர்ச்சியாக அமைந்துள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இந்த கார் 4296x1695x1685 என்ற கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2740 மிமீ வில் பேஸ் மற்றும் 180 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வருகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மஹிந்திரா மராஸ்ஸோ காரை பொறுத்தவரை எர்டிகாவை விட சற்று அதிக இட வசதியுடன் உள்ளது. இந்த கார் 2 மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இந்த காரின் அளவை பொறுத்தவரையில் 4585x1866x1774 என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2760 மிமீ வீல் பேஸ் கொண்டது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை பொறுத்தவரை இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் காராகும். இந்த கார் பெரிய பாடி வடிவமைப்பை கொண்டது. இதன் க்ரோம் கிரில், புஷ்டு பேக் ஹெட்லைட், ஸ்டைலிஷ் எல்இடி டெயில் லைட் ஆகியவை காருக்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இந்த காரின் அளவுகளை பொறுத்தவரை 4735x1830x1795 என்ற அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இது 2750 மிமீ வில் பேஸையும், 1805 கிலோ எடையையும் கொண்டுள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இன்ஜின் மற்றும் கியர்

புதிய எர்டிகா காரை பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 1.4 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மேலும் இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜினை பொறுத்தவரை 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் உடன் 89 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மஹிந்திரா மராஸ்ஸோ காரை பொறுத்தவரை பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இது எர்டிகாவை விட அதிகமான திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த காரின் எடை அதிகமாக இருப்பதால் இதன் திறன் உணரப்படவில்லை. மேலும் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

டொயோட்டா இன்னோவா காரை பொறுத்தவரை ஒரு பெட்ரோல் மற்றும் 2 டீசல் என 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. பெட்ரோலை பொறுத்தவரை 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனுடன் வருகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

டீசல் இன்ஜினை பொறுத்தவரை 2.4 லிட்டர் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது முறையே 148 பிஎச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனுடனும், 172 பிஎச்பி 360 என்எம் டார்க் திறனுடனும் விற்பனைக்கு வருகிறது. இந்த 2.4 லிட்டர் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடனும், 2.6 லிட்டர் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடனும் விற்பனைக்கு வருகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

உட்புறம்

மாருதி சுஸூகி எர்டிகா காரை பொறுத்தவரை எம்பிவி காரில் சிறிய ரக காராக இது இருக்கும். இந்த காரில் மூன்றாம் வரிசை சீட் சிறுவர்களுக்கு ஏற்றதாக மட்டுமே இருக்கும். ஆனால் புதிய காரில் மூன்றாம் வரிசை சீட்டிற்கு அதிக இடம் மற்றும் பூட்டிற்கு அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

நடுவரிசை சீட்டில் அமர்பவர்களுக்காக தனியாக ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரை பொறுத்தவரை பேட்ஜ் தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மஹிந்திரா மராஸ்ஸோவை பொறுத்தவரை அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதியுள்ளது. இந்த கார் அறிமுகப்படுத்தப்படும்போதே அதிக இட வசதிதான் முக்கிய அம்சமாக சொல்லப்பட்டது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மாராஸ்ஸோவை பொறுத்தவரை 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உட்புறத்தில் லைட் பேட்ஜ் தீம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டேஷ்போர்டுகள் பியானோ பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

இன்னோவா கிரிஸ்டா காரை பொறுத்தவரை பிரிமியம் எம்பிவி ரக காராக விற்பனையாகிறது. இந்த காரும் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது. இந்த காரில் சிறப்பான இடவசதியுடன் கூடிய சீட் மற்றும் பெரிய பூட் வசதியும் உள்ளது.இதில் சிவப்பு சாயல் கொண்ட பிரெளவுன் மற்றும் கருப்பு நிற தீம் உடன் விற்பனையாகிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

வசதிகள்

மாருதி சுஸூகி எர்டிகா காரில் 6.8 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் வருகிறது. மேலும் இதில் ரூஃப் மவுண்ட் ஏசி வென்ட்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, புஷ் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐஸோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மஹிந்திரா மராஸ்ஸோவை பொறுத்தவரை ரூஃப் மவுண்ட் ஏசி, லெதர் அப்ஹோல்சரி, எல்இடி டிஆர்எல்ஸ், புரோஜக்டர் ஹெட்லைட், ரியர் வாஷ்பைப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான இன்போடெயின்மென்ட், பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஐஸோபிக்ஸ் சைல்டு மவுண்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை பொறுத்தவரை டச் ஸ்கிரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பார்க்கிங் கேமரா, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எல்இடி புரோஜக்டர் ஹெட்லைட், அம்பியன்ட் லைட், லெதர் அப்ஹோல்சரி பாதுகாப்பு அம்சங்களாக 3 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் இருக்கிறது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

விலை

மாருதி சுஸூகி எர்டிகா காரை பொறுத்தவரை ரூ.7.44 லட்சம் முதல் ரூ.10.90 லட்ம் வரை விற்பனையாகிறது. பழைய மாடலை விட புதிய மாடல் சுமார் ரூ.1 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளது.

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

மஹிந்திரா மராஸ்ஸோ காரை பொறுத்தவரை இன்னோவா மற்றும் எர்டிகாவிற்கு இடைப்பட்ட விலையில் உள்ளது. இந்த கார் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

எர்டிகா Vs மராஸ்ஸோ Vs இன்னோவா எது பெஸ்ட்?

எம்பிவி ரக கார்களிலேயே இன்னோவா கிரிஸ்டா கார்கள் விலை அதிகமான காராக விற்பனையாகிறது. இது ரூ.14.65 லட்சம் முதல் ரூ.23.06 லட்சம் வரை விற்பனையாகிறது.

Most Read Articles

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Ertiga marazzo innova which one is best.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X