மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

மகேந்திரா எக்ஸ்யூவி 500 காரின் பெட்ரோல் வேரியண்டை விட, டீசல் வேரியண்ட்தான் அதிகம் விற்பனையாகி வருகிறது. இது ஏன்? என்பது குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

மகேந்திரா எக்ஸ்யூவி 500 கார், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை வெறும் 45 பெட்ரோல் வேரியண்ட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதற்கு நேர் எதிராக, இதே கால கட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட மகேந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

மகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் காரின் விற்பனை மிகவும் குறைவாக இருப்பது மகேந்திரா நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் வேரியண்ட் மிகவும் எளிதாக கிடைக்கிறது. ஆனால் மக்கள் டீசல் வேரியண்டைதான் விரும்புகின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

மகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் காரில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் விலை 15.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

மகேந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் கார் இந்தியாவில் பிரபலம் அடையாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மகேந்திரா எக்ஸ்யூவி 500 போன்ற பெரிய எஸ்யூவி கார்களுக்கு அதிக அளவிலான பெட்ரோல் தேவைப்படும். தற்போது பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த காரை மக்கள் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

இதனிடையே சமீபத்தில் மகேந்திரா எக்ஸ்யூவி 500 பேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

பெட்ரோல் வேரியண்டை காட்டிலும், இந்த இன்ஜின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுபோன்ற காரணங்களால்தான் பெட்ரோல் இன்ஜினை விட, டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மகேந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

விற்பனை புள்ளி விபரங்கள் அதனை உறுதிபடுத்துகின்றன. மக்கள் அனைவரும் பெட்ரோல் வேரியண்டுக்கு பதிலாக டீசல் வேரியண்டைதான் விரும்பி வாங்குகின்றனர் என மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிஸ்னஸ் பிரிவின் தலைவர் டாக்டர் பவன் கோயங்காவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்?

கடந்த 6 மாதங்களில், 10,198 மகேந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்கள் 45 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Everyone wants diesel Mahindra XUV500 instead of petrol version, says MD of Mahindra. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X