நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

By Arun

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த மற்றும் லக்ஸரி கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ். அப்படிப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்தும் 5 இந்திய பெண்கள் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

பிரியங்கா சோப்ரா

ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான இந்திய பெண் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார் என்றால், அது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்தான்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலையை கேட்டால், ஒரு நிமிஷம் தலை சுத்தும். ஆம், இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 5.25 கோடி ரூபாய். இந்த காரை பல்வேறு வழிகளில் ஆல்டர் செய்து கொள்ள முடியும்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

பிரியங்கா சோப்ராவிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் இன்டீரியர்கள், சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரியங்கா சோப்ராவை போல், அவரது காரின் இன்டீரியர்களும் அழகாக காட்சியளிக்கின்றன.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

என்ட்ரி லெவல் ரோல்ஸ் ராய்ஸ் காரான இதில், 6.6 லிட்டர் டிவின் டர்போசார்ஜ்டு வி12 (V12) பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 562 பிஎச்பி பவர் மற்றும் 780 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

மன்யட்டா தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மன்யட்டா தத். சஞ்சய் தத் ப்ரொடக்ஸன் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக மன்யட்டா தத் உள்ளார். பிரியங்கா சோப்ராவை போல் மன்யட்டா தத்தும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரைதான் பயன்படுத்துகிறார்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

இந்த காரில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. சஞ்சய் தத்தான் இந்த காரை, தனது மனைவி மன்யட்டா தத்திற்கு பரிசாக வழங்கினார். 2010 மாடல் காரான இது, வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ராவின் காரில் உள்ள அதே இன்ஜின்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

மாதுரிமா பால்சிங் ஜார்ஜ்

புகழ்பெற்ற பிஸ்னஸ்மேன்களில் ஒருவரான பால்சிங் ஜார்ஜ் அதீத கார் பிரியர். இவரது மனைவி மாதுரிமாவும் அப்படித்தான். மாதுரிமா தனது கணவருடன் இணைந்து லாஸ்ட் ஜெனரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை கடந்த 2010ம் ஆண்டு வாங்கினார்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

இதன்மூலம் இந்த காரை வாங்கிய முதல் இந்தியர்கள் என்ற பெருமையை பால்சிங் ஜார்ஜ்-மாதுரிமா தம்பதி பெற்றனர். இவர்களது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்னமும் அந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

நடஷா பொன்வாலே

நடஷா பொன்வாலே புகழ் பெற்ற பெண் தொழிலதிபர்களில் ஒருவர் மட்டுமல்ல. பேஷன் ஆர்வலரும் கூட. பழைய ஜெனரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரை அவர் வைத்துள்ளார். இந்த காருடன் அவரை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

மிகவும் லக்ஸரியான ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் விலை உயர்ந்தது. மார்க்கெட்டில் இந்த காரின் விலை சுமார் 4.2 கோடி ரூபாய். தற்போது இதற்கு பதிலாக புதிய மாடல் வந்து விட்டது. தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக இது உள்ளது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

கவர்ச்சிகரமான செடான் வகை காரான இதில், 6.8 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 453 பிஎச்பி பவர் மற்றும் 724 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் திறன் வாய்ந்தது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

அபினி ஷோனி

இந்தியாவை சேர்ந்த ஷோஹன் ராய் துபாயில் புகழ்பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது மனைவி அபினி ஷோனி. இவர்களது 25வது திருமண நாள் சமீபத்தில் வந்தது. இதற்காக தனது மனைவி அபினி ஷோனிக்கு, ரோல்ஸ் ராய்ஸ் கலினன் காரை ஷோஹன் ராய் பரிசாக வழங்கினார்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

இதன்மூலம் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் காரை சொந்தமாக்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை அபினி ஷோனி பெற்றார். இதற்காக துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அபினி ஷோனிக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த முதல் எஸ்யூவி வகை கார் என்ற சிறப்பை கலினன் பெறுகிறது. சர்வதேச மார்க்கெட்களில் இதன் விலை சுமார் 2.2 கோடி ரூபாய். இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால், இறக்குமதி வரியுடன் சேர்த்து சுமார் 5 கோடி ரூபாய் வரை வரும் என தெரிகிறது.

நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..

இதன்மூலம் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று என்ற பெருமையை ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பெறுகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்கும் திறன் வாய்ந்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..
  2. 5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!
  3. 2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Most Read Articles

English summary
Famous Indian Womens Who Owns Rolls Royce. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X