விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTAGS கார்டு மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா

அடுத்த நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTAGS கார்டு மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

டெல்லியில், 58 ஆம் ஆண்டு SIAM ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அவர் பேசினார். அப்போது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும் தகவல்களை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தேக்கமடைந்து கால விரயம் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

அதன்படி, நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்திலும் ஃபாஸ்ட்டேக் அட்டை மூலமாக மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார். இந்த RFID FASTAGS முறை முற்றிலும் சுங்கஞ்சவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உருவாக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களின் நேரத்தையும் எரிபொருளை மிச்சம் செய்யவும் அருமையான திட்டம்.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

இந்த FASTAGS விற்பனையை இந்திய அரசாங்கம் இந்தியன் ஆயில் கார்பொரேஷன்(INDIAN OIL CORPORATION) உடன் கைகோர்த்துக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிக பெட்ரோல் பம்புகளை கொண்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தால் இந்த அட்டைகளை மக்களிடம் சீக்கிரம் கொண்டு சேர்க்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

தற்போதய ஆய்வு புள்ளிகள் படி இந்தியாவில் பதினைந்து முதல் இருபது சதவிகித மக்களே இந்த FASTAGS பயன்பாட்டை கொண்டுள்ளனர் என்கிறது. இந்த தொழில்நுட்பம் எளிதாகவும் நேரத்தை குறைக்க நல்லதாகவும் உள்ளதால் கண்டிப்பா இது சீக்கிரம் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

இந்த FASTAGS கார்டானது தற்போது குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. அவை SBI , ICICI , FEDERAL போன்றவை. மேலும் இந்த RFID FASTAGS கார்டினை அணைத்து சுங்கஞ்சாவடிகளிலும் அமையப்பெற்ற COMMON SERVICES CENTRE (CSC)யிலும் பெற்று கொள்ளலாம்.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

NHAI நிறுவனம் இந்த பாஸ்டாக்ஸ் விற்பனையை சென்ற வருட செப்டம்பர் மாதம் ஆன்லைன் வாயிலாகவும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற இதன் கலந்தாய்வில் போது நிதின் கட்கரி அனைத்து கனரக வாகனத்திலும் , ஸ்பீட் கவர்னர் எனப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவியின் கட்டாயத்தை நீக்க இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இது சென்ற மாதம் கர்நாடக ஹை கோர்ட்டினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்படவேண்டியது.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

ஸ்பீட் கவர்னர்ஸ் எனப்படும் இந்த வேக கட்டுபாட்டு கருவி வாகனத்தின் அதிகபட்ச வேகத்தை வரையறுக்க வல்லது. இதனை நடைமுறை படுத்த இந்திய அரசாங்கம் சென்ட்ரல் மோட்டார் வெஹிகிள்ஸ் ரூல்ஸ் (CENTRAL MOTOR VEHICLE RULES) எனப்படும் சட்டத்தில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். அதுவே இது முறையே அமுல்படுத்துவதற்கான வழி.

விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி அறிமுகம்!!

FASTAG அட்டை RFID என்ற தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்களை சுங்கஞ்சவடிகளில் அவர்களுக்கான தொகையை எலக்ட்ரானிக் முறையில் செலுத்த ஏதுவாய் அமைகிறது. RFID எனப்படும் அட்டை வாகனங்களின் விண்ட்சீல்டில் பொருத்தப்பட்டு இருக்கும், வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் பொழுது அதற்குரிய பணம் தானாகவே பரிமாற்றம் செய்யப்படும். இதனின் விளைவாக நேர விரயம் மற்றும் எரிபொருள் வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும். சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் பயன்படும்.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சுறா மீன் வடிவில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை கீழே பாருங்கள்..

Most Read Articles
English summary
Road Transport and Highways Minister, Nitin Gadkari has announced FASTags for all toll lanes in India, in the next four months. The minister made the announcement at the 58th SIAM Annual Convention in Delhi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X