தமிழகத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! 8 வயது பென்ஸ் கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

தமிழகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 80 ஆண்டு கால கனவை, தனது 88வது பிறந்தநாளில் நிறைவேற்றியிருக்கிறார்.

By Arun

தமிழகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 80 ஆண்டு கால கனவை, தனது 88வது பிறந்தநாளில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கார் ஆர்வலர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவு, வாழ்க்கையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரையாவது வாங்கி விட வேண்டும் என்பதுதான்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

92 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1926ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெர்மனி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களை அவ்வளவு கவர்ந்துள்ளது. அதன் சொகுசு இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் கூட, மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருந்தாலே ஒரு தனி கவுரவம் கிடைக்கிறது.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற கனவை ஒரு சிலரால் நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் தேவராஜன் அதற்கு நேர் எதிர். மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி தேவராஜன். இவருக்கு தற்போது 88 வயதாகிறது. இளம் வயதில் தேவராஜன் சைக்கிளில்தான் பயணம் செய்வார். 80 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 8 வயதாக இருக்கும்போது, மெர்சிடிஸ் பென்ஸ் காரை முதன் முறையாக பார்த்துள்ளார்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

ஆனால் அப்போது அதன் பெயர் மெர்சிடிஸ் பென்ஸ் என்பது கூட அவருக்கு தெரியாது. எனினும் அந்த கார் அவரது மனதில் நன்றாக பதிந்து விட்டது. குறிப்பாக 'த்ரி பாயிண்டட் ஸ்டார்' கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லோகோவில் அவர் மயங்கி விட்டார்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

எப்படியாவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காரை வாங்கி விட வேண்டும் என்ற ஆசை அவருக்குள் அப்போதே பிறந்து விட்டது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாள் இந்த கனவை நனவாக்கி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் தேவராஜன்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

80 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இவ்வளவு நீண்ட காலத்திற்கு பிறகு, அவரது கனவு நிறைவேறியுள்ளது. ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் காரை தற்போது சொந்தமாக வாங்கியுள்ளார் தேவராஜன். அவரும், அவரது குடும்பத்தினரும் காரை உற்சாகமாக டெலிவரி எடுக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தனது நிலத்தில் மாட்டு வண்டி ஓட்டி கொண்டிருந்த விவசாயி தேவராஜன் இன்று மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணிக்கிறார். அதை விட அவரது 80 ஆண்டு கால கனவு நிறைவேறியிருப்பதுதான் இதில் நெகிழ்ச்சியான விஷயம்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்களே... அப்படித்தான் தேவராஜனின் கதையும்... தேவராஜனின் 80 ஆண்டு கால கனவு நிறைவேற, அவரது அன்பிற்குரிய மனைவியும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

மனைவியின் உதவியுடன் கனவை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சி, அவர் முகத்தில் புன்னகை வடிவில் வெளிப்படுகிறது. மாட்டு வண்டி மற்றும் சைக்கிளில் இருந்து, முழுக்க முழுக்க தனக்கு சொந்தமான பென்ஸ் காரில் ஏறும்போது, வாழ்நாள் சாதனையை எட்டிவிட்ட பெருமை அவரிடம் பொங்கி வழிகிறது.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் காரை டெலிவரி எடுத்த தினம் தேவராஜனின் பிறந்த நாள். குழந்தை பருவத்தில் உண்டான கனவை 88வது பிறந்த நாளில் நிறைவேற்றியிருக்கிறார் தேவராஜன்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் காருக்கு சொந்தக்காரராகியுள்ளார் தேவராஜன். சென்னையில் உள்ள டிரான்ஸ் கார் நிறுவனத்தில் அந்த காரை அவர் டெலிவரி எடுத்திருக்கிறார். மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் கார் இன்று தேவராஜன் குடும்பத்தின் ஒரு அங்கம்.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் கார், ரூ.30.93 லட்சம் முதல் ரூ.31.98 லட்சம் வரையிலான பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போலர் சில்வர், மவுண்டெய்ன் கிரே, ஜூபிடர் ரெட், சர்க்யூஸ் வைட் என 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

1,595 சிசி, 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2,143 சிசி, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் என 2 வேரியண்ட்களில் மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் கார் விற்பனையாகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் 121 பிஎச்பி, 200 என்எம் டார்க் திறனையும், டீசல் இன்ஜின் 134 பிஎச்பி, 300 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது.

தமிழகத்தில் நெகிழ்ச்சி! பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 8 வயது கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி...

இரண்டுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதுதான். மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் கார் இந்திய மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி ஏ3 மற்றும் வால்வோ வி40 உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

Most Read Articles

மெர்சிடிஸ் நிறுவனம் சமீபத்தில் தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது.

English summary
Finally, this tamilnadu farmer bought benz car- Fulfils his 80 year dream. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X