25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

By Balasubramanian

இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லேட்டஸ்ட் ரோல்ஸ்ராய்ஸ் காரான கல்லீனன் காரை தன் மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கவுள்ளார் இந்தியாவை சேர்ந்த துபாய் தொழில் அதிபர் ஷோஹன். இந்த காரை வாங்கும் முதல் இந்தியர் இவர் தான்.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

ரோல்ராய்ஸ் நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் கல்லினன் என்ற காரை அறிமுகப்படுத்தியது. பல நாட்களாக ரோல்ராய்ஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கார் தற்போது உலகளவில் பல்வேறு நாடுகளில் சுறுசுறுப்பாக விற்பனையாகி வருகிறது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஷோஹன் ராய் என்பவர் துபாயில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் மிகப்பெரிய ரோல் ராய்ஸ் காரின் ரசிகர். இவரிடம் சில ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்நிலையில் இவர் இவரது மனைவி அபினி ஷோஹனிற்கு தங்களது 25வது திருமண நாளில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற காரை பரிசளிக்க விரும்பினார். இதையடுத்து அந்த காரை புக் செய்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை புக் செய்த முதல் இந்தியர் இவர் தான்.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்நிலையில் ரோல்ராய்ஸ் நிறுவனம் அவர்களது புக்கை ஏற்று அவர்களுக்கு காரை வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கான சான்றையும் அவர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த காரை அவர்களது 25வது திருமண நாளான டிசம்பர் 12ம் தேதி டெலிவரி செய்யும் படி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு ஷோஹன் கேட்டு கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ரோல்ராய்ஸ் நிறுவனம் அவர்களுக்கு கார் வழங்க ஒப்பு கொண்டு சான்றிதழை வழங்கியிருந்தாலும் தற்போது தான் அந்த தகவல் வெளியாகியுள்ளது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

ரோல்ராய்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கார்களில் கல்லீனன் கார் ஒன்றும் மிகவும் விலை உயர்ந்த கார் இல்லை. சர்வதேச அளவில் அளவில் இதன் விலை ரூ 2.2 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்த காரை இந்தியாவில் வாங்கினால் இறக்குமதிக்கான வரி எல்லாம் சேர்த்து ரூ 5.5 கோடி வரை இதன் விலை இருக்கும்.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

கல்லீனன் காரை பொருத்தவரை ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் 8 காரில் உள்ள லுக்கை தான் பெற்றுள்ளது. மேலும் அந்த காரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த கல்லீனன் காரிலும் உள்ளது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த கல்லினன் கார் 4 மற்றும் 5 சீட்கள் கொண்ட ஆப்ஷன்களில் வருகிறது. இந்த சீட்கள் எல்லாம் எலெக்ட்ரிக்கல் மூலமாக கண்ரோல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டனை அழுத்தினாலேய இந்த கார்களைின் சீட்களை மடித்து கொள்ளும் வகையில் உருவாக்கப்ட்டுள்ளது. இந்த சீட்கள் முழுமையாக லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனனில் மல்டி டிரைவிங் மோடு வசதி கொடுக்கப்ட்டுள்ளது. குறிப்பாக மேஜிக் கார்பெட் ரைடு சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் செல்ப் லேவலிங் ஏர் சஸ்பென்ஸன், ஹீட்டட் ஆர்ம் ரெஸ்ட், சீட் மசாஜர், ஸ்டார்லிட் ரூப் லைன், உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 6.75 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் அதிகமான டார்க் 1900 ஆர்பிஎம்மில் கிடைக்கிறது.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டதுடன் வருகிறது. இது புல், பனி, மணல், சரடு, சகதி, ஈரமான புல்வெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றார் போல் டிரைவ் செய்ய டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

நாம் செலக்ட் செய்யும் மோடிற்கு ஏற்ப எந்தெந்த வீல்களில் டிரைவ் செய்ய எவ்வளவு பவர் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு தகுந்த பவரை வழங்கி பயணிப்பவர்களின் பயணத்தை சுகமாக்கும். இந்த கார் 540 மீமீ உயர தண்ணீரிலும் எந்த வித பிரச்னையும் இல்லாமல் செல்லும்.

25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்

இந்த காரை வாங்கவுள்ள கேரளாவை சேர்ந்த் ஷோஹன். காரை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவர் திட்டமிட்டபடி இந்தியாவிற்கு இந்த காரை அவர் கொண்டு வந்தால் இந்தியாவில் வரும் முதல் ரோல்ராய்ஸ் கல்லீனன் கார் இது தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்
  2. பெட்ரோலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா! வெச்ச செக் அப்படி!
  3. சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!
  4. டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை
  5. போனியாகலை... மாருதி இக்னிஸ் காரின் டீசல் மாடல் உற்பத்தி நிறுத்தம்?
Most Read Articles

English summary
This lady is the FIRST Indian to buy the Rolls Royce Cullinan SUV. Read in tamil
Story first published: Thursday, June 14, 2018, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X