இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக700 பி

By Saravana Rajan

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

கடந்த ஆண்டு நடந்த குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு ஆட்டோமொபைல் திருவிழாவில், போர்ஷே 911 காரின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஜிடி-2 ஆர்எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. போர்ஷே 911 மாடலில் அதிவேகமான மாடலாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

இதற்காக இந்த காரில் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் விசேஷமான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருந்தன. மேலும், இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் சில யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டன.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

இந்த நிலையில், இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் காரை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் பூபேஷ் ரெட்டி ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். மேலும், தனது விருப்பத்திற்கு ஏற்ப ஏராளமான சிறப்பம்சங்களை சேர்க்கச் சொல்லி ஆர்டர் செய்து இப்போது டெலிவிரி பெற்றிருக்கிறார். அண்மையில் இந்த கார் பூபேஷ் ரெட்டியிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

இந்த காரில் முன்புறத்தில் 21 அங்குல மெக்னீசியத்தாலான சக்கரங்களும், பின்புறத்தில் 20 அங்குல மெக்னீசியத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்று, ஏராளமான விசேஷ தன்மை கொண்ட உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், சாதாரண மாடலைவிட 30 கிலோ வரை எடை குறைவானதாக இருக்கிறது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

போர்ஷே 911 டர்போ எஸ் அடிப்படையிலான இந்த காரில் ஃப்ளாட் 6 சிலிண்டர் அமைப்புடைய 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக700 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த காரில் 7 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

பின்புறத்தில் உள்ள எஞ்சின் சக்தியானது பின்சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 340 கிமீ வேகம் வரை எட்டும் திறன் படைத்தது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

'Weissach Package' என்ற விசேஷ ஆக்சஸெரீகள் பேக்கேஜ் மூலமாக இந்த கார் தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. கார்பன் ஃபைபர் பானட் மற்றும் கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைட்டானியம் ரோல் கேஜ், அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள் என அனைத்துமே ஒவ்வொரு விதத்திலும் தனித்துவமாக இருக்கிறது.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில், ஜெர்மனியில் உள்ள நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கை அதிவேகத்தில் கடந்த சாதாரண சாலையில் பயன்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலாகவும் பெருமை பெற்றது. தற்போது அந்த இடத்தை லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் பிடித்துவிட்டது. எனினும், செயல்திறனில் மிகச் சிறப்பான கார் என்பதற்கு உதாரணமாக அந்த நிகழ்வை குறிப்பிடலாம்.

இந்தியாவின் முதல் போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் கார் பெங்களூரில் டெலிவிரி!!

புதிய போர்ஷே 911 ஜிடி-2 ஆர்எஸ் ரேஸ் கார் ரூ.3.88 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வரி, பதிவுக் கட்டணம் உள்பட ரூ.4 கோடி மதிப்புடையதாக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
India's first Porsche 911 GT2 RS – the fastest and maddest modern road-legal 911 – has been delivered in Bangalore. Sold through Porsche Centre Bengaluru, the supercar was bought by Bangalore-based businessman, Mr Boopesh Reddy.
Story first published: Friday, August 17, 2018, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X