பெட்ரோல், டீசல் விலையில் அரங்கேறிய விபரீதம்.. இந்திய வரலாற்றில் முதல் முறை என்பதால் உச்சகட்ட பீதி

இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மோசமான விபரீதம் ஒன்று முதல் முறையாக அரங்கேறியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மோசமான விபரீதம் ஒன்று முதல் முறையாக அரங்கேறியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதுதவிர மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரி காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதில், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே இந்தியா முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாவது கிடையாது. அதற்கு மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக வலுத்து வருகிறது. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில், ஒரே வரி என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறையும்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதன் காரணமாகதான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரி மூலமாக கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழக்க வேண்டியது வரும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

எனவே தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்கு என மாதந்தோறும் பெருந்தொகையை அவர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் மிக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் மத்திய அரசு எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. அத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையில் மோசமான புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

பொதுவாக இந்தியாவில் பெட்ரோலின் விலையை காட்டிலும் எப்போதும் டீசலின் விலை குறைவாகவே இருக்கும். அதாவது பெட்ரோலை விட 10 ரூபாய் குறைவான விலையிலேயே டீசல் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் சமீபகாலமாக இந்த நிலையில் மாற்றம் தென்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோலின் விலையை டீசலும் நெருங்கி வந்தது. இந்த சூழலில் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோலை விட அதிகமான விலைக்கு டீசல் சென்றுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

இந்தியாவில் பெட்ரோல் விலையை டீசல் விலை கடப்பது இதுவே முதல் முறை. பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமான இந்தியாவின் முதல் மாநிலம் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒடிசா.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நேற்றைய (அக்டோபர் 21) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 80.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 80.69 ரூபாய்க்கு விற்பனையானது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசலின் விலை 12 காசுகள் அதிகம்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

புவனேஸ்வர் நகரில் இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 80.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு லிட்டர் டீசலோ 80.40 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலை காட்டிலும் 13 காசுகள் அதிகமான விலையில் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசுதான் காரணம் என பிஜூ ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, மாநில அரசு வாட் வரியை குறைக்காததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. ஒடிசா மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிற்கும் 26 சதவீத வாட் வரியை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாமானிய மக்கள்தான். குறிப்பாக டீசல் கார் வாங்கிய மக்கள்தான் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

பொதுவாக பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்கள் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பெரும்பாலானோர் டீசல் கார்களைதான் தேர்வு செய்கின்றனர். பெட்ரோலை விட டீசலின் விலை குறைவு என்பதே இதற்கு மிக முக்கிய காரணம்.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

ஆனால் தற்போது பெட்ரோல் விலையை டீசலின் விலை கடந்து சென்றுள்ளது. இதனால் டீசல் கார் வாங்கிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதவிர டீசலில் இயங்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

அத்துடன் இனி பெட்ரோல் கார் வாங்குவதா? அல்லது டீசல் கார் வாங்குவதா? என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.22 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையில் மோசமான அத்தியாயம் தொடக்கம்.. மக்கள் பீதி

தமிழகத்திலும் பெட்ரோலின் விலையை டீசலின் விலை நெருங்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை அதிகம் என்ற மோசமான வரலாறு இங்கும் உருவாகி விடுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Most Read Articles

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
First Time In Indian History Diesel Price Crosses Petrol In Odisha. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X