ஒரு கண்ணில் பார்வை இல்லாத மதுரை வாலிபருக்கு லைசென்ஸ்! வாங்கியது எப்படி என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

ஒரு கண்ணில் பார்வை இல்லாத மதுரை வாலிபர் ஒருவர், டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளார். அவர் எப்படி டிரைவிங் லைசென்ஸ் வாங்கினார்? என்ற விரிவான தகவல்கள், உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு கண்ணில் பார்வை இல்லாத மதுரை வாலிபர் ஒருவர், டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளார். அவர் எப்படி டிரைவிங் லைசென்ஸ் வாங்கினார்? என்ற விரிவான தகவல்கள், உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்க லைசென்ஸ் பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் ஒரு கண்ணில் பார்வை இல்லாவிட்டாலும் கூட, லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதனால் ஒரு கண்ணில் பார்வை இழந்தவர்களால், லைசென்ஸ் பெற முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இரண்டு கண்களிலும் பார்வை இல்லாதவர்களால், வாகனங்களை இயக்க முடியாது என்பது உண்மைதான். என்றாலும் ஒரு கண்ணில் மட்டும் பார்வை இழந்தவர்களால், வாகனங்களை நன்றாக இயக்க முடியும். அப்படிப்பட்ட பலர் இந்தியாவில் உள்ளனர்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இருந்தாலும் என்ன செய்வது? ஒரு கண்ணில் பார்வை இல்லாவிட்டாலும் கூட, லைசென்ஸ் வழங்கப்படாது என்ற விதி உள்ளதே. எனவே வாகனங்களை நன்கு இயக்குவதற்கான ஆர்வமும், திறமையும் இருந்தும் கூட, ஒரு கண்ணில் பார்வை இல்லாத காரணத்தால் பலர் லைசென்ஸ் கிடைக்காமல் உள்ளனர்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வசித்து வரும் சிராப்திநாத்தும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். தற்போது 26 வயதாகும் சிராப்திநாத்துக்கு, இடது கண்ணில் பார்வை இல்லை. இரண்டு வயதாக இருக்கும்போது, சிராப்திநாத் விபத்து ஒன்றில் சிக்கினார்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இதன் காரணமாக இடது கண் பார்வையை அவர் இழந்தார். என்றாலும் தன்னம்பிக்கையை மட்டும் அவர் இழந்து விடவில்லை. கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதில், சிராப்திநாத் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஆனால் இடது கண்ணில் பார்வை இல்லை என்ற காரணத்தால், சிராப்திநாத்துக்கு டிரைவிங் லைசென்ஸ் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் எப்படியாவது டிரைவிங் லைசென்ஸ் வாங்கி விட வேண்டும் என சிராப்திநாத் துடியாய் துடித்து கொண்டிருந்தார்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஏற்கனவே குறிப்பிட்டபடி சிராப்திநாத் ஒருபோதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே இல்லை. சட்ட புத்தகங்களை புரட்டினார். பல்வேறு விதிகளை அலசி ஆராய்ந்தார். அப்போதுதான் மத்திய அரசின் ஓர் முக்கியமான அறிவிப்பு குறித்து அவருக்கு தெரியவந்தது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஒரு கண்ணில் மட்டும் பார்வை உள்ளவர்களுக்கும், லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

அதாவது வாகனம் ஓட்டுவதற்கு உடல் ரீதியாக ஃபிட் என நிரூபித்து காட்ட வேண்டும். அதன்பின் வழக்கமான டிரைவிங் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும். இவைகளில் வெற்றி பெற்றால், ஒரு கண்ணில் பார்வை இல்லாவிட்டாலும் கூட டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில், ஒரு கண்ணில் பார்வை இல்லாதவர்களுக்கும், டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும் என இதன்மூலமாக ஆர்டிஓ-க்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தின. அவ்வளவு ஏன்? யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி கூட, உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஆனால் தமிழகத்தில் இது குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இல்லை... இங்கு இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்றே சொல்லலாம். ஒரு கண்ணில் பார்வை இல்லாதவர்களுக்கு லைசென்ஸ் வழங்க, ஆர்டிஓ-க்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசின் உத்தரவு குறித்து சிராப்திநாத்துக்கு தெரியவந்தது. உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிராப்திநாத் கையில் எடுத்தார். இதில், மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தமிழகத்திற்கும் பொருந்துமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஒரு கண்ணில் பார்வை இல்லாவிட்டாலும், மேற்கண்ட நிபந்தனைகளில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு லைசென்ஸ் வழங்க ஆர்டிஓ-க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழகத்திற்கும் பொருந்தும் என்ற பதில் அவருக்கு கிடைத்தது.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

உடனடியாக லைசென்ஸ் கேட்டு, மதுரை தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் சிராப்திநாத் விண்ணப்பித்தார். இனிதான் அவருக்கு லைசென்ஸ் வழங்க முடியாது என யாராலும் மறுக்க முடியாதே. எனவே அவருக்கு லைசென்ஸ் வழங்குவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிராப்திநாத்துக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு எந்த கண்ணில் பார்வை உள்ளதோ, அதன் பார்வை திறன் குறைந்தபட்சம் 12க்கு 6 என்ற அளவில் இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

இதனை அடிப்படையாக கொண்ட பரிசோதனைகள் சிராப்திநாத்துக்கு நடத்தப்பட்டது. இதில், அவர் தேர்ச்சி பெற்றார். அத்துடன் அதன்பின் நடத்தப்பட்ட டிரைவிங் தொடர்பான பரிசோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதன்மூலமாக தனது நீண்ட நாள் கனவை சிராப்திநாத் எட்டி விட்டார்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஆம், சிராப்திநாத்துக்கு தற்போது டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிட்டது. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ள ஒருவருக்கு தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தற்போது டூவீலர், கார் ஆகியவற்றை ஓட்டுவதற்கான லைசென்ஸ் சிராப்திநாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்தும், தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதால், சிராப்திநாத் வெகுவாக பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த பெருமையை பெற்ற முதல் நபர்... தமிழக அரசை எதிர்த்து வெற்றி கண்ட மதுரை மாற்றுத்திறன் வாலிபர்...

அத்துடன் பலருக்கு ரோல் மாடலாகவும் உருவெடுத்துள்ளார். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ளதால் நமக்கு லைசென்ஸ் கிடைக்காது என யாரும் மனம் தளர வேண்டாம். இந்த மதுரக்காரரை முன்மாதியாக கொண்டு அவர்களும் லைசென்ஸ் பெற முடியும். மதுரக்காரங்கனாலே கெத்துதான பாஸ்...

Most Read Articles
English summary
First Time In Tamil Nadu: Madurai Man With Monocular Vision Gets Driving License. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X