ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் எஸ் என்ற பெயரில் புதிய டாப் வேரியண்ட் மற்றும் சிக்னேச்சர் எடிசன் மாடல்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் எஸ் என்ற பெயரில் புதிய டாப் வேரியண்ட் மற்றும் சிக்னேச்சர் எடிசன் மாடல்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் என்பது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே குறுகிய காலத்திற்கு விற்பனை செய்யப்படும். மற்றொரு மாடலாக வந்திருக்கும் எஸ் என்ற பெயரிலான புதிய வேரியண்ட் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடலில் சன்ரூஃப் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் வேரியண்ட்டில் ஆப்ஷனல் மாடலாக வந்துள்ளது. சிக்னேச்சர் எடிசனின் பெட்ரோல் மாடல் ரூ.10.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.10.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் பெட்ரோல் மாடல் ரூ.11.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் எஸ் வேரியண்ட் ரூ.11.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, முந்துவோருக்கு இந்த சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பை பெற முடியும்.

சிக்னேச்சர் எடிசன்

சிக்னேச்சர் எடிசன்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் வேரியண்ட்டில் சன்ரூஃப் வசதி கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். உட்புறத்தில் நீல வண்ண அலங்கார பாகங்களும், தையல் வேலைப்பாடு செய்யப்பட்டு சீட் கவர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

சிக்னேச்சர் எடிசனின் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுவும் புதிய எஞ்சின்தான். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரை வழங்க வல்லது. இந்த மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்டில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. டீசல் மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்க்கலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்டில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளது. கரும்பூச்சு பின்னணி கொண்ட HID ஹெட்லைட் யூனிட் மற்றும் பனி விளக்குகளுக்கான ஆபரண உதிரிபாகம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

க்ரில் அமைப்பு, கூரை மற்றும் ரூஃப் ரெயில்கள் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன. 17 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சாதாரண ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியைவிட அதிக கவர்ச்சியாக இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

உட்புறத்தில் ஆரஞ்ச் வண்ண அலங்கார பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இன்டீரியர் கவர்ச்சியாகவும், பிரிமியமாகவும் தோற்றமளிக்கிறது. இந்த மாடலில் 4.2 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தின் தகவல்களை இந்த திரை மூலமாக பெற முடியும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மற்றும் புதிய எஸ் வேரியண்ட் அறிமுகம்!!

மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களால் ஏற்பட்டுள்ள சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த இரண்டு புதிய மாடல்களையும் ஃபோர்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

விலை விபரம்

மாடல் பெட்ரோல் டீசல்
சிக்னேச்சர் எடிசன் ₹ 10.40 லட்சம் ₹ 10.99 லட்சம்
எஸ் வேரியண்ட் ₹ 11.37 லட்சம் ₹ 11.89 லட்சம்
Most Read Articles
English summary
Ford EcoSport S, Signature Edition with sunroof launched India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X