ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

By Saravana Rajan

கூடுதல் வசதிகள் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்தநிலையில், ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவியின் வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

முன்பக்க க்ரில், பனி விளக்குகள் மற்றும் சில்வர் உதிரிபாகங்களுடன் அலங்காரம் மற்றும் புதிய பம்பர் அமைப்புடன் மாற்றங்கள் கண்டுள்ளது. இந்த புதிய மாடலில் 6 ஸ்போக்ஸ் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவியில் கூடுதலாக பாசிஸ் கீ லெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்று, புதிய அப்ஹோல்ஸ்ட்ரியுடன் வர இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

வெளிநாடுகளில் புதிய ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவியில் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 180 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மாடலிலும், 213 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு மாடலிலும் வெளிவர இருக்கிறது. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

அதேநேரத்தில், இந்தியாவில் இந்த புதிய எஞ்சின் ஆப்ஷன் வர வாய்ப்பில்லை. தற்போது பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படும். 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும், 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

அடுத்த ஆண்டு இந்த புதிய பொலிவு கூட்டப்பட்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர், விரைவில் வர இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். இந்த செக்மென்ட்டில் விற்பனையில் இரண்டாவது இடத்தில் ஃபோர்டு எண்டெவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ford
English summary
According to reports from Autocar India, the Ford Endeavour facelift will make its entry into the Indian market by early 2019.
Story first published: Thursday, May 3, 2018, 16:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X