ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. வடிவைமப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

By Saravana Rajan

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்த மாடல் தற்போது புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் புதிய எஞ்சின் ஆப்ஷன்களிலும் வர இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்புகளில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டரும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

உட்புறத்தில் சிறிய மாற்றங்களை காண முடிகிறது. ஃபோர்டு சிங்க்-3 சாஃப்ட்வேருடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. பாதசாரிகள் சாலையை கடப்பது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செய்யும் வசதி, அவசர கால தானியங்கி பிரேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்படுகிறது. ஃபோர்டு ரேஞ்சர் பிக்கப் டிரக்கில் பயன்படுத்தப்படும் இந்த டீசல் எஞ்சின் தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டுவிதமான பவர் வெளிப்படுத்தும் திறன்களில் வர இருக்கிறது. ஒரு மாடல் 177 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்திலும், மற்றொரு மாடல் 210 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிபடுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

அதேநேரத்தில், இந்தியாவில் இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வரும் வாய்ப்பு இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் அதே டீசல் எஞ்சின்கள் தொடர்ந்து தக்க வைக்கப்படும். ஆனால், வடிவமைப்பு மாற்றங்களுடன் வருவது உறுதி.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு!!

புதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, ஆசிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் நேரடி போட்டியாளராக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford has revealed the facelifted avatar of the Endeavour SUV which is called as Everest in foreign markets. The 2018 Ford Endeavour facelift features updates to the exterior and interior design and also gets an all-new engine for the international markets.
Story first published: Friday, May 18, 2018, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X