சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

புதுப்பொலிவுடன் வரும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புத்தம் புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 180 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் வரும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புத்தம் புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த புதிய மாடல் கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

முகப்பு க்ரில் அமைப்பு, பம்பர், அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றில் வழக்கமான வடிவமைப்பு மாற்றங்களுடன் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வர இருக்கிறது. ஆனால், இதில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது, புத்தம் புதிய டீசல் எஞ்சினுடன் வர இருப்பதுதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

தற்போது இந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இரண்டு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கொடுக்கப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் 200 பிஎஸ் பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலும், தாய்லாந்திலும் வந்துள்ள புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின்களுக்கு பதிலாக புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 180 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஒரு ஆப்ஷனிலும், 215 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு ஆப்ஷனிலும் வந்துள்ளது. தற்போதுள்ள டீசல் எஞ்சின்களைவிட இது அதிக பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

இரட்டை டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் இந்த புதிய டீசல் எஞ்சின் குறைவான மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் என்பது மற்றொரு சிறப்பு. அதாவது, இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட டீசல் எஞ்சின் மாடலாக இருக்கும் என்பதும் ஆகச்சிறந்த விஷயம்.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

வெளிநாடுகளில் வந்துள்ள புதிய ஃபோர்டு எண்டவெர் எஸ்யூவியில், மேலும் ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக, தற்போது 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வழங்கப்படும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், புதிய எண்டெவரின் ஆக்சிலரேஷனும் சிறப்பாக இருக்கும்.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

இந்தியாவில் விற்பனையாகும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் முக்கிய உதிரிபாகங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!

இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் இருந்து எஞ்சின், கியர்பாக்ஸ் ஆகியவை இறக்குமதி செய்யும் வாய்ப்பு இருப்பதால், புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்தியாவிலும் வழங்கப்படும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. எனவே, இந்தியர்கள் மத்தியில் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி அதிக எதிர்பார்ப்பை கிளறி இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford Endeavour Facelift SUV gets new diesel engine.
Story first published: Monday, July 16, 2018, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X