ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

இந்தியாவில் ஸிப்ட் கார்களின் விற்பனையை குறைக்க ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக ஃபோர்டு ஃபிகோ காருக்கான விலையை அந்நிறுவனம் ரூ1 லட்சம் வரை குறைத்துள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் ஸிப்ட் கார்களின் விற்பனையை குறைக்க ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக ஃபோர்டு ஃபிகோ காருக்கான விலையை அந்நிறுவனம் ரூ1 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ கார் விலை குறைந்தது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

ஃபோர்டு இந்தியா நிறுவனம் டீலர் ஷிப்கள் மூலம் ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கு காரின் விலையில் இருந்து தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

தற்போது ஃபோர்டு கார்களின் பெட்ரோல வேரியன்ட் ரூ5.50 லட்சத்திலும் டீசல் வேரியன்ட் ரூ 6.11 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அந்த காரின் அனைத்து வேரியன்டகளுக்கும் ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

இதே நேரத்தில் இந்த காருக்கு நேரடிய போட்டியாக திகழும் மாருதி ஸிப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட் ரூ 4.99 லட்சத்தில் இருந்து ரூ 5.99 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தள்ளுபடிக்கு பின்னான ஃபோர்டு ஃபிகோ காரின் விலை மாருதி ஸிப்ட் காரை விட குறைவாக கிடைக்கிறது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ மற்றும் அஸ்பயர் ஆகிய இரண்டு கார்களுக்கான பேஸ் லிப்ட் கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதனால் தற்போது விற்பனையாகும் கார்களின் ஸ்டாக்குளை காலி செய்ய இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

மேலும் சில டீலர் ஷிப்களில் வட்டியில்லா கடன் வசதி, இலவச இன்சூரன்ஸ் வசதி ஆகியன வழங்கப்படுகின்னற. இந்த தள்ளுபடி இந்த மாதம் இறுதி வரை தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் ஃபோர்டு ஃபிகோ கார்கள் ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

புதிதாக விற்பனைக்குவரவுள்ள ஃபோர்டு ஃபிகே கார்கள் வெளிப்புறம் மற்றம் உட்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. காரின் முகப்பு பகுதியில் புதிய கிரில் மற்றும் புதிய பம்பர்கள் பொருத்தப்படுகின்றன. பின்புறமும் புதிய மாடலில் பம்பர்கள் மாற்றப்படுகிறது. பின்புற விளக்குகள் சில சிறிய மாற்றங்களை பெருகிறது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

காரின் உட்புறத்தை பொருத்தவரை டேஷ் போர்டு அப்டேட்டட் வெர்ஷனை பெருகிறது. தற்போது உள்ள காரில் உள்ள ஸிங்க் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் சிங்க் 3 இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டச் ஸ்கிரீன் இன்டர்பேஸ் ஆகிய வசதிகள் இருக்கின்றன.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

காரின் உட்புறத்தில் சீட்களில் சில மாற்றங்களும் சில வசதிகளும் புதிதாக செய்யப்பட்டுள்ளன. காரின் ஸ்டைலிங் அம்சங்கள் மட்டும்அல்லாமல் இன்ஜினிலும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. தற்போது உள்ள ஃபிகோ காரில் 1.2 லிட்டர் சாதாரண இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேஸ் லிப்ட் காரில் 1.2 லிட்டர் டிராகன் சீரீஸ் இன்ஜின்கள் பொருத்தப்படுகிறது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

இந்த இன்ஜின் தான் தற்போது அந்நிறுவனம் வெளியிட்ட ஃப்ரீ ஸ்டைல் காரில் இந்த இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 95 பிஎஸ் பவரையும், இந்த பவர் ஸிப்ட் காரில் உள்ள கே12 மோட்டாரை விட அதிகமாக உள்ளது. ஃபிகோ காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது

மேலும் இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக எக்கோ ஸ்போர்ட் காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷவும்இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், பொருத்தப்படுகிறது. டீசல் வேரியன்டை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே 1.5 லிட்ட டீசல் இன்ஜின் உடன் தான் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Ford Figo now a lot CHEAPER than the Maruti Swift. Read in Tamil
Story first published: Thursday, July 19, 2018, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X