இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற ஜஸ்டின் ட்ரூடோ செய்த அதிரடி.. வேடிக்கை பார்த்த மோடி..

திடீரென ஏற்பட்ட ஒரு பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட ஒரு பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் மக்கள், உலகமெங்கும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

வேலை நிமித்தமாக சென்றவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் உயர் பதவிகளையும் தமிழர்கள் அலங்கரித்து கொண்டுள்ளனர். தங்கள் வளர்ச்சியுடன் சேர்த்து, தாங்கள் வசிக்கும் நாட்டையும் அவர்கள் வளர்ச்சியடைய செய்து வருகின்றனர்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதனால் தமிழர்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. இப்படி தமிழர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று கனடா. கனடா நாட்டு அரசின் பல்வேறு உயர் பதவிகளிலும் தமிழர்கள் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர். ஒரு முறை பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதன்பின்தான் வந்தது வினை. எதற்கெடுத்தாலும் ஜஸ்டின் ட்ரூடோவை மையமாக வைத்து மீம்ஸ்கள் உலா வர தொடங்கின. ஒரு சில மீம் கிரியேட்டர்கள் போலியாகவே அந்த மீம்ஸ்களை தயாரித்து சமூக வலை தளங்களில் பரவ விட்டனர்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

குறிப்பாக தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க கனடாவில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சில ஹெலிகாப்டர்களை அனுப்பியதாகவும், அதில் ஒரு ஹெலிகாப்டரை ஜஸ்டின் ட்ரூடோவே ஓட்டி வந்ததாகவும் உலா வந்த மீம்ஸ்கள் வேற லெவல் ரகம்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதுதவிர இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன், ஜஸ்டின் ட்ரூடோ கை குலுக்க மறுத்ததாகவும் ஒரு முறை மீம்ஸ்கள் உலா வந்தன. இடையில் சிறிது நாட்கள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீம் கிரியேட்டர்கள் லீவ் கொடுத்து விட்டார்கள் போல.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

அதனால் கொஞ்ச நாட்களாக அவரைப்பற்றிய போலியான மீம்ஸ்கள் உலா வராமல் இருந்தன. ஆனால் மீண்டும் சர்க்கார் பட சர்ச்சையின்போது அவரைப்பற்றிய மீம்ஸ்கள் மீண்டும் வைரலாக தொடங்கின.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

அந்த மீம்ஸ்களில் கூறப்பட்டிருந்த தகவல் குபீர் சிரிப்பை வரவழைத்து விடும் ரகத்தில் இருந்தது. அதாவது சர்க்கார் படத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் முழு ஆதரவு உண்டாம். தேவைப்பட்டால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கனடா படைகளை அனுப்பவும் அவர் தயாராக இருக்கிறாராம்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ இதனை கூறுவது போல் மீம்ஸ்களை தயாரித்து சமூக வலை தளங்களில் பரவ விட்டனர் மீம் கிரியேட்டர்கள். ஜஸ்டின் ட்ரூடோ தொடர்பான மீம்களில் கட்டாயம் ஒரு வார்த்தை இடம்பெறும். 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' என்பதுதான் அது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த சூழலில் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ உண்மையிலேயே ஒரு விஷயத்திற்கு கவலை தெரிவித்துள்ளார். அதனையும், தமிழர்களையும் தொடர்படுத்தி இன்னும் மீம்ஸ்கள் வராமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

அதாவது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஜெனரல் மோட்டார்ஸ். இது சுருக்கமாக ஜிஎம் மோட்டார்ஸ் என அழைக்கப்படுகிறது. உலகம் முழுக்க மொத்தம் 37 நாடுகளில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சூழலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

எனவே அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஒரு சில தொழிற்சாலைகளை மூடிவிட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த தொழிற்சாலைகள் மூடப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதன்மூலம் தற்போது உள்ளதை காட்டிலும் 15 சதவீத பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டிற்கு அனுப்பி விட ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதாவது சுமார் 14,700 தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இதன்மூலமாக சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதே ஜெனரல் மோட்டார்ஸின் திட்டம். ஆனால் ஜெனரல் மோட்டார்ஸின் இந்த முடிவிற்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

எனவே அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் தற்போது இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸின் இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காகதான் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது கவலை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

அத்துடன் நின்று விடாமல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோவும், டொனால்டு ட்ரம்ப்பும் ஆலோசனை நடத்தினர்.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

தலைப்பிற்கும், செய்திக்கும் என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா? நாங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு அதிக சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அவர்களுக்கான அடுத்த கான்செப்ட்டை நாங்களே உருவாக்கி கொடுத்துள்ளோம். அவ்வளவே.

இந்த பிரச்னையில் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிரட்டிய ஜஸ்டின் ட்ரூடோ

'ஜெனரல் மோட்டார்ஸின் முடிவால் வேலையிழந்து நடு ரோட்டில் தவித்த தமிழர்களை காப்பாற்றிய உலக தமிழர்களின் தலைவர் அண்ணன் ஜஸ்டின் ட்ரூடோ. கை கட்டி வேடிக்கை பார்த்த மோடி'. இந்த கான்செப்ட் எப்படி இருக்கு? கான்செப்ட் கிடைக்காமல் அல்லாடி கொண்டிருக்கும் மீம் கிரியேட்டர்ஸ்களா ஆர் யூ ஹேப்பி நவ்?

(பின்குறிப்பு: தமிழனாய் இருந்தால் இந்த செய்தியை ஷேர் செய்யவும்)

Note: Images for representative purpose only.

Most Read Articles
English summary
GM Decided To Close Their Plants In US, Canada: Justin Trudeau, Trump Disappointed. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X