இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய ஒரு விஷயம் தொடர்பான தகவல்களை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பல ஆச்சரியமான விஷயங்கள் நிறைந்துள்ளன.

இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய ஒரு விஷயம் தொடர்பான தகவல்களை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பல ஆச்சரியமான விஷயங்கள் நிறைந்துள்ளன.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக கொண்ட உலகின் முன்னணி தேடு தளமான கூகுளில், உலகம் முழுக்க உள்ள மக்கள், தங்களது தேவைகளுக்காக, நாள்தோறும் ஏதேனும் ஒன்றை தேடி கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

அப்படி தேடப்படும் தகவல்களை எல்லாம் தொகுத்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் வெளியிட்டு வருகிறது. அதாவது அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபல மனிதர்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் கூகுள் வழங்கி வருகிறது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

ஆட்டோமொபைல் துறையும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஒவ்வொரு ஆண்டிலும் அதிகம் தேடப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களின் தகவல்களை, ஆண்டின் இறுதியில் வெளியிடுவதை கூகுள் வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

இந்த சூழலில், 2018ம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இந்தியாவில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை, கூகுள் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பலரது புருவங்களை உயர்த்தும் பல்வேறு ஆச்சரியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

கடந்த 2017ம் ஆண்டு வெளியான பட்டியலில் இடம் பிடித்திருந்த ஒரு காருக்கு கூட, கூகுள் இந்தியா தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுதவிர டாடா ஹாரியரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

அதிகம் தேடப்பட்ட கார்களின் பட்டியலில், டாடா ஹாரியர் நிச்சயமாக இடம் பிடிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, டாடா ஹாரியர் இந்த பட்டியலில் இடம்பெற தவறியுள்ளது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

டாடா ஹாரியருக்கு பட்டியலில் இடம் கிடைக்காமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஹாரியர் என்ற பெயர் சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

இதுதவிர முன்னணி கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஸ்விப்ட்டுக்கும் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இதுவும் பலரது புருவங்களை உயர செய்துள்ளது. ஏனெனில் 2017ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் மாருதி சுஸுகி ஸ்விப்ட்தான்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

இன்றளவும் ஸ்விப்ட் மார்க்கெட் லீடராகதான் உள்ளது. அப்படி இருந்தும் ஸ்விப்ட்டுக்கு இடம் கிடைக்காமல் போனது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ஒருவேளை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று என்பதால், ஸ்விப்ட் பற்றி மக்களுக்கு ஏற்கனவே அதிகம் தெரிந்திருக்க கூடும்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

இதுபோன்ற முன்னணி கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட கார் என்ற பெருமையை ஹோண்டா அமேஸ் தட்டி சென்றுள்ளது. இந்தியாவில் 2018ம் ஆண்டில் அதிகம் பேரால் தேடப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

1.ஹோண்டா அமேஸ்

2.மஹிந்திரா மராஸ்ஸோ

3.டொயோட்டா யாரிஸ்

4.ஹூண்டாய் சான்ட்ரோ

5.ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல்

6.மாருதி சுஸுகி எர்டிகா

7.ஜீப் ராங்லர்

8.பிஎம்டபிள்யூ 6 ஜிடி

9.பிஎம்டபிள்யூ எக்ஸ்3

10.மஹிந்திரா அல்டுராஸ்

இனி கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப்-3 கார்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

1.ஹோண்டா அமேஸ்

மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. காம்பேக்ட் செடான் செக்மெண்ட்டில், அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் என்ற பெருமையை பெற்று, உடனடி வெற்றியை சந்தித்தது இரண்டாம் தலைமுறை அமேஸ். பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் ஹோண்டா அமேஸ் கிடைக்கிறது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ரூ.5.80 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் வரையிலான விலைகளில் (எக்ஸ் ஷோரூம்) ஹோண்டா அமேஸ் விற்பனையாகி கொண்டுள்ளது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

2.மஹிந்திரா மராஸ்ஸோ

அறிமுகம் செய்யப்பட்ட கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. காம்பேக்ட் எம்பிவி செக்மெண்ட்டில், மற்ற கார்களில் இல்லாத பல வசதிகளை மஹிந்திரா மராஸ்ஸோ பெற்றுள்ளது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய கார்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்து கொண்டிருக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ, ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனையாகி வருகிறது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

3.டொயோட்டா யாரிஸ்

டொயோட்டா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு யாரிஸ் காரின் விற்பனை அப்படி ஒன்றும் பிரமாதமாக நடைபெற்று விடவில்லை. அப்படி இருந்தும் கூட டிரெண்டிங் பட்டியலில் டொயோட்டா யாரிஸ் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

டொயோட்டா யாரிஸ் காரானது ரூ.9.29 லட்சம் முதல் ரூ.14.07 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியர்கள் இதைத்தான் அதிகம் தேடியுள்ளனர்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹாரியர், ஸ்விப்ட் ஆகிய கார்களுக்கு இடம் கிடைக்காத சூழலில், ஹோண்டா அமேஸ் முதலிடம் பிடித்திருப்பதும், அதிகம் விற்பனையாகாத டொயோட்டா யாரிஸ் மூன்றாவது இடம் பிடித்திருப்பதும் பலருக்கும் 'ஷாக்' கொடுத்துள்ளது.

Most Read Articles
English summary
Google's Most-Searched Car Of 2018 In India Is Honda Amaze. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X