மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. அதன் மூலம் சிறிய நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

வரும் செப் 7ம் தேதி குலோபல் இ-மொபிலிட்டி என்ற மாநாடு நடக்கவிருக்கிறது. இதை பிரதமர் மோடி துவக்க வைத்து பேசுகிறார். அதில் சில திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார்.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

இத்திட்டத்தின் படி அதிகம் மாசு ஏற்பட்டுள்ள சுமார் 40 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

இதை தொடர்ந்து 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் மும்பை-புனே மற்றும் டில்லி- சன்டிகர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு எலெக்டரிக் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

இது மட்டும் இல்லாமல் செப் மாதம் நடக்கவுள்ள மாநாட்டில் பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு 100 நாள் சேலஞ்ச் ஆக மோடி ஒரு சேலஞ்சை விட விருக்கிறார் இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் பெரும்மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

இந்த சேலஞ்சில் 100 நாட்களுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பவர்களுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற செயல்களை அவர்கள் அதிக அளவில் செய்ய வேண்டும் என பேசப்படுகிறது இதற்காக வரி விலக்கு அல்லது சலுகைகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த பிப். மாதம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் எலெக்ட்ரிக் கார்களுக்காக தனியாக எந்த திட்டத்தை கடைபிடிக்கப்படவில்லை என கூறினார்.

மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்

தற்போது அரசு அறிவிக்கவுள்ள இந்த திட்டத்தால் சுற்றுசுழல் மாசுபாடு வெகுவாக குறைய வழிவகுக்கும். இது குறித்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் சேலஞ்சை செய்து முடிக்க ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு திறன் உள்ளதா என்பது குறித்தும், அவர்களுக்கு தேவையான அனுமதிக்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Government plans new policy to promote electric vehicles. Read in Tamil
Story first published: Thursday, August 2, 2018, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X