பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் கார் பயன்படுத்துபவர்கள் அதை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெட்ரிக் கார் வாங்கினால் ரூ2.5 லட்சம் வரை மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் கார் பயன்படுத்துபவர்கள் அதை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெட்ரிக் கார் வாங்கினால் ரூ2.5 லட்சம் வரை மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலெட்ரிக் பஸ்களை இயக்க ஆலோசனை நடந்து வருகிறது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வானகங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக அரசு பயன்பாட்டிற்காக எலெட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

தற்போது மக்களும் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூருவில் அதிகளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எலெட்ரிக் கார் பயன்பாட்டை அதிகரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இதையடுத்து எலெட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை வாங்குபவர்குளுக்கும், அந்த வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பவர்களுக்கும் மானியம் வழங்க அரசு ரூ9,400 கோடியை ஒதுக்கியுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

அதன் படி தங்கள் பி.எஸ் 3 ரக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அழித்து விட்டு எலெட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. எலெக்டரிக் கார்களுக்கு 1.5 லட்சமும், பைக்களுக்கு ரூ 30 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இத்திட்டம் வரையறுக்கப்பட்டு தற்போது அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

அதே போல் கேப்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் பஸ்களை கொண்டு டிராவல்ஸ் நடத்துபவர்களுக்கும் தங்கள் வாகனத்தை எலெட்ரிக் வாகனமாக மாற்ற அரசு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

அதன் படி ரூ 15 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு ரூ 1.5 லட்சத்தில் இருந்து ரூ 2.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் பிஎஸ் 3 ரக வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலமாக அழிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை கொண்டு எலெட்ரிக் கார் வாங்கும் பட்சத்தில் இந்த மானியத்தை பெறலாம்.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

தற்போது எலெக்டரிக் டூவிலர்களுக்காக ரூ 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ 1000 கோடி சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைப்பதற்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

கனரக தொழிற்துறை அமைச்சகம் சார்பில் மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு 9 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கவும், டில்லி- ஜெய்பூர், டில்லி சண்டிகர், சென்னை- பெங்களூரு, மும்பை - புனே ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25.கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

தற்போது மானியத்திற்கான அரசுக்கு திட்டவரைவு அனுமதிக்காக அனுப்பட்டுள்ள நிலையில், மானியம் குறித்த எதிர்பார்ப்பு ஆட்டோமொபைல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த மானியம் தான் வாகன தயாரிப்பாளர்களை பல அம்சங்கள் பொருந்திய சிறந்த கார்களை தயாரிக்க ஊக்கு விக்கும்.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

முதற்கட்டமாக சுமார் 5 லட்சம் எலெட்ரிக் வாகனங்கள் வரை இந்த மானியம் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதில் 80 சதவிதமான வாகனங்கள் 2 மற்றும் 3 சக்கர வாகனங்கள் தான். இதற்காக அரசு 5,800 கோடியை செல்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு 2 மற்றும் 3 சக்கரவாகனங்கள் சுலபமாக வாங்ககூடிய விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

ஆனால் இந்த 5 லட்சம் வாகனம் என்பது நாட்டில் ஆண்டிற்கு விற்பனையாகும் மொத்த வாகன எண்ணிக்கையில் 0.5 சதவீதம் தான். இதனால் வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இந்தியாவில் ஓடும் பஸ்களில் 50 லட்சம் பஸ்களையாவது எலெட்ரிக் பஸ்களாக மாற்றும் பட்சத்தில் எலெட்ரிக் வாகன விற்பனையை அதிரிக்கலாம் எனவும், பஸ்கள் எலெட்ரிக்கில் மாற துவங்கினால் சிறிய வாகனங்கள் தானாக எலெட்ரிக் பக்கம் வரும் என வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்-டீசல் காரை எக்ஸ்சேன்ஜ் செய்து எலெக்டரிக் கார் வாங்கினால் ரூ 2.5 லட்சம் மானியம்

இதே போல் எலெட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களான மோட்டார், டிரைவ், பவர்டிரைன் மற்றும் கண்ட்ரோலர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டு 25 சதவீதம் வரை மானியம் வழங்க முடிவு செய்து அதற்கான திட்ட வரைவு அறிக்கையும் அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Soon, Govt May Give Rs 2.5 Lakh For Exchanging Your Old Car With An Electric One
Story first published: Tuesday, May 15, 2018, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X