கார்ப்பரேடிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்யும் விதியில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்யுள்ளது. அதன் படி வெளிநாட்டு நிறுவனங்கள் ஆண்டிற்கு 2500 கார் அல்லது பைக்குகளை இந்தியாவிற்க

By Bala

இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்யும் விதியில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வெளிநாட்டு நிறுவனங்கள் ஆண்டிற்கு 2,500 கார் அல்லது பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து கொள்ள முடியும். இதுகுறித்த விரிவான செய்தியை காணலாம் வாருங்கள்.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

உலக ஆட்டோமொபைல் சந்தையில் மிக முக்கிய இடத்தில் உள்ள நமது இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இந்திய சந்தையை பிடிக்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

ஆனால் இந்தியாவில் உள்ள சட்டப்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் அவர்களது வாகனங்களை தயாரித்தால் மட்டுமே, அதிக வரியின்றி அவர்கள் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். அவர்கள் முழுமையாக அசெம்பிள் செய்த வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தால், அதற்கான வரி வாகனத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக சென்று விடும்.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

ஆனால் சில நிறுவனங்கள், வாகனங்களின் உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து மட்டும் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள இறக்குமதி வரியை கட்டுப்படுத்தி ஒரளவிற்கு விலையை குறைத்து விற்பனை செய்கின்றனர்.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

சில பிரீமியம் மற்றும் பிரபலமான பிராண்ட்கள், இந்தியாவில் முழுமையாக தயார் செய்யப்பட்ட தங்களின் வாகனங்களையே விற்பனை செய்கின்றனர். ஆனால் அதற்கு அதிக விலை இருக்கிறது. எனினும் இந்தியாவில் அந்த வாகனங்களுக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு. இருந்தாலும் அவர்களை இலக்காக கொண்டு அந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

மேலும் தற்போது அரசு, சுமார் 40 ஆயிரம் டாலருக்கும் மேலான மதிப்புள்ள கார்களையும், 800 சிசிக்கும் அதிகமான டூவீலர்களையும், இந்தியாவில் டெஸ்ட்டிங் சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்ய அனுமதித்துள்ளது. ஏன் என்றால் இந்த ரக வாகனங்கள் நிச்சயம் ஐரோப்பிய டெஸ்ட்டிங்கை பெற்று இருக்கும். இந்திய டெஸ்டிங்கும் அதே கொள்கைகளை கொண்டுள்ளதால் இந்த டெஸ்டிங் தவிர்க்கப்படுகிறது.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

தற்போது அரசு, இந்த முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,500 கார் அல்லது பைக்குகளை இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும், அந்த கார் வலதுபுற ஸ்டியரிங் கண்ட்ரோல் என்ற ஒரு விதியை மட்டும் கடைபிடித்திருந்தால் போதும் எனவும் அறிவித்துள்ளது.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

அரசின் இந்த திட்டமானது, வெளிநாட்டில் உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் வாகனங்கள் இந்தியாவில் எவ்வளவு விற்பனையை பெருகிறது என்பதை சோதித்து பார்க்க பயன்படும். அவர்கள் நல்ல விற்பனையை பெற்றால், இந்தியாவில் முதலீடு செய்து தங்கள் வியாபாரத்தை துவங்குவார்கள். இதன்மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும்.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

அரசின் இந்த முடிவு ஏற்கனவே இந்தியாவில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் நிஸான், டொயோட்டா, மெர்ஸிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும். அவர்கள் தங்களின் விலையுயர்ந்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்யலாம்.

கார்பரேட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் அடுத்த மூவ்… வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் தாராளம்..

மத்திய அரசு தற்போது இந்த இறக்குமதி விலக்கை இந்தியாவில் சோதனைகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது. மற்றபடி பழையபடி வரி விதிப்பு உள்ளது. அதில் அந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மிக முக்கியமாக இந்த விலக்கு என்பது சர்வதேச தரத்தை கொண்டுள்ள வாகனங்களுக்கு மட்டும்தான்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

அதெல்லாம் ஓகே.. வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதியில் வழங்கப்படும் தாராளம் குறித்து பார்த்தோம்.இனி வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் உயர் ரக கார்கள் ரோட்டில் சென்றாலே நாம் திரும்பி பார்க்கும் வகையில், அதன் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டிசைன் இருக்கும். உலகளவில் அதிகமான சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகள் இருந்தாலும், இந்தியாவில் அப்படிப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கிறது.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

எனினும் கடந்த சில ஆண்டுகளாக, ஃபெராரி, டுகாட்டி, லம்போர்கினி, எம்வி அகஸ்டா, பென்ட்லீ, ரோல்ஸ்ராய்ஸ் போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாவோ அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைப்பாகவோ அவர்களது வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

உதாரணமாக இந்திய நிறுவனமான டிஎஸ்கே நிறுவனம், இத்தாலியின் பெனெல்லி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, டிஎஸ்கே - பெனெல்லி என்ற பெயரில், சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இப்படி சில நிறுவனங்கள், வேறு நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இந்தியாவில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

சர்வதேச ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள், வாகன விற்பனைக்கு அதிக சாத்தியம் உள்ள மார்கெட்டாக இந்தியாவை பார்க்கின்றனர். அதே நேரத்தில் நிரந்தரமான மார்கெட்டாக இந்தியாவை கருத அவர்கள் தயங்கி வருகின்றனர்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதிக விலை கொண்ட வாகனங்கள், இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாவதுதான். உதாரணத்திற்கு மெர்ஸிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மார்கெட்டில், இந்திய மார்க்கெட் வெறும் 0.6 சதவீதம்தான். இதை அந்நிறுவனமே அறிவித்துள்ளது.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

குறைந்த அளவிலான விற்பனை காரணமாவே புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டை, இந்திய விற்பனையில் இருந்து அந்நிறுவனம் நீக்கியது. இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு அந்நிறுவனத்தால் விற்பனையை கொண்டு வர முடியவில்லை.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிற்கு ஏற்ப கார்களை அந்நிறுவனம் தயாரிக்காததும்தான். இந்தியாவிற்காக தயாரித்தாலும், இதை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் இருக்கும் சிக்கலும் ஓர் முக்கிய காரணம்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

இந்திய அரசானது, இந்தியாவில் உற்பத்தி செய்து, அதை இந்தியாவிலேயே விற்பனை செய்யும் ஆட்டொமொபைல் நிறுவனங்களையே ஊக்குவிக்கிறது. தனித்தனி பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் அதை அசெம்பிள் செய்வதையோ அல்லது ஒட்டுமொத்த வாகனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதையோ இந்திய அரசு பெரிய அளவில் ஊக்குவிப்பதில்லை.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, இந்திய அரசு வரி விதிக்கிறது. இந்தியாவில் இவ்வாறான வாகனங்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் பெரும் கோடீஸ்வரர்களாவே இருக்கின்றனர். ஏனெனில் அந்த வாகனத்தை வாங்க அவர்கள் அளிக்கும் இறக்குமதி வரியானது, அந்த வாகனத்தின் உண்மையான விலையில் இருந்து இரண்டு, மூன்று மடங்கு அதிக அளவில் விலையை கூட்டிவிடும்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

இந்தியாவில் அவ்வாறு வெளிநாட்டு வாகனங்களை இறக்குமதி செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, இவ்வாறு பல வெளிநாட்டு கார்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் அதை அவர்களின் கவுரவத்திற்காகவே அதிகம் வாங்கி தங்கள் கராஜை அழகு படுத்தி கொள்கின்றனர்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதை விட அதற்கு நிகராக, இந்தியாவிலேயே கிடைக்கும் வாகனங்களை தேர்ந்தெடுக்கலாம். வெளிநாட்டு வாகனங்களுக்கு இறக்குமதி வரி மட்டும் இல்லாமல் அந்த வாகனம் பழுதானாலோ அல்லது அதில் உங்கள் பாகங்களை மாற்ற வேண்டும் என்றாலோ அதை இந்தியாவில் செய்வது கடினம்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

அது மட்டும் அல்லாது, பல வெளிநாட்டு கார்களும் பைக்குகளும், நம் நாட்டில் பெரும்பான்மையாக விற்பனையாகும் பெட்ரோலுக்கு ஏற்றது அல்ல. அந்த வாகனங்களுக்கு 98 ஆக்டேன் பெட்ரோல்களையே பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி?

அந்த ரக பெட்ரோல்கள் இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை, நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே 3-4 பெட்ரோல் பங்குகளில் மட்டுமே அந்த பெட்ரோல் கிடைக்கிறது. இந்த பெட்ரோல் கிடைக்காத ஊர்களில் நீங்கள் நம் நாட்டில் விற்கப்படும் 93 ஆக்டேன் பெட்ரோலைதான் பயன்படுத்த வேண்டியது வரும். ஆனால் இந்த பெட்ரோலை அந்த வெளிநாட்டு வாகனங்கள் ஏற்றுக்கொள்ளாது. இதனால் பெர்ஃபார்மென்ஸ் பெரும் அளவிற்கு குறையலாம். மேலும் வாகனங்களும் விரைவில் பழுதாகலாம்

Most Read Articles

டாடா நிறுவனம் சமீபத்தில் டியாகோ என்ஆர்ஜி என்ற காரை அறிமுகப்படுத்தியது. அந்த காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Govt removes blocks to import of foreign vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X