கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

சர்வதேச அளவிலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிப்புகளை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே வருகின்றனர். இதன்படி புதிதாக வரும் தொழிற்நுட்பங்களை எல்லாம் ஏற்கனவே விற்பனையாகும் மாடல் கார்களில

சர்வதேச அளவிலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிப்புகளை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே வருகின்றனர். இதன்படி புதிதாக வரும் தொழிற்நுட்பங்களை எல்லாம் ஏற்கனவே விற்பனையாகும் மாடல் கார்களில் புகுத்தி வருகின்றனர்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

இந்த வகையில் இன்று தயாரிக்கப்படும் கார்களில் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இருக்கிறது. அரசின் கொள்கைப்படி வரும் மே மாதம் முதல் கார்களின் பின்பக்கம் கேமரா இருப்பதும் கட்டாயமாகிறது அதனால் இனி அந்த தொழிற்நுட்பமும் இனி வரும் கார்களில் கட்டாயம் இருக்கும்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

இதே போல கார்களில் ஒரு காலத்தில் கேசட் போட்டு பாட்டு கேட்கும் தொழிற்நுட்பம்தான் இருந்தது. இதை சிடி போட்டு பாட்டு கேட்கும் தொழில்நுட்பம் வந்து முழுவதுமாக மாற்றியது. தற்போது ப்ளூடூத்தில் ஸ்டிரிமிங் ஆகும் கருவி வந்த பின்பு சிடி போடும் தொழிற்நுட்பமும் ஒழிந்துவிட்டது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

அந்த வகையில் காரில் ஏற்கனவே சில காலம் இருந்து தற்போது அந்த தொழிற்நுட்பம் மாறி புதிய தொழிற்நுட்பம் அந்த இடத்தை பிடித்துள்ளதை பற்றி இந்த செய்தியில் காணலாம்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு : சாவி போடும் இக்னீஷியன்

ஒவ்வொரு காருக்கும் தனித்தனியாக சாவி இருக்கும். இந்த சாவியை காரில் பொருத்தினால் மட்டுமே காரை ஸ்டார்ட் செய்ய முடியும். 2008ம் ஆண்டு வரை உலகில் உள்ள 89 சதவீத காரில் இந்த சாவி பொருத்தும் முறைதான் இருந்தது. தற்போது 38 சதவீத கார்களில்தான் உள்ளது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: கீலெஸ் ஸ்டார்ட்

இந்த தொழிற்நுட்பம் நீங்கள் காரில் ஏறியுடன் எதையும் செய்யாமல் காரை ஸ்டார்ட் செய்ய உதவும். சாவியை பொருத்த வேண்டிய தேவையே இல்லை. சாவி போன்ற ஒரு கருவி நமது பாக்கெட்டிலோ அல்லது பர்ஸிலோ இருந்தால் போதும். அதை கார் சரியாக கண்டுபிடித்து அந்த கருவி அருகில் இருந்தால் காரை ஸ்டார்ட் செய்ய முடியும். நவீன கார்களில் இந்த முறைதான் இருக்கிறது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. சிலர் காரை நிறுத்தி விட்டு ஆஃப் செய்ய மறந்துவிட்டு அப்படியே செல்கின்றனர். அதனால் கார் அடுத்து நீங்கள் வரும் வரை ஆனிலேயே இருக்கும். ஆனால் நவீன கருவிகளில் காரை விட்டு சாவி நீண்ட தூரம் செல்லும் போது கார் ஆனில் இருந்தால் எச்சரிக்கும் தொழிற்நுட்பமும் வந்துவிட்டது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு: இன்ஜின் ஐடியல்

காரை ஸ்டார் செய்துவிட்டால் நாமாக ஆஃப் செய்தால் ஆஃப் ஆகும். அல்லது ஆனிலேயே இருக்கும். இன்றைய டிராப்பிக்கில் பெரு நகங்களில் நீங்கள் பயணிக்கும் நேரத்தை விட சிக்னலில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் கார் ஆனிலேயே இருந்தால் பெட்ரோல் வீணாவதுடன் வீணாக காற்று மாசு ஏற்படுகிறது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பம்

இந்த தொழிற்நுட்பம் ஹைபிரிட் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கார் நின்றுவிட்டால் இன்ஜின் தானாக ஆஃப் ஆகி விடும். பின் டிரைவர் காலை பிரேக்கில் இருந்து எடுத்த பின்பு மீண்டும் இன்ஜின் ஆன் ஆகிவிடும். இதனால் எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு : நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின்

நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் என்பது சாதாரண இன்ஜின் தொழிற்நுட்பம்தான். அதனால் இதில் சிறிய ரக இன்ஜின் ஆக இருந்தால் குறைந்த பவரை தான் வெளிப்படுத்தும். அதிக பவர் வேண்டும் என்றால் இன்ஜினின் அளவும் அதிகமாக இருக்கும்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: டர்போ சார்ஜ்டு இன்ஜின்

டர்போசார்ஜ் இன்ஜின் என்பது இன்ஜினிற்குள் எரிபொருள் எரியும் போது அதிக காற்றை உள்ளே செலுத்தி கம்பஷனை சிறப்பாக செய்ய வைப்பதுதான் டர்போர் சார்ஜ்டு இன்ஜின். இதனால் சிறிய இன்ஜினாலேயே அதிக பவரை கொடுக்க முடியும். குறிப்பாக அதிக பவர் கொண்ட கார்களில் இந்த இன்ஜின்தான் பயன்படுத்தப்படும்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு: ஹெலஜன் பல்ப்கள்

பழைய கார்களில் எல்லாம் ஹெலஜன் பல்ப்கள்தான் ஹெட்லைட்டில் பயன்படுத்தப்பட்டன. இது மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரக ஹெட்லைட் பல்ப்களில் பயன்பாடு குறைந்து விட்டது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு : செனான் லைட்/ எல்இடி லைட்

ஹெலஜன் பல்ப்களை மாற்றி முதலில் வாகனங்களுக்கு செனான் லைட்கள் பொறுத்தப்பட்டது. இது ஹெலஜன் லைட்களைவிட அதிக வெளிச்சமாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட கால உழைப்பும் இருக்கும் என பேசப்பட்டது. ஆனால் உடனடியாக வந்த எல்இடி லைட்கள் செனானை விட அதிக வெளிச்சமும், நீண்ட உழைப்பையும் தருகிறது. இன்றைய கார்கள் பெரும்பாலும், எல்இடி ஹெட்லைட்களையே பொருத்தி வருகின்றன.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

கடந்த 2008ம் ஆண்டில் உலகில் தயாரிக்கப்படும் 24 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே செனான்/எல்இடி லைட்கள் இருந்தன. தற்போது இது 51 சதவீதமாக வளர்ந்துள்ளது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு : ஸ்பேர் டயர்

நீங்கள் காரில் நீண்ட தூரம் செல்லும் போது திடீர் என காரின் டயர் பஞ்சரானால் உடனடியாக பழைய டயரை கழற்றி விட்டு இந்த ஸ்பேர் டயரை மாட்டி கொண்டு பஞ்சர் கடை வரை சென்று இந்த டயரை சரி செய்து மீண்டும் ஸ்பேர் டயராக பொருத்தி விடுவார்கள். இந்த தொழிற்நுட்பம் இன்றும் பெரும்பாலான வாகனங்களில் உள்ளது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: டயர் இன்பலேட்டர் கிட்

நவீன கார்களில் டயர் இன்பேலட்டர் என்ற கருவி காருடன் வழங்கப்படுகிறது. இது நீங்கள் பயணிக்கும் போது டயர் பஞ்சர் ஆனால் இந்த கருவியை கொண்டு மீண்டும் காற்றடைந்து சிறிது கிமீ பயணம் செய்யலாம். அதற்குள் நீங்கள் ஒரு பஞ்சர் கடையை பார்த்து டயரை சரி பார்த்து கொள்ளலாம். இந்த கருவி கடந்த 2009ம் ஆண்டு வரை உலகில் தயாரிக்கப்பட்ட 5 சதவீத கார்களில்தான் இருந்தது. தற்போது 23 சதவீத கார்களில் இந்த வசதி இருக்கிறது. இது வாகனத்திலேயே எடுத்து செல்லக்கூடிய அளவிற்கு சிறிய கருவிதான்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு: அனலாக் அளவீடுகள்..

கார் செல்லும் வேகம், பெட்ரோலின் அளவு, இன்ஜின் டெம்பரேச்சர், இப்படியான பல ஒரு காலத்தில் அனாலக்கில்தான் இருந்தது. இன்றும் பல கார்களில் அனலாக்கில்தான் பல அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக கார் செல்லும் வேகத்தை காட்டும் கருவி, பெட்ரோல் அளவை காட்டும் கருவிகள் இன்று அனாலக்கில் இருந்தாலும் டிஜிட்டலில் பல மாற்றங்கள் வந்து விட்டது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்

கார் செல்லும் வேகம், பெட்ரோல் அளவு என எல்லாம் டிஜிட்டலில் தெரியும் படியான தொழிற்நுட்பம் தற்போது நடைமுறையில் உள்ளது. ஃபோர்டு மஸ்தாக், ஹோண்டா அக்கார்டு, மெர்ஸிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், ஃபோக்ஸ்வேகன் அட்லஸ் ஆகிய கார்களில் இந்த தொழிற்நுட்பங்கள் உள்ளது. வருங்காலத்தில் பெரும்பாலான கார்களுக்கு இந்த தொழிற்நுட்பங்கள் வந்துவிடும் என கூறப்படுகிறது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

பழசு: பார்க்கிங் பிரேக்

காரில் டிரைவர் சீட்டிற்கும், அவருக்கு அருகில் உள்ள பயணி சீட்டிற்கும் இடையில் ஒரு லிவர் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதை ஹேண்ட் பிரேக் அல்லது பார்க்கிங் பிரேக் என்று அழைப்பார்கள். இந்த பிரேக் நேரடியாக வீலை அசையாமல் பாதுகாக்கும். மலை பகுதியில் பயணிப்பவர்களுக்கு இது அதிக சொளகரியமாக இருக்கும். இன்றும் பெரும்பாலான கார்களில் இந்த பிரேக் தொழிற்நுட்பம்தான் உள்ளது.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

புதுசு: எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

மேனுவல் பார்க்கிங் பிரேக்கிற்கு போட்டியாக எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வந்துவிட்டது. இதில் லிவர் எல்லாம் கிடையாது. ஒரு பட்டனை அழுத்தி விட்டால் போதும் கார் இருந்த இடத்தில் இருந்து ஒரு இன்ச் கூட நகராது. ஆனால் இது தற்போது பரவலாக வரவில்லை.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

மாஸ்டா சிஎக்ஸ் -5, பிஎம்டபிள்யூ 5 -சிரீஸ் மற்றும் ராம் 1500 உள்ளிட்ட வாகனங்களில்தான் வந்துள்ளது. எதிர்காலத்தில் பெரும்பாலான வாகனங்களில் இந்த தொழிற்நுட்பம் வரலாம்.

கார்களில் புதிதாக வந்த இந்த மாற்றங்களை எல்லாம் கவனிச்சீங்களா?

இவைகள் கடந்த 10 ஆண்டுகளுக்க முன் இருந்த கார்களில் உள்ள தொழிற்நுட்பங்கள் இன்றைய கார்களில் எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இன்னும் பல மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Have u noticed these changes on cars. Read in Tamil
Story first published: Thursday, October 11, 2018, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X