இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவில் ஒரு சில பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவில் ஒரு சில பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது. இதன்மூலம் அரபு நாடுகளுடன் சேர்த்து, சீனாவின் பிழைப்பிலும் இந்தியா மண்ணை அள்ளி போட்டுள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

மக்கள் தொகை அடிப்படையில், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கு மக்கள் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருவதால், பைக், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் தேவையும் முன்னெப்போதையும் விட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலப்பொருள்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

ஆனால் இந்தியாவிடம் சொல்லிக்கொள்ளும்படி கச்சா எண்ணெய் வளம் இல்லை. இதன் காரணமாக ஈரான், ஈராக், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இந்தியா இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

ஆம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணம்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம்தான் எலெக்ட்ரிக் வாகனங்கள். ஆம், அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், பெட்ரோல், டீசலுக்கான தேவை குறையும்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியும் படிப்படியாக சரிந்து விடும். எனவேதான் மின்சாரத்தில் இயங்கும் பைக், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை, அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் காரணமாக பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைந்து விடுவதால், அதன் விலையும் சரிவடைந்து விடும்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வருவதால் கிடைக்கும் மற்றொரு மிகப்பெரிய நன்மை சுற்றுச்சூழல் பாதுகாப்பு. ஆம், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்களை சுற்றுச்சூழலை பாதிக்காது. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதுபோன்ற காரணங்களால்தான், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சற்று விலை உயர்ந்தவை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் மத்தியில் தயக்கம் நிலவி வருகிறது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இந்த பிரச்னையையும் சரி செய்ய, ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் கிடைப்பதன் காரணமாக மக்களால் எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதன் காரணமாக வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. கடந்த சில வாரங்களுக்கு முன் புள்ளி விபரம் ஒன்று வெளியானது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அந்த புள்ளி விபரம் வெளிக்காட்டியது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதனால் உற்சாகம் அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம்.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

ஏனெனில் பேட்டரி, சார்ஜர், எனர்ஜி மானிட்டர், எலெக்ட்ரிக் கம்ப்ரஸர், கன்ட்ரோலர் மற்றும் மோட்டார் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் ஒரு சில முக்கிய பார்ட்ஸ்களை வெளிநாடுகளில் இருந்துதான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

எனவே அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரி விதித்து வருகிறது. இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ஒரு சில பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்துள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

அத்துடன் ஒரு சில பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்டல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்கு 28 சதவீத அடிப்படை இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் இறக்குமதி வரியை குறைத்தால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை இன்னும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

எனவே தற்போது வரி விலக்கு அளிக்கப்படாத எலெக்ட்ரிக் வாகனங்களின் முக்கியமான பார்ட்ஸ்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என வருவாய் துறைக்கு, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

மத்திய அரசின் உயரதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான லித்தியம் இயான் பேட்டரிகளை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே அதிக அளவில் தயாரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

லித்தியம் இயான் பேட்டரிகளில் அதிக அளவிலான சக்தியை சேமித்து வைக்க முடியும். அவை நீண்ட நாட்கள் உழைக்கும். ஆனால் தற்போதைய நிலையில் சீனாவில் இருந்துதான் லித்தியம் இயான் பேட்டரிகளை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இதனால் லித்தியம் இயான் பேட்டரிகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. எனவேதான் இந்தியாவிலேயே அதிக அளவு லித்தியம் இயான் பேட்டரிகளை உற்பத்தி செய்ய தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொருட்களின் விலை குறைகிறது... அரபு நாடுகள், சீனாவின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்ட இந்தியா

இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் பரிசீலித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Heavy Industries Ministry Proposes Customs Duty Reduction On More Electric Vehicle Parts. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X