விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி..

மாருதி சுஸூகி நிறுவனம், வெறும் 28 மாதங்களில், 3 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார் விட்டாரா பிரெஸ்ஸாதான்.

By Arun

மாருதி சுஸூகி நிறுவனம், வெறும் 28 மாதங்களில், 3 லட்சம் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் எஸ்யூவி கார் விட்டாரா பிரெஸ்ஸாதான். இதன் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னணியில் உள்ள ரகசியங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகி வரும் எஸ்யூவி கார் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸாதான்.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

சப் 4 மீட்டர் எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸாவை, மாருதி சுஸூகி நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் லான்ச் செய்தது. அன்று முதல் அதன் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. தற்போது வெறும் 28 மாதங்களில், 3 லட்சம் பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

வேறு எந்த எஸ்யூவி வகை காரும், இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் விற்பனையானது இல்லை. இதன்மூலம் இந்தியாவில் அதிவேகமாக விற்பனையாகி வரும் எஸ்யூவி கார் என்ற பெருமையை விட்டாரா பிரெஸ்ஸா தக்க வைத்து கொண்டுள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

மாருதி சுஸூகி நிறுவனம் சராசரியாக ஒரு மாதத்திற்கு சுமார் 12,500 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்கிறது. இதர சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் அனைத்தினுடைய சராசரி விற்பனை எண்ணிக்கையை ஒன்றாக கூட்டினாலும் கூட, பிரெஸ்ஸாவை நெருங்க முடியாது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பிரெஸ்ஸா கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாருதியின் முதல் சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸா அங்கெல்லாமும் கூட அதிகமாகவே விற்பனையாகி வருகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

ஃபோர்டு எகோ ஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா டியூவி300 உள்ளிட்ட கார்களுடன் பிரெஸ்ஸா போட்டியிடுகிறது. இதன் போட்டியாளர்கள் பலர் பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களையும் வழங்குகின்றனர். ஆனால் பிரெஸ்ஸா கார் டீசல் இன்ஜினுடன் மட்டும் வரும் எஸ்யூவி ஆகும்.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

பிரெஸ்ஸா காரில், 1.3 லிட்டர் பியட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த காருடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இது ப்ரண்ட் வீல் டிரைவ் கொண்ட கார்.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

தற்போது பிரெஸ்ஸா காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஏர்பேக்குகள், ஏபிஎஸ், குழந்தைகளுக்கு என்ற பிரத்யேகமான ISOFIX சைல்டு சீட்ஸ் ஆகியவற்றை ஸ்டாண்டர்டு ஆப்ஷனான மாருதி நிறுவனம் வழங்குகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

7.59 லட்ச ரூபாய் என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து பிரெஸ்ஸா கார் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான விட்டாரா பிரெஸ்ஸா ZDi ப்ளஸ் ஏஎம்டி டியூயல் டோன் மாடலின் விலை 10.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்ஷன் என இரண்டு மாடல்களிலும், லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என மாருதி நிறுவனம் கூறுகிறது. இதுதவிர பிரெஸ்ஸா காரில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு வசதிகளும் அமர்க்களப்படுத்துகின்றன.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

17 இன்ச் அலாய் வீல்கள், பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் உள்ளிட்ட வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்கின்றன. இன்டீரியரில், க்ளைமேட் கண்ட்ரோல், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

மாருதி சுஸூகி நிறுவனம் ஒரு சில மாதங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்கிறது (ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 12,500) உண்மையில் இது ஒரு நம்ப முடியாத விஷயம். பெட்ரோல் வேரியண்ட் இல்லாதபோதும் கூட, இதன் வெயிட்டிங் பீரியட் 3-4 மாதங்களாக உள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விட்டாரா பிரெஸ்ஸா காரை புக்கிங் செய்தால், டெலிவரி எடுக்க 3-4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காரின் வெற்றிக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரே வார்த்தையில் சொல்வததென்றால், அது மாருதி சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்பு.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸூகி என்ற பெயரே ஓரளவுக்கு போதுமானதுதான். கார் வாங்குவது குறித்து யாரிடமாவது அறிவுரை கேட்டால், மாருதி சுஸூகி என்ற பெயரை பரிந்துரைக்க அவர்கள் சற்று கூட நேரம் எடுத்து கொள்ள மாட்டார்கள்.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விபத்துக்களில் சிக்கினால் கார் நொறுங்கி விடும், கட்டுமான தரம் குறைவு என மாருதி சுஸூகி மீது பல்வேறு குறைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இன்றும் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸூகிதான் இருக்கிறது என்றால் எப்படி?

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விட்டாரா பிரெஸ்ஸா காரின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் அதன் விலை. ரூ.7.59 லட்ச ரூபாய் முதல் ரூ.10.49 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் விட்டாரா பிரெஸ்ஸா கார் கிடைக்கிறது. இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் விட்டாரா பிரெஸ்ஸாவின் விலை குறைவு.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

ஃபோர்டு எகோ ஸ்போர்ட் ரூ.7.82 லட்சம் முதல் ரூ.11.89 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையிலும், மஹிந்திரா டியூவி300 ரூ.8.24 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விட்டாரா பிரெஸ்ஸா காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகளும், அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். இந்த காரில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. மாருதி சுஸூகி நிறுவனத்தின் டீலர்ஷிப் நெட்வொர்க்கும் கூட பிரெஸ்ஸா காரின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களும், 3,000க்கும் மேற்பட்ட சர்வீஸ் ஸ்டேஷன்களும் மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு உள்ளன. இதன்மூலமாக பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், ஊரக பகுதிகளையும் கூட மாருதி சுஸூகி கவர் செய்து விடுகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

பலினோ மற்றும் எஸ்-கிராஸ் போன்ற கார்களை மாருதி சுஸூகி நிறுவனம், நெக்ஸா என்ற தனிப்பட்ட ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்கிறது. ஆனால் விட்டாரா பிரெஸ்ஸா கார், ரெகுலர் டீலர்ஷிப்களின் மூலமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

இதன் காரணமாகவும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை ரெக்கை கட்டி பறக்கிறது. காரை வாங்கிய பிறகு நல்ல தரமான சர்வீசும் கிடைக்கிறது. அடுத்தது மைலேஜ். மாருதி சுஸூகி நிறுவனம் தனது போட்டியாளர்கள் அனைவரையும் எளிதாக வீழ்த்தும் ஒரு இடமாக இது பார்க்கப்படுகிறது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

விட்டாரா பிரெஸ்ஸா கார் லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் 20 கிலோ மீட்டருக்கும் நெருக்கமான மைலேஜை தரவல்லது இந்த காம்பேக்ட் எஸ்யூவி. 20 கிலோ மீட்டர்கள் என்றாலும், இது ஒரு அற்புதமான விஷயம்தானே.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

இந்த செக்மெண்டில் பல்வேறு போட்டியாளர்கள் புதிது புதிதாக உள்ளே நுழைந்தாலும், விட்டாரா பிரெஸ்ஸாவை நெருங்க முடியவில்லை. தொடர்ந்து பிரெஸ்ஸா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த சாதனையை படைக்க உதவிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸூகி நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.

விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி...

பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெட்ரோல் வேரியண்ட் எப்போது லான்ச் செய்யப்படும்? என்பது தொடர்பான உறுதியாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
How maruti suzuki vitara brezza becomes Indias fastest selling compact suv:Here’s why. Read in tamil
Story first published: Wednesday, July 4, 2018, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X