ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

ஹைபிரிட் கார்கள் என்பது பொதுவாக இரண்டு விதமான எரிபொருளில் இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்த கார்களின் இன்டெர்னல் கம்பஷன் என்ஜினுடன், குறைந்த பட்சம் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டராவது பிணைக்கப்

ஹைபிரிட் கார்கள் என்பது பொதுவாக இரண்டு விதமான எரிபொருளில் இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்த கார்களின் இன்டெர்னல் கம்பஷன் என்ஜினுடன், குறைந்த பட்சம் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டராவது பிணைக்கப்பட்டிருக்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

எரிபொருள் வகை, எஞ்சின் மற்றும் மின் மோட்டார் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இவை பல்வேறு வகைகளில் வடிவமைப்பு நுட்பத்தை பெற்றிருக்கின்றன. அதன்படி, ஹைப்ரிட் கார்கள் எப்படி வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை காணலாம்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

மைல்டு ஹைப்ரிட் கார் (MILD HYBRIDS):

மைல்டு ஹைபிரிட்ஸ் வாகனங்கள் பொதுவாக எரிபொருள் சிக்கனைத்தை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. இந்த மைல்டு ஹைபிரிட் வகை கார்கள் பொதுவாக பெட்ரோல் எஞ்சினுக்கு துணைபுரியும் அமைப்பாக மின் மோட்டார் கொடுக்கப்படுகிறது. இது காரில் வேகம் குறையும்போது எதிர்திசையில் சுழன்று ஜெனரேட்டராக செயல்பட்டு, பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கும். இதனால், இதனை ஐஎஸ்ஜி மோட்டார் என்று குறிப்பிடுவர்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

மேலும், மைல்டு ஹைப்ரிட் கார்களில் மின் மோட்டார் மூலமாக தனியாக காரை செலுத்த முடியாது. அதாவது, பெட்ரோல் எஞ்சின் அல்லாமல் இந்த மின் மோட்டார் தனித்து காரை இயக்க முடியாது. இருப்பினும், பெட்ரோல் எஞ்சினுக்கு அதிக சுமை ஏற்படும் சமயங்களில் இந்த மின் மோட்டார் கூடுதல் டார்க் திறனை அளித்து காரின் பிக்கப்பை உறுதி செய்வதுடன், எரிபொருள் கிரகிப்பு அளவையும் குறைக்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக, பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, கார் வேகம் எடுக்கும்போது மின் மோட்டார் கூடுதல் டார்க்கை வழங்கி சிறந்த பிக்கப்பை வழங்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

இதுதவிர, ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பத்தின் மூலமாக எரிபொருள் சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த மைல்டு ஹைப்ரிட் மூலமாக காரில் பெரிய அளவிலான பேட்டரியை பொருத்தும் அவசியம் ஏற்படாது. அதேசமயத்தில், அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த பிக்கப் மற்றும் குறைவான மாசு உமிழ்வு தன்மையை வழங்குகிறது.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

முழுமையான ஹைபிரிட் கார் (FULL HYBRID):

இதுவரை தயாரிக்கப்பட்ட ஹைபிரிட் கார்களில் முழுமையான ஹைப்ரிட் கார்கள்தான் தான் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக டொயோட்டா பிரியஸ் காரை கூறலாம். மைல்டு ஹைபிரிட்ஸ் போல் இல்லாமல் முழுமையான ஹைபிரிட் கார்கள் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இரண்டும் சேர்ந்து இயங்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

சில கார்களில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரை தனித்தனியாக இயக்க முடியும். மேலும், மின் மோட்டாரிலேயே இந்த காரை இயக்கி கொள்ள முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பாக கூறலாம்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

எலக்ட்ரிக் மோட்டாரை மட்டும் கொண்டு நாம் 30 கிமீ வேகம் வரை செல்லலாம். ஓட்டுநர் சீராக ஆக்சிலரேட்டர் கொடுத்து ஓட்டும்போது புதிய ஹைபிரிட் கார்கள் இன்னும் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த எலக்ட்ரிக் மோட்டார், என்ஜின் மற்றும் பேட்டரி மூன்றும் காரை குறைந்த வேகத்தில் செல்வதற்கு ஏற்றவாறு அமைக்கபெற்றிருக்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

இதில் உள்ள ரீஜெனெரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் அதீத சக்தி வீணாவதை தடுக்கும் ஆக்சிலரேஷன் போன்றவை பேட்டரி சார்ஜ் செய்ய தேவையான சக்தியை பெற்று தரும். இருப்பினும் முதல் முறை இந்த கோட்பாடுகளை கொண்ட காரை இயக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயணம் மிக்க திருப்தியை அளிக்காது என்றுதான் கூறவேண்டும். பெட்ரோல் எஞ்சினில் ஓட்டும்போது கிடைக்கும் அலாதி அனுபவம் ஹைப்ரிட் கார்களில் இருக்காது என்பது குறையாக சொல்லலாம்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

மேலும் இந்த வாகனத்தில் உள்ள அக்சஸரீஸ் ரேடியோ AC , மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பேட்டெரியில் இயங்குவதால் அந்த சமயத்தில் அதிக சார்ஜ் காருக்கு தேவைப்படும். இதற்கு முந்தைய மாடலான கார்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு பின் பெட்ரோல் சக்தியில் இயங்குவது இதனை விட சற்று சிறப்பான விஷயம் தான்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

அனைத்து ஹைபிரிட் வாகனங்களிலும் லித்தியம் அயன் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போர்ஷே கேயென் ஹைப்ரிட், பிஎம்டபிள்யூ ஆக்டிவ் ஹைப்ரிட் 3, 5 மற்றும் 7 சீரிஸ், மெர்டிசிஸ் பென்ஸ் இ300 புளூடெக் ஹைப்ரிட் ஆகியவை ஹைப்ரிட் கார்களுக்கு உதாரணமாக கூறலாம். இந்த லித்தியம் அயான் பேட்டரிகள் தான் லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

பிளக் இன் ஹைபிரிட் கார்கள் (PLUG IN HYBRIDS):

இந்த வகை கார்களில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் சாதாரண எலக்ட்ரிக் கார்கள் போல் இயங்கும். இந்த காரின் மின் மோட்டார் 30 முதல் 50 கிமீ வேகம் வரை மட்டுமே தனித்து இயங்கும். அதற்கு மேல் பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து ஹைப்ரிட் மாடலாக இயங்கும். 100 முதல் 130 கிமீ வேகம் வரை செல்லும்போது பெட்ரோல் எஞ்சினுக்கு மாறிக் கொள்ளும். இந்த கார்களும் எரிபொருள் சிக்கனத்தில் சிறப்பாக இருக்கும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

எஸ்ட்டெண்டெட் ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்கள் (EXTENDED RANGE ELECTRIC VEHICLE ):

EXTENDED RANGE ELECTRIC VEHICLES, RANGE EXTENDED ELECTRIC VEHICLES எனவும் அழைக்கப்படும். இது பிளக் இன் ஹைபிரிட் கார்களுக்கு ஒத்த வடிவமைப்பை பெற்றிருக்கும். இதில் பெட்ரோல் என்ஜின் சக்தி டிரான்ஸ்மிஷன் அமைப்பு மூலமாக நேரடியாக சக்கரங்களுக்கு கடத்தப்படாது. காரில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மட்டுமே பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். பேட்டரியிலிருக்கும் சார்ஜ் மூலமாக மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்களுக்கு ஆற்றல் செலுத்தப்படும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

பெட்ரோல் மோட்டார் தானாகவே பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து கொள்வதால் பழைய கார்களில் இருந்த பேட்டரி சார்ஜ் பயம் இதில் இல்லை. இருப்பினும் விலை, பவர் ஸ்டோரேஜ் போன்றவற்றால் இது சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக இதனை நேராக சார்ஜ் செய்யும் முறை கூடிய விரைவில் கருத்தில் கொள்ளப்படும்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தேவைக்கேற்ப அதன் பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ளும். பேட்டரியின் கடைசி சொட்டு சார்ஜ் உள்ளவரை இது எலக்ட்ரிக் கார் போல தான் இயங்கும். முற்றிலும் சார்ஜ் இல்லாத நேரத்தில் இது பெட்ரோல் என்ஜினை ஸ்டார்ட் செய்து காரையும் இயக்கி பேட்டரியை சார்ஜும் செய்து கொள்ளும். மறுபடியும் எலெக்ட்ரிக் வாகனம் போல் பேட்டரி கொண்டு இயங்கும். இது ஒரு சுழற்சி முறை கார்.

ஹைப்ரிட் கார்களின் வகைகளும், அவை செயல்படும் விதமும். . . !!

எல்லா ஹைபிரிட் வாகனங்களும் ஒரே வடிவமைப்பை கொண்டிருந்தாலும் உள்ளீடு தொழில்நுட்பங்கள் அதனை வேறுபடுத்த ஏதுவாய் உள்ளது. மேற்கூறியவாறு டிரைவ் ட்ரெயின் மற்றும் லெவல் ஆப் ஹைபிரிடிசேசன் கொண்டு இதனை வகைப்படுத்தியுள்ளனர். இந்த மேம்பட்ட ஹைபிரிட் வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையின் அடுத்த மைல்கற்கள். இது வாடிக்கையாளர்களுக்கு குறைத்த எரிபொருள் மற்றும் நிறைந்த திறனை அளிக்க வல்லது.

Most Read Articles
English summary
Hybrids are the types of the vehicle that comes with two different types of motors. These cars have an internal combustion engine that is paired with at least one electric motor. In general, one can classify hybrids based on drivetrain layout and the level of hybridisation. We explain how hybrids are classified based on the level of hybridisation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X