பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு

கார் வாங்கும் டீலர் சொல்லும் நிறுவனங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் பொங்கியெழுந்த சென்னை தொழில் அதிபரால் மிரண்டு போன ஹூண்டாய் கார் டீலர்கள். ஆண்டிற்கு ரூ 360 கோடி

கார் வாங்கும் டீலர் சொல்லும் நிறுவனங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் பொங்கியெழுந்த சென்னை தொழில் அதிபரால் மிரண்டு போன ஹூண்டாய் கார் டீலர்கள். ஆண்டிற்கு ரூ 360 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே படியுங்கள்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் செந்தில். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் டீலரிடம் ஹூண்டாய் வெர்னா காரை வாங்குவதற்காக புக் செய்துள்ளார்.

அவரை ஹூண்டாய் டீலர்கள் தங்களிடம் உள்ள இன்சூரன்ஸைதான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவர் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதன் படி அவர் சென்னை அண்ணாநகர் குன் ஹூண்டாய் என்ற டீலர் சார்பில் இவருக்கு கார் புக் செய்ததற்கான இன்வாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.15.20 லட்சம் மதிப்பிலான காரக்கு 73 ஆயிரம் ரூபாய் இன்சூரன்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இது குறித்து அவர் இன்சூரன்ஸ் துறையில் உள்ள தன் நண்பர் ஒருவரிடம் விசாரித்த போது இந்த காருக்கான இன்சூரன்ஸ் தொகை 53 ஆயிரம்தான் எனவும், இதன் இன்சூரன்ஸ் மதிப்பு 12 லட்சம் எனவும் குறிப்பிட்டார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

மேலும் புதிய கார்களுக்கு டீலர்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்பது இல்லை எனவும், ஆனால் இன்று டீலர்கள் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களை இவ்வாறு கட்டாயப்படுத்துகின்றனர் என்றும், தாங்கள் இதற்காக நியாயம் கேட்பதாக இருந்தால் குறைந்த விலை இன்சூரன்ஸை உங்களுக்காக நான் பெற்று தர ரெடி எனவும் தெரிவித்துள்ளார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

டீலர்களிடம் உள்ள இன்சூரன்ஸிற்கும் வெளியில் உள்ள இன்சூரன்ஸிற்கும் சுமார் 20 ஆயிரம் வித்தியாசம் வருவதால் அவர் உடனடியாக டீலரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது அவர்கள் தாங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் முழு கவர் எனவும் வெளியில் வழங்கப்படும் இன்சூரன்ஸ் முழு கவர் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

உடனடியாக இவர் இரண்டு இன்சூரன்ஸ்களையும் ஒப்பிட்டு இரண்டுமே பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்தான் என விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதன் பின்னும் டீலர்கள் இன்சூரன்ஸை கட்டாயம் தங்களிடம்தான் வாங்க வேண்டும் என்றும்,

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

வெளியில் இன்சூரன்ஸ் வாங்கினால் எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் பணத்தை கோர வேண்டிய நிலை வந்தால் டீலர் இன்சூரன்ஸில் அதை எளிதாக கோரலாம் எனவும், வெளி இன்சூரன்ஸில் பணம் கிடைப்பது சிரமம் என்று எல்லாம் சொல்லியுள்ளனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

மேலும் புதிய கார்களுக்கு கட்டாயம் டீலரிடம்தான் இன்சூரன்ஸ் பெற வேண்டும் என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் பாலிசி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

உடனடியாக செந்தில் கூகுள் மூலம் கார் இன்சூரன்ஸ் குறித்த சட்டங்களை தேடினார். அதில் எந்த காரணத்தை கொண்டும் டீலர்கள் வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தின் இன்சூரன்ஸைதான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என சட்டம் இருப்பதை கண்டுபிடித்தார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதன் பின் அவர் நேரடியாக ஹூண்டாய் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இப்படி டீலர் தன்னை அதிக விலையுள்ள இன்சூரன்ஸை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இது குறித்து கேட்டபோது ஹூண்டாய் நிறுவனத்தின் பாலிசி என பதில் அளிக்கின்றனர். ஹூண்டாய் நிறுவனத்தில் அப்படி எதுவும் பாலிசி உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதற்கு பதில் அளித்த ஹூண்டாய் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையம் அப்படி ஹூண்டாய் நிறுவனம் எந்த பாலிசியையும் குறிப்பிடவில்லை. நீங்கள் சேல்ஸ் மேனேஜரை கான்பிரன்ஸ் காலில் அழையுங்கள் நான் லைனிலேயே இருக்கிறேன் மீண்டும் இன்சூரன்ஸ் குறித்து விசாரியுங்கள். நான் லைனில் இருப்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

உடனடியாக செந்தில், சேல்ஸ் மேனேஜரை தொடர்பு கொண்டு வெளியில் குறைந்த விலையில் இன்சூரன்ஸ் பெறுவது பற்றி பேசினார். அப்பொழுதும் சேல்ஸ் மேனஜர் இது ஹூண்டாய் நிறுவனத்தின் பாலிசி எனவும் கண்டிப்பாக டீலரிடம்தான் இன்சூரன்ஸ் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இதை கேட்டு கொண்டிருந்த ஹூண்டாய் நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உடனடியாக குறுக்கிட்டு ஹூண்டாய் நிறுவனம் எந்த இடத்தில் அப்படியான பாலிசியை குறிப்பிட்டுள்ளது என கேட்டார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அப்பொழுதுதான் சேல்ஸ் மேனேஜருக்கு ஹூண்டாய் நிறுவன அதிகாரி போனில் பேசியதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தது தெரிந்தது. அதன்பின் அவர் செந்திலுக்கு அவரது விருப்பப்படியே குறைந்த விலை இன்சூரன்ஸை பெற்றுக்கொண்டு காரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதன்பின் அந்த சம்பவம் குறித்து தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்களும் கார்களை வாங்கியபோது டீலர்களின் இன்சூரன்ஸை வாங்க வைக்கப்பட்டதாகவும், அதுதான் விதி என டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்தாகவும், ஆனால் இவ்வாறு குறைந்த விலை இன்சூரன்ஸை பெற முடியும் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இது ஹூண்டாய் நிறுவன டீலர்களிடம் மட்டும் இல்லை அனைத்து ஆட்டோமொபல் விற்பனை செய்யும் டீலர்களிடமும் உள்ளது. அதனால் நீங்கள் எங்கு கார் வாங்கினாலும் குறைந்த விலை இன்சூரன்ஸ்தான் வேண்டும் டீலர் சொல்லும் அதிக விலை இன்சூரன்ஸை வாங்க முடியாது என கூறுங்கள்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 32 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதில் குறைந்த விலை இன்சூரன்ஸில் இருந்து டீலர்கள் சொல்லும் இன்சூரன்ஸின் விலை குறைந்தது ரூ.10 ஆயிரம் இருக்கும். என்றாலும் கடந்தாண்டு மட்டும் ரூ.320 கோடி மக்கள் பணம் டீலர்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்ற ஒன்றை பொய்யால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதாவது ஒவ்வொரு மாதமும் இந்தியர்களிடம் இருந்து சுமார் குறைந்தது 26 கோடி ரூபாயை கொள்ளை லாபமாக டீலர்களும், டீலர்களிடம் ரகசிய ஒப்பந்தம் வைத்திருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கொள்ளை அடித்து வருகின்றனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இது வெறும் கார் விற்பனையில்உள்ள கணக்குதான். இது போக கமர்ஷியல் வாகனங்கள், விவசாய வாகனங்கள், டுவீலர்கள் என பல வாகன விற்பனைகள் உள்ளன. அது எல்லாம் சேர்ந்தால் இந்தியாவில் வாகன விற்பனையில் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ஆண்டிற்கு ஆயிரம் கோடிகளில் முறைகேடு நடக்கலாம் என தெரிகிறது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இப்படி டீலர்களிடம் தான் நாம் ஏமாந்தது போகிறோம் என்றால் பல நேரங்களில் நம்மிடமே நாம் ஏமாந்து போகிறோம். ஆம்..!

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

கார் வாங்குபவர்களில் 10ல் 4 பேர் தான் காரை தினமும் பயன்படுத்துகின்றனர். மற்ற 60 சதவீதம் பேர் காருக்காக அவர்கள் செலுத்தும் தொகையின் அளவிற்கு அவர்கள் காரை பயன்படுத்துவதில்லை.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

நீங்கள் சுமார் 12 லட்ச ரூபாய் காரை இஎம்ஐ-ல் எடுத்தால் அதற்காக மாதம் சுமார் 25 ஆயிரம் இஎம்ஐ செலுத்த வேண்டும். இது ஆண்டிற்கு சுமார் 3 லட்சம் என கணக்காகிறது. இது போக நீங்கள் பெட்ரோல்/டீசல் செலவு, இன்சூரன்ஸ், தேய்மான செலவு, சர்வீஸ் செலவு என அதிகம் செலவாகும்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

நீங்கள் புதிய காரை வாங்கி சுமார் 20 ஆயிரம் கி.மீ பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான பெட்ரோல் செலவிற்கு மாதம் 11 ஆயிரம் என கணக்கிட்டு ஆண்டிற்கு ரூ.1. 33 லட்சம், இன்சூரன்ஸிற்காக ஆண்டிற்கு 40 ஆயிரம், 10 சதவீத தேய்மான செலவு என கணக்கிட்டு 1.20 லட்சம், சர்வீஸ் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் என இதை எல்லாம் மாத செலவாக பிரித்தால் மாதம் 25,933 வருகிறது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

ஏற்கனவே காருக்காக நீங்கள் கட்டும் 25 ஆயிரத்துடன் இந்த 25,933 சேர்த்தால் நீங்கள் மாதம் உங்கள் காருக்காக செலவு செய்யும் பணம் என்பது ரூ.50,933 ஆகும். இந்த கணக்கு நீங்கள் வாங்கும் காரின் மாடலையும் விலையையும் பொறுத்து மாறுபடலாம்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கு படி நீங்கள் செலவு செய்தால் ஆண்டிற்கு 6,35,196 ரூபாய் நீங்கள் காருக்காக கட்டாயம் செலவு செய்ய வேண்டியது வரும். இதை நீங்கள் பயன்படுத்திய கி.மீ. உடன் வகுத்தால் உங்களுக்கு தலையே சுற்றி விடும்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

நீங்கள் 30 ஆயிரம் கி.மீ. பயணித்திருக்கும் பட்சத்தில் ரூ.21 ஒரு கி.மீ பயணத்திற்காக நீங்கள் செலவு செய்துள்ளீர்கள். இதேபோல 25 ஆயிரம் கி.மீ. க்கு ரூ.25, 20 ஆயிரம் கி.மீ. ரூ.31, 15 ஆயிரம் கிமீக்கு ரூ.42, 10 ஆயிரம் கி.மீக்கு ரூ.63, 8 ஆயிரம் கி.மீக்கு ரூ.79, 5 ஆயிரம் கி.மீக்கு ரூ 127 என செலவாகிறது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அதிகபட்சமாக நீங்கள் ஆண்டிற்கு 30 ஆயிரம் கி.மீ., பயணம் செய்தாலே உங்களுக்கு கி.மீ ரூ 21 செலவாகிறது. வாடகைக்கு கார்களை எடுத்தால் கூட அதை விட செலவு குறைவு தான். அதாவது நீங்கள் சராசரியாக தினமும் 83 கி.மீ. பயணித்தாலும் உங்களுக்கு காருக்கான அவசியம் பெரிதாக இல்லை. நீங்கள் வாடகை காரிலேயே குறைந்த செலவில் பயணிக்கலாம்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இது மட்டும் அல்ல கார் வாங்குவதில் 50 சதவீதமானோர் காரை சுத்தப்படுத்துவதில்லை. காரை சுத்தப்படுத்துபவர்களில் 10 சதவீம் மட்டுமே காரின் உட்புறங்களை சுத்தப்படுத்துகின்றனர். மேலே உள்ள கணக்கில் காரை சுத்தப்படுத்தும் செலவுகள் சேர்க்கப்படவில்லை. அதை சேர்த்தால் அதன் கார் பராமரிப்பு விலை இன்னும் அதிகரிக்கும்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இது மட்டும் அல்லது புதிதாக கார் வாங்கியவர் தங்கள் கார் சீட்டின் கவரையே பிரிக்காமல் பயன்படுத்துகின்றனர். கார் தயாரிக்கும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினர் பார்த்து பார்த்து உங்களுக்கான சொகுசான சீட்டை தயார் செய்தாலும் அதை பயன்படுத்துவதில்லை. அப்படி என்றால் நாம் கொடுக்கும் காசிற்கு வரும் வசதியை கூட நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

அவர் பதிவிட்டுள்ளதன் படி இந்தியாவில் பெரும்பான்மையான ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் டீலர்கள் அவர்களிடம்தான் இன்சூரன்ஸை வாங்க வேண்டும் என வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இது சட்டத்திற்கு முரணான ஒன்று. இவர் எந்த கார் டீலரிடம் இந்த பிரச்னை நடந்தது என்பதை தன் பதிவில் குறிப்பிடவில்லை.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

பலர் டீலர்கள் சொல்வது உண்மைதான் எனவும், சிலர் டீலர் சொல்வது பொய் என தெரிந்து வேறு வழியில்லாமலோ அல்லது அவர்களுடன் பிரச்னை ஏற்படுத்த விரும்பாமலோ டீலர்களுடன் ரகசிய ஒப்பந்தத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமே இன்சூரன்ஸை பெறுகின்றனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

வெகு சிலர் மட்டுமே இது குறித்து விளக்கம் கேட்டு சரியான பாதையில் செல்கின்றனர். இதற்காக செந்திலை கட்டாயம் நாம் பாராட்டலாம்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

டீலர்கள் இவ்வாறு நம்மை கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிந்தும் டீலர் சொல்படி வாடிக்கையாகளர்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் டீலர்களிடம் பிரச்னை செய்தால் அவர்கள் கார் சர்வீஸிற்கு வரும் போது சர்வீஸை சரியாக செய்யமாட்டார்கள் என்ற பயம்தான் என பலர் சொல்கின்றனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

கார் தயாரிப்பு நிறுவனங்களின் விதி என்ற பெயரிலேயே இந்த முறைகேடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாவே சிலர் வாகனம் வாங்கும் எண்ணத்தையே கைவிட்டுள்ளனர்.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

கார் தயாரிப்பு நிறுவனங்கள் இது குறித்து தீவிரமான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை. பல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது குறித்து பலர் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பணத்தை ஏமாற்ற முயன்ற ஹூண்டாய் டீலருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்..! ஆண்டிற்கு ரூ.360 கோடி முறைகேடு அம்பலம்..!

இந்த பிரச்னையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணமே இதன் காரணமாக குறைந்து போக கூட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Hyundai dealer forced customer to get car insurance with them. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X